சர்வதேச தொழிலாளர் தினம்

சர்வதேச தொழிலாளர் தினம் இன்று(01) கொண்டாடப்படுகிறது.

1886ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி அமெரிக்காவின் சிக்காகோ நகரில் கூடிய தொழிலாளர்கள் வேலைநேரத்தில் 8 மணித்தியாலமாக வரையறுக்குமாறு கோரி முழக்கமிட்டனர்.

பணிப்பகிஷ்கரிப்புடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த பேராட்டத்தில் முதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இணைந்ததுடன் மூன்றாவது நாளில் அந்த எண்ணிக்கை 65,000 ஆக அதிகரித்தது.

1886 ஆம் ஆண்டு மே மாதம் 3ஆம் திகதி போராட்டத்தின் தீர்மானமிக்க தருணம்.

முதலாளிமாரின் வழிநடத்தலில் ஆயுதம் தாங்கிய பொலிஸார் தொழிலாளர்கள் மீது நடத்திய தாக்குதலில் 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதலை கண்டித்து மே மாதம் 4ஆம் திகதி தொழிலாளர்கள் ஹேமார்கட் சதுக்கத்தில் அணி திரண்டனர்.

பொலிஸார் மற்றும் தொழிலாளர்களுக்கு இடையில் வாக்குவாதம் இடம்பெற்றுக் கொண்டிருக்கையில், நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் உயிரிழந்தார்.

இந்த போராட்டம் மோதலாக உருவெடுத்ததுடன் 6 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பலியானதை அடுத்து அது மேலும் உக்கிரமடைந்தது.

இந்த மோதலில் பலியான தொழிலாளர்களின் எண்ணிக்கையை இன்றும் உறுதியாக கூற முடியாது.

போராட்டத்தை முன்னின்று நடத்திய தொழிலாளர் தலைவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இவர்களுக்கு தூக்குத்தண்டனை, சிறைத்தண்டனை, ஆயுள் தண்டனை என தண்டனைகள் விதிக்கப்பட்டிருந்தன.

8 மணித்தியால கடமை நேரத்திற்காக போராடி உயிர்த்தியாகம் செய்த தமது சகாக்களை எப்போதும் நினைவுகூரவேண்டும் என சர்வதேச தொழிலாளர் அமைச்சு 1889ஆம் ஆண்டு தீர்மானித்தது.

அதற்கமைய ஒவ்வொரு வருடமும் மே மாதம் முதலாம் திகதி சர்வதேச தொழிலாளர் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.

தொழிலாளர் உலகில் முதலாளித் திட்டம் ஏற்பட்டது முதல் 8மணி நேரம் மாத்திரமல்ல, அவர்கள் உழைத்து வந்தது 10மணி நேரம், 12 மணி நேரம், 16 மணி நேரம் ஊண் உறக்கமின்றி உழைத்து வந்திருக்கின்றார்கள். சுரங்கங்களிலும், குன்றின் மேற்களிலும், புயல் காற்றிலும், பெரும் வெள்ளத்திலும் உழைத்து வருகின்றார்கள் . தொழிலாளர்களில் முதியோர் மாத்திரமல்ல, சிறு குழந்தைகளும் தூங்க வேண்டிய இரவிலும் உழைத்து வருகின்றனர்.

உலகில் உயிர் முளைத்த கால முதல், கஷ்டமும் தியாகமும் அவ்வுயிர்களுடன் கலந்தேயிருக்கின்றன.

இது பிரபஞ்ச வாழ்க்கையிலொன்றாகும். கஷ்டமில்லாமல் தியாகமில்லாமல் ஒன்றும் கை கூடுவதாகவில்லை. உலகத்தின் மேல் நடப்பது, பெரும்பான்மை மக்களுக்கு முள் கம்பளத்தின் மேல் நடப்பதைப் போல் ஒத்திருக்கின்றது.

முள் கம்பளத்தின் மேல் நடக்க யாருக்குத்தான் மனம் வரும்? ஆனால் அக்கம்பளத்தின் மேல் நடந்தால்தான், சுகப் பேற்றையடைய முடிகின்றது. இதைத்தான் தொழிலாளர் இயக்கத்துக்கு ஆசானாகிய காரல் மார்க்ஸ்  சமதர்மத்தின்  முரண் என்பார். கஷ்டமில்லாமல் சுகமில்லை. சுகமும் கஷ்டமில்லாமல் கிடைப்பதில்லை. இதுதான் சமதர்மத் தத்துவத்தின் முரண்பாடு. பொது உடைமைக்காரர் யாராகிலும், இந்தப் பிரபஞ்ச முரண்பாட்டை அலட்சியம் செய்ய முடியாது. சோஷலிஸ்ட் அனைவரும் இந்த பிரபஞ்ச முரண்பாட்டை அடிப்படையாக வைத்து தங்கள் தத்துவத்தைக் கட்ட வேண்டும். சுதந்திரம் வேண்டுமானாலும், ஸகோதர தத்துவம் வேண்டுமானாலும், சரிசம தத்துவம் வேண்டுமானாலும் தியாகத்தால் தான் அடைய முடியும்.

இந்த மே தின ஞாபகம் ஏகாதிபத்திய ஆட்சிக்கல்ல, செல்வத்திற்கும் சம்பளத்திற்குமல்ல, கொடுங்கோன்மைக்குமல்ல, உலக மக்களனைவரும் உண்டு உடுக்கவும், இருந்து வாழவும், சந்ததி விருத்தி செய்யவும், அந்த சந்ததியார் உலக சுகப் பேற்றை பெறவும் செய்யும் தியாகமாகும்.

தற்போது உலகம் பலவித இடுக்கண்களால் கஷ்டப்பட்டு வருகின்றது. இல்லாமையும் வறுமையும், பஞ்சமும், வெள்ளமும் உலகை ஒருபுறம் வருத்தி வர கொடுங்கோன்மைக் கட்சிகளாலும், முதலாளிகளின் அட்டூழியத்தாலும், வறுமையாலும் உலக நெருக்கடி அதிகரிக்கும் போலும்! உலகம் பிற்போக்கால் ரொம்பவும் கஷ்டப்பட வேண்டிவரும் போலும் உலக நெருக்கடி குறைந்த பாடில்லை. சேனைத் தளங்கள் உலகில் அதிகரித்து வருகின்றன. மகாயுத்தத்தின் முன்னிருந்த சேனைத்தளங்களைவிட எண்மடங்கு அதிகரித்திருக்கின்றன.

உலக சமாதானத்தை நிலைக்க வைக்க வலிமை தொழிலாளர்களாவர். இவர்கள்தான் அகில உலகப் போரை நிறுத்த வல்லவர். இவர்களுக்கு வேண்டியதொன்றே. அதாவது, அகில உலகத் தோழர்கள் ஒற்றுமைப்பட்டு சுகத்திலும், துக்கத்திலும் ஒன்றுபட்டு வாழ வேண்டியதொன்றே. இந்த ஒற்றுமைக்காக உலகத் தொழிலாளர் பல்லாண்டுதோறும் பட்ட கஷ்ட நிஷ்டூரங்களை யெல்லாம் ஞாபகப்படுத்தும் தினம் மே மாதம் முதல் திகதியாகும்.

canada11

எங்களால் தொழிலை நடத்த முடியவில்லை’: அமெரிக்க வரி- கனடிய நிறுவனங்கள் கவலை

August 25, 2026

னடா மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் முறிந்ததைத் தொடர்ந்து, புதிய அமெரிக்க இறக்குமதி வரிகள் அமலுக்கு வந்துள்ளதால், கனடிய

f066efba-3700-4f05-b1b4-98f7f0f69090

வரிகளால் ‘பாதிப்பு ஏற்படும்’, ஆனால் டொராண்டோ மீண்டுவரும்: மேயர் ஆலிவியா சௌ தெரிவிப்பு

August 25, 2026

கனடா மீது விதிக்கப்பட்டுள்ள புதிய வரிகள் “பாதிப்பை ஏற்படுத்தும்” என்று டொராண்டோ மேயர் ஆலிவியா சௌ (Olivia Chow) தெரிவித்துள்ளார்,

us canada

அமெரிக்காவிற்கு எதிராக கனடா செவ்வாய்க்கிழமை பதிலடி வரிகளை அறிவிக்கவுள்ளது

August 25, 2026

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் 50 சதவீத இறக்குமதி வரிகள் அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து, அமெரிக்காவிற்கு எதிராக கனடா தனது

IMG_20230726_150840_268 copy

போராட்டத்தை கைவிடப் பால் உற்பத்தியாளர் சங்கத்திற்குத் தமிழக அரசு கடிதம்

August 25, 2026

சென்னை: பேச்சுவார்த்தைக்கு அழைப்பு பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரிப் பால் உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ள போராட்டம் மற்றும் அவர்களது கோரிக்கைகள்

images (10)

மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 வழங்காதது ஏன்? – பிரேமலதா விஜயகாந்த் கேள்வி

August 25, 2026

சென்னை: வறுமை ஒழிப்பு தின நிகழ்ச்சி தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்தின் பிறந்த நாளை அவரது கட்சியினர் ஒவ்வொரு ஆண்டும்

kerar-87781787577431

“அது நான்தான், அமைச்சர் கீர்த்தனா இல்லை!” – வைரல் வீடியோ பெண் விளக்கம்

August 25, 2026

சென்னை: சர்ச்சையை ஏற்படுத்திய வைரல் வீடியோ சமூக வலைதளங்களில் தமிழக அமைச்சர் கீர்த்தனா எனத் தவறாகக் கூறி, மேலைநாட்டு உடையில்

minister-sekar-babu

“முருகப்பெருமானே தி.மு.க.வுக்கு வாக்களிப்பார்!” – சேகர்பாபு எம்.எல்.ஏ.

August 25, 2026

சென்னை: அரசியலுக்கு ஆண்டவனைப் பயன்படுத்துவதில்லை சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க. எம்.எல்.ஏ.வும், முன்னாள் அறநிலையத்துறை அமைச்சருமான சேகர்பாபு,

images - 2026-08-25T094725.133

பள்ளி, கல்லூரி கட்டடங்களில் இனி 3 வகையான ஸ்டிக்கர்: ஆதவ் அர்ஜுனா அறிவிப்பு!

August 25, 2026

சென்னை: சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை விவாதம் சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று (ஆகஸ்ட்

images - 2026-08-25T094908.235

மகளிர் இலவச பயணத்திட்ட விரிவாக்கம்: பா.ம.க. எம்.எல்.ஏ. சவுமியா அன்புமணி வரவேற்பு!

August 25, 2026

சென்னை: ‘வெற்றிப் பயணம்’ திட்டம் விரிவாக்கம் தமிழகத்தில் ‘வெற்றிப் பயணம்’ என்ற பெயரில் செயல்படுத்தப்பட உள்ள மகளிர் கட்டணமில்லாப் பயணத்

images - 2026-08-25T093908.642

அறிவாலயத்திற்கு வெள்ளை அடித்து வாடகைக்கு விடவேண்டுமா? கொந்தளித்த ஆ.ராசா

August 25, 2026

சென்னை: அமைச்சரின் பேச்சும் ஆ.ராசாவின் விமர்சனமும் காருக்கு தேசியக்கொடி வந்துவிட்ட காரணத்தால், அறிவாலயத்திற்கு வெள்ளை அடித்து வாடகைக்கு விடலாம் என

bharathiraja-rajmohan-2026-08-24-20-55-52

பாரதிராஜாவுக்குத் தேனியில் மணிமண்டபம்: அமைச்சர் ராஜ்மோகன் முக்கிய அறிவிப்புகள்!

August 25, 2026

சென்னை: ரூ.2.50 கோடியில் இயக்குநர் இமயம் பாரதிராஜாவுக்குத் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் தேனியில் அமைக்கப்படும் எனத் தமிழ் வளர்ச்சி

dailythanthi_2026-08-24_146dsz5y_Anbil-mahesh copy

அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார்: அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்!

August 25, 2026

சென்னை: லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளிக்க முடிவு முந்தைய ஆட்சிக் காலத்தில் பள்ளிக் கல்வித் துறைக்கு லஞ்சம் கொடுத்ததாக