சம்பளமற்ற விடுமுறைகள் இடைநிறுத்தம்

அரச உத்தியோகத்தர்களுக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சம்பளமற்ற விடுமுறைகளை அங்கீகரிப்பதை உடன் அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்துவதற்கு பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தீர்மானித்துள்ளது.

நவம்பர் மாதம் 24 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக, அது தொடர்பான சுற்றறிக்கையை வெளியிட்டு பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எஸ். ஆலோக்க பண்டார அறிவித்துள்ளார்.

அதற்கமைய புதிய விடுமுறை விண்ணப்பங்கள் அல்லது விடுமுறை நீடிப்பு விண்ணப்பங்களை பொறுப்பேற்பதை உடன் அமுலுக்கு வரும் வகையில் நிறுத்த வேண்டும் என அமைச்சின் செயலாளர், அனைத்து அமைச்சு செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கு குறித்த சுற்றறிக்கையின் மூலம் அறிவித்துள்ளார்.

சிரேஷ்டத்துவம் மற்றும் ஓய்வூதியத்திற்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் அரச உத்தியோகத்தர்களுக்கு அதிகபட்சம் 5 வருடங்களுக்கு உட்பட்டு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சம்பளமற்ற விடுமுறைகளை பெற்றுக்கொள்ள சந்தர்ப்பம் வழங்கி, 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 22 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் பொது நிர்வாக சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும் அமைச்சரவை தீர்மானத்திற்கு அமைய, அந்தச் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ஏற்பாடுகளின் கீழ் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விடுமுறைகளை அங்கீகரிப்பதை உடன் அமுலுக்கு வரும் வகையில் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேவேளை தற்போது உள்நாட்டு, வெளிநாட்டு விடுமுறையில் உள்ள உத்தியோகத்தர்களுக்கு, அங்கீகரிக்கப்பட்டுள்ள கால எல்லைக்கு அமைவாக மாத்திரம் அந்த விடுமுறையைத் தொடர்ந்து பெற்றுக்கொள்ள முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுவரையில் விடுமுறைக்கான அனுமதியைப் பெற்று, அந்த விடுமுறையைக் கழிக்கத் தயாராக இருக்கும் உத்தியோகத்தர்களுக்கு, அங்கீகரிக்கப்பட்டுள்ள காலப்பகுதிக்கு அமைய விடுமுறையைப் பெற்றுக்கொள்ளும் சாத்தியம் உள்ளதாக பொது நிர்வாக அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வெளிநாட்டு விடுமுறையைப் பெற்றுக்கொள்வதற்காக தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள, அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்த புதிய விடுமுறை விண்ணப்பங்கள் மற்றும் விடுமுறை நீடிப்பு விண்ணப்பங்களுக்குப் புதிய சுற்றறிக்கையினால் பாதிப்பு ஏற்படாது. அதேவேளை தேவைகளைப் பூர்த்தி செய்யாத மற்றும் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்களில் குறைபாடுகள் உள்ள விடுமுறை விண்ணப்பங்கள் மீள்பரிசீலனை இன்றி நிராகரிக்கப்படும் என சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் உள்நாட்டு விடுமுறைக்காகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ள விடுமுறை விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என பொது நிர்வாக அமைச்சு வெளியிட்டுள்ள புதிய சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

hind

தி.மு.க., அரசின் இரட்டை வேடத்தை கண்டித்து தமிழகம் முழுதும் ஆர்ப்பாட்டம்

December 6, 2025

தி.மு.க., அரசின் இரட்டை வேடத்தை கண்டித்து, தமிழகம் முழுதும் நாளை(டிச.,7) போராட்டம் நடத்த உள்ளதாக, ஹிந்து முன்னணி மாநில தலைவர்

isro

நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டத்தை, வரும் 2040ல் இந்தியா செய்து முடிக்கும்!

December 6, 2025

“நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டத்தை, வரும் 2040ல் இந்தியா செய்து முடிக்கும்,” என, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவின்

pi

சாலைகளில் பிச்சை எடுக்க குழந்தைகளை பயன்படுத்துவதைத் தடுக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவு

December 6, 2025

‘சாலைகளில் பிச்சை எடுக்க குழந்தைகளை பயன்படுத்துவதைத் தடுக்க, உரிய நடைமுறைகளை வகுக்க வேண்டும்’ என, தமிழக அரசுக்கு, சென்னை உயர்

amb

அம்பேத்கர் நினைவு தினம் அனுஷ்டிப்பு

December 6, 2025

அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு, பார்லியில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன்,

anu

மக்களின் வாழ்க்கையை மீட்டெடுப்பதில் ஒருங்கிணைந்த பொறிமுறை தேவை – ஜனாதிபதி

December 6, 2025

ஒரு அனர்த்தத்திற்குப் பிறகு மக்களின் வாழ்க்கையை மீட்டெடுப்பதில், சாதாரண அரசு இயந்திரங்களுக்கு அப்பாற்பட்ட ஒருங்கிணைந்த செயல்பாட்டு பொறிமுறை தேவை என்று

nat

2,000 மலைகளில் அறிவியல் ஆய்வு

December 6, 2025

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம், மத்திய சபரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் உள்ள கிட்டத்தட்ட 2,000 மலைகளில் விரிவான அறிவியல்

jai

யாழ்ப்பாணத்தில் சைக்கிள் திருட்டில் நால்வர் கைது

December 6, 2025

யாழ்ப்பாணத்தில் சைக்கிள்களை திருடி வந்த கும்பலை சேர்ந்த நால்வர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ். நகர் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த

minnal

வானிலையில் ஏற்படும் மாற்றம்

December 6, 2025

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று (06) மாலை 4.00 மணிக்கு வெளியிடப்பட்ட அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான வானிலை முன்னறிவிப்பின் படி, வடக்கு,

tn

பெருந்தொகையான நிவாரணப் பொருட்களை இலங்கைக்கு அனுப்புகிறது தமிழக அரசு!

December 6, 2025

‘டித்வா’ புயலால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகளால் கடுமையாக பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு உதவுவதற்காக தமிழக அரசு பெருந்தொகையான நிவாரணப்

ve

வெலிமடை- நுவரெலியா வீதி போக்குவரத்திற்காக மீண்டும் திறப்பு

December 6, 2025

நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலை காரணமாக மூடப்பட்டிருந்த வெலிமடை- நுவரெலியா வீதி இன்று சனிக்கிழமை (06) மீண்டும் போக்குவரத்திற்காக திறக்கப்பட்டுள்ளதாக

mooth

மூதூரில் பிரதான குடிநீர் குழாயை இணைக்கும் நடவடிக்கை

December 6, 2025

மூதூர் – நீலாபொல பகுதியில் இருந்து மூதூர் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு நீரை கொண்டு செல்கின்ற பாரிய குழாயானது அண்மையில்

Government

சம்பளமற்ற விடுமுறைகள் இடைநிறுத்தம்

December 6, 2025

அரச உத்தியோகத்தர்களுக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சம்பளமற்ற விடுமுறைகளை அங்கீகரிப்பதை உடன் அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்துவதற்கு பொது நிர்வாக,