சட்டப்பேரவையில் செல்போனைப் பார்த்து குறிப்புகளை வாசித்த அமைச்சர் ஷாஜகான்! சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் எச்சரிக்கை!

சென்னை
சட்டப்பேரவையில் விவாதத்தின்போது செல்போனைப் பார்த்து குறிப்புகளை வாசித்த அமைச்சர் ஷாஜகானை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் எச்சரித்த நிகழ்வு அவையில் முக்கியத்துவத்தைப் பெற்றது.
தமிழ்த்தாய் வாழ்த்து தனித்தீர்மானம்:
தமிழ்நாட்டில் நடைபெறும் அனைத்து விதமான அரசு விழாக்களிலும் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாடுவதை உறுதிச் செய்யும் வகையில், சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்று (ஆகஸ்ட் 10) தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பான தனித்தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் பேரவையில் கொண்டு வந்தார்.
தொடர்ந்து, இத்தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றுத் தங்களது ஆதரவைத் தெரிவித்திருந்தனர். அந்த வகையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் உறுப்பினரும், அமைச்சருமான ஷாஜகான், தனது தொலைபேசியில் பதிவுச் செய்யப்பட்டிருந்த குறிப்புகளைப் பார்த்துத் தனது உரையை வாசித்தார்.
காயிதே மில்லத் வழியில் ஆதரவு – அமைச்சர் ஷாஜகான் உரை:
அப்போது அவர் பேசுகையில், “இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் தமிழ்த்தாய் வாழ்த்து தீர்மானத்திற்கு ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறேன். பல்வேறு கட்சிகள், பொதுத்துறை நிறுவனங்கள், புதிய அமைப்புகளின் நிகழ்ச்சிகள் தொடங்குவதற்கு முன்பு தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் முதலில் பாடப்பட வேண்டும் என்ற இந்தத் தீர்மானத்தை, நான் சார்ந்திருக்கக்கூடிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இயக்கத்தின் சார்பில் மனமார வரவேற்கிறேன்.
அரசியல் நிர்ணய சபையில் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியபோது, இந்தியாவின் ஆட்சி மொழியாக எந்த மொழியை உறுதிச் செய்யலாம் என்ற விவாதம் நடைபெற்றது. அப்போது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மகத்தான தலைவர் கண்ணியமிகு காயிதே மில்லத், இந்தியாவின் ஆட்சி மொழியாகத் தமிழ்தான் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார். அந்த அடிப்படையில், காயிதே மில்லத் வழிவந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நாங்களும் இந்தத் தீர்மானத்தை வழிமொழிகிறோம்.
உலகின் தொன்மையான மொழி தமிழ்:
உலகின் தொன்மையான மொழிகளாகக் கருதப்படும் கிரேக்கம், லத்தீன், ஹீப்ரு, சீனம், சமஸ்கிருதம், தமிழ் ஆகிய மொழிகளில் தொன்மையான மொழியாகத் தமிழ் சிறப்பிக்கப்படுகிறது. உலக மொழிகளுக்கெல்லாம் தாய்மொழியாகத் தமிழைப் போற்றும் பெருமை நமக்கு உண்டு.
மொழி உணர்வைப் பிரதிபலிக்கும் வகையில், ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்ற அடிப்படையில் பல்வேறு மொழிகளைப் பேசக்கூடிய மக்களும், பல்வேறு மதங்களைப் பின்பற்றக்கூடிய மக்களும் வாழும் இந்த நாட்டில், அவர்களின் உணர்வுகளை மதிக்கும் வகையில் ஒன்றிய அரசு அனுப்பிய சுற்றறிக்கைக்கு இணங்க, தமிழ்த்தாய் வாழ்த்தை நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் முதலில் பாட வேண்டும் என்ற முதலமைச்சர் கொண்டு வந்துள்ள இந்தத் தீர்மானத்தை ஆதரித்து வழிமொழிகிறேன்” எனத் தெரிவித்தார்.
செல்போன் பயன்பாடு விதிகளுக்கு முரணானது – சபாநாயகர் எச்சரிக்கை:
இதையடுத்துப் பேசிய சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற கூட்டத்தின்போது, சட்டப்பேரவை விதிகளின்படி செல்போனை உள்ளே கொண்டு வரக்கூடாது என உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும் அவர் கூறுகையில், “சம்மந்தப்பட்ட உறுப்பினருக்கு மட்டுமல்லாமல், மற்ற உறுப்பினர்களுக்கும் தெரிவிக்கிறேன். சட்டப்பேரவைக்குள் செல்போனைக் கொண்டு வரக்கூடாது என்று விதி உள்ளது. செல்போனை வைத்துப் படிப்பதும், அதனைப் பயன்படுத்துவதும் சட்டப்பேரவை விதிகளுக்கு முரணானது. எனவே, இனி சட்டப்பேரவைக்கு வரும்போது இந்த விதியை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
#TNAssembly #SpeakerJCDPrabhakar #MinisterShahjahan #IUML #TamilThaiVaazhthu #ChiefMinisterVijay #ThalapathyVijay #TVKGovernment #TamilNaduNews #Chennai #TNPolitics #ViralNewsTN #TrendingTN #LatestNewsTN #TNNewsUpdates
3

“அவதூறு பேசிய மிருக குணப் பேச்சுக்கு மக்கள் தகுந்த பதிலடி!” – இடைத்தேர்தல் வெற்றி குறித்து முதல்வர் விஜய் அறிக்கை!

October 9, 2026

சென்னை: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, அவதூறு பேசிய மிருக குணப் பேச்சுக்கு மக்கள் தகுந்த பதிலடியைத் தந்துள்ளதாக

2

“கொத்து புரோட்டா போட்டுவிட்டார்கள் மக்கள்!” – தவெக வெற்றியை விமர்சித்து மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு!

October 9, 2026

சென்னை: ஐந்து நிமிடம் பேசினாலே கொத்து புரோட்டா போட்டுவிடுவார் என்று சொல்லப்பட்டவரை நான்கு நாட்கள் கொளுத்தும் வெயிலில் அலைய வைத்துக்

dailythanthi_2026-10-09_tw4n5oic_Untitled-6

“இடைத்தேர்தல் மாபெரும் வெற்றி!” – அமைச்சர்களுடன் வைரல் சைகை காட்டி முதலமைச்சர் விஜய் உற்சாகக் கொண்டாட்டம்!

October 9, 2026

சென்னை: தமிழ்நாட்டில் நடைபெற்ற மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வெற்றியை முதலமைச்சர் விஜய் தனது அமைச்சர்களுடன் வைரல்

556

மதுபானசாலை அனுமதிக்கு எதிராக வலி. வடக்கில் போராட்டம்

October 9, 2026

மதுபானசாலைகளற்ற பிரதேசமாகக் காணப்படும் வலி. வடக்கில் புதிய மதுபானசாலைக்கு அனுமதி வழங்கப்படுவதை எதிர்த்து, பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் கண்டனப் பேரணி

brand

பிராட் பிராட்ஃபோர்ட் திட்டத்துக்கு ஒலிவியா சௌ மற்றும் போக்குவரத்து ஆர்வலர்கள் எதிர்ப்பு?

October 9, 2026

ஸ்கார்பரோவின் 12 கி.மீ பிரத்யேக பேருந்து தடங்களை நீக்க பிராட் பிராட்ஃபோர்ட் திட்டம்: ஒலிவியா சௌ மற்றும் போக்குவரத்து ஆர்வலர்கள்

dailythanthi_2026-10-09_2ehwx7wk_shivan (1)

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் த.வெ.க. அபார வெற்றி!” – 4 மாத ஆட்சிக்குக் கிடைத்த வெற்றி என அமைச்சர்கள் பெருமிதம்!

October 9, 2026

சென்னை: மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர்களை வீழ்த்தி த.வெ.க. வேட்பாளர்கள் அபார வெற்றி பெற்றுள்ளனர்.

images (1)

நவநீதம்பிள்ளைக்கு நோபல் பரிசு: போர்க்குற்றங்கள் இனப்படுகொலைகளுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்தார்

October 9, 2026

2026ம் ஆண்டிற்கான சமாதானத்திற்கான நோபல் பரிசு மனித உரிமைகள் மற்றும் சர்வதேச சட்டத்தினை பாதுகாப்பதற்காக தளர்வின்றி போராடியமைக்காக ஐக்கியநாடுகள் முன்னாள்

hindutamil_import_hindu_uploads_news_2023_07_22_xlarge_1061734

“மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறைவு!” – வெளியே தெரிந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நந்தி சிலை!

October 9, 2026

சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறைவாக உள்ளதால் ஜலகண்டேஸ்வரர் கோயில் நந்தி சிலை வெளியே தெரியத் தொடங்கியுள்ளது.

vikatan_2024-10-04_jsw1i91t_WhatsApp-Image-2023-12-26-at-1.12.38-PM

“சாலைகளில் ரத்த ஆறு ஓடுகிறது… விஜய் ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது!” – எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு!

October 9, 2026

சென்னை: முதல்-அமைச்சர் விஜய் ஆட்சியில் கடந்த ஐந்து மாதங்களாகச் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

2

“நிரந்தர முதல்-அமைச்சராக விஜய் இருப்பார்!” – அமைச்சர் என்.ஆனந்த் அதிரடிப் பேச்சு!

October 9, 2026

சென்னை: சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் மண்டல மாநாட்டில் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர்

parliment

உயர் நீதிமன்றத் தீர்மானம் அறிவிப்பு!

October 9, 2026

நச்சுக்கள், அபின்கள் மற்றும் ஆபத்தான மருந்துகள் கட்டளைச் சட்டத்தின் இரண்டு திருத்தச் சட்டமூலங்களையும் சாதாரண பெரும்பான்மையால் நிறைவேற்ற முடியும் என

thu

சட்டத்தை நடைமுறைப்படுத்துவது என்ற பெயரில் புத்தசாசனத்தின் கௌரவத்தைச் சீர்குலைக்க முடியாது!

October 9, 2026

சிறைச்சாலையிலுள்ள கலபொடஅத்தே ஞானசார தேரரின் துறவற ஆடையை அகற்றி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய சம்பவமானது மிகவும் பாரதூரமானது என ‘தேசத்தைக் காக்கும்