சென்னை:
தமிழக அரசியலில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக, முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு, இன்று சட்டமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முன்மொழிந்துள்ளது. இன்று காலை சட்டசபை கூடியதும், முதலமைச்சர் விஜய் இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.
தற்போது இந்தத் தீர்மானத்தின் மீது பல்வேறு கட்சித் தலைவர்கள் விவாதித்து வருகின்றனர். இதில் முக்கிய திருப்பமாக, முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தலைமையிலான அதிமுக எம்.எல்.ஏ-க்கள் குழு, தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களிக்கப்போவதாக அறிவித்துள்ளது. இது ஆளும் தரப்பிற்குப் பெரும் பலத்தைச் சேர்த்துள்ளது. அதே வேளையில், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக உறுப்பினர்கள் இந்தத் தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்கப்போவதாகத் தெரிவித்துள்ளனர்.
மற்றொரு புறம், திருப்பத்தூர் தொகுதி எம்.எல்.ஏ. சீனிவாச சேதுபதியின் வெற்றியை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், அவர் இன்றைய வாக்கெடுப்பில் பங்கேற்கச் சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இதன் காரணமாக அவர் அவைக்கு வரவில்லை. இந்தத் தடையை எதிர்த்து அவர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வரவுள்ளது. திருப்பத்தூர் எம்.எல்.ஏ. நீங்கலாக, மற்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் தவெக அரசு பெரும்பான்மையை நிரூபித்து வெற்றிகரமாக ஆட்சியைத் தக்கவைக்கும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
#ConfidenceMotion #VijayAsCM #TNAssenbly #FloorTest #TVK_Government #BreakingNews #May13 #TamilNaduPolitics #ThalapathyVijay #NewGovernmentTN #AssemblyUpdates #CVShanmugam #EPSvsSPV #AiadmkSplit #SrinivasaSethupathi #SupremeCourt #FortStGeorge #DemocraticProcess #TamilNews #VijayMakkalIyakkam_“`