மாவீரர் வாரம் வெள்ளிக்கிழமை (21) அன்று ஆரம்பித்துள்ள நிலையில் தாயகப் பரப்பிலும், புலம்பெயர் தேசங்களில் மாவீரர்களுக்கு அஞ்சலி நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், மாவீரர் வாரத்தின் முதல் நாளில் கொழும்பில் மாவீரர்களுக்கு உணர்வெழுச்சியுடன் தனது அஞ்சலியை செலுத்தினார்.
அந்த வகையில் மாவீரர் துயிலுமில்லத்தினை தாங்கிய உருவப்படத்திற்கு சுடரேற்றி, மலர் தூவி, மாவீரர்களுக்கு உணர்வுபூர்வமாக அஞ்சலிகளை செலுத்தினார்.
மேலும் 2026ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டத்திற்கான பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்பதற்கு தற்போது பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கொழும்பில் தங்கியுள்ள நிலையில், கொழும்பிலேயே பாராளுமன்ற உறுப்பினரால் இவ்வாறு மாவீரர்களுக்கு உணர்வெழுச்சியுடன் அஞ்சலி மேற்கொள்ளப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.