நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் குற்ற மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் மூலம், குற்றங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக செவ்வாய்க்கிழமை (11) அன்று முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையின் போது 476 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பரிசோதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை: 27,576
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபர்களின் எண்ணிக்கை: 476
குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் என நேரடியாக அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை: 25 கைது செய்யப்பட்டுள்ள சாதாரண விறாந்துக்காரர்களின் (வாரண்டு பிறப்பிக்கப்பட்டவர்களின்) எண்ணிக்கை: 240
கைது செய்யப்பட்டுள்ள திறந்த விறாந்துக்காரர்களின் எண்ணிக்கை: 131
போதையில் வாகனம் செலுத்தியமைக்காகக் கைது செய்யப்பட்டவர்கள்: 59
அபாயகரமான அல்லது அவதானக் குறைவான முறையில் வாகனம் செலுத்தியமைக்காகக் கைது செய்யப்பட்டவர்கள்: 92
போக்குவரத்து உள்ளிட்ட ஏனைய பிழைகள்: 4,616