நுவரெலியா கிரகரி வாவியில் இருந்து மீட்கப்பட்ட சடலம், கம்பளை நகரை வசிப்பிடமாகக் கொண்ட மொஹமட் முஷாமின் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இவர், நீண்ட காலமாக நுவரெலியா நகரில் ஹோட்டல்களில் தொழில் புரிந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த மாதம் 27ஆம் திகதி குறித்த நபரை காணவில்லை என சமூக வலைத்தளங்களில் அவரது புகைப்படங்களோடு தகவல் பரிமாறப்பட்டதை தொடர்ந்து, இன்று(06) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா – பதுளை பிரதான வீதியில் உள்ள கிரகரி வாவியில் அடையாளம் தெரியாத ஒருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிரகரி வாவியில் படகு சவாரியில் ஈடுபடுவோர் சடலமொன்று மிதப்பதாக இன்று(06.04.2026) காலை பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, நுவரெலியா மாவட்ட நீதவான் ஸ்தலத்துக்கு சென்று சடலத்தை பார்வையிட்டதன் பின்னர், சடலம் வாவியில் இருந்து மீட்கப்படும் என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த நபர் வாவியில் பாய்ந்து உயிரிழந்தாரா? அல்லது அந்த நபரை எவராவது கொலை செய்து வாவியில் எறிந்து சென்றார்களா என்பது தொடர்பாக பலகோணங்களில் நுவரெலியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.