புத்தளம், கொட்டுகச்சி, பலுகஸ்வெவ பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றில் இருந்த பொதியிலிருந்து துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (12) கைப்பற்றப்பட்டுள்ளதாக புத்தளம் தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புத்தளம் தலைமையக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இந்த ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
பிஸ்டல் ரக துப்பாக்கியும் அதற்குரிய தோட்டாக்களுமே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் புத்தளம் தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.