சிங்கள மற்றும் தமிழ் அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் முதலாம் கட்டம் இன்றுடன் (ஓகஸ்ட் 7) அதிகாரப்பூர்வமாக நிறைவடையவுள்ளதாகக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதற்கிடையில், முஸ்லிம் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் முதலாம் கட்டம் செப்டம்பர் 2 ஆம் திகதி நிறைவடையவுள்ளது.
வரவிருக்கும் பாடசாலை விடுமுறையானது, ஓகஸ்ட் 10 முதல் செப்டம்பர் 5 வரை நடைபெறவுள்ள 2026 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையுடன் (G.C.E. A/L) ஒத்துப்போகிறது.
இதன்படி, நாடு முழுவதும் உள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் செப்டம்பர் 7 ஆம் திகதி மீள ஆரம்பமாகும் எனவும், இத்தவணை டிசம்பர் 4 ஆம் திகதி வரை தொடரும் எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.