கம்போடியாவுக்கும் தாய்லாந்துக்கும் இடையில் நிலவும் யுத்தத்தை உடனடியாக நிறுத்தக் கோரி, ஓமல்பே சோபித தேரர் தலைமையில் 250க்கும் மேற்பட்ட பிக்குகள் இன்று (16) களனி ரஜமஹா விகாரையில் சத்தியாக்கிரகப் போராட்டமொன்றை நடத்தினர்.
இந்த சத்தியாக்கிரகத்தில் கம்போடியாவைச் சேர்ந்த காஷ்யப தேரர் தலைமையிலான சுமார் 50 பிக்குகளும் கலந்துகொண்டனர். கம்போடிய காஷ்யப தேரர் சிங்களம், ஆங்கிலம் மற்றும் கம்போடிய மொழிகளில் கருத்துக்களை வெளியிட்டார்.
இதன்போது இங்கு கருத்துத் தெரிவித்த ஓமல்பே சோபித தேரர், இலங்கையில் அண்மையில் வீசிய சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதே முதன்மையானது என்றும், இந்த நேரத்தில் அரசியல் குற்றச்சாட்டுகளை சுமத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
குற்றவாளிகளைத் தேடுவதை விட, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதே இப்போதைய முக்கிய விடயம் என்றும் தேரர் சுட்டிக்காட்டினார்.
By C.G.Prashanthan G