ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவின் உடல் பொரள்ளையில் உள்ள தனியார் மலர்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று (10) காலை அங்கு சென்று மறைந்த சந்திரசேனவின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார். அவருடன் மேலும் பல முக்கிய பிரமுகர்களும் அஞ்சலி செலுத்த வருகை தந்தனர்.
இந்த விஜயத்தின் போது ஊடகங்களிடம் பேசிய ராஜபக்ச, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் (CIABOC) முன்னிலையாகுமாறு தனக்கு விடுக்கப்பட்ட அண்மைய அறிவித்தல் குறித்தும் கருத்து தெரிவித்தார்.
ஆணைக்குழுவில் முன்னிலையாவீர்களா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, “ஆம், நான் செல்வேன். நாம் செல்ல வேண்டும், இல்லையா?” என்று அவர் பதிலளித்தார்.
கபில சந்திரசேனவின் இறுதிச் சடங்குகள் இன்று மாலை 5 மணிக்கு பொரள்ளை பொது மயானத்தில் நடைபெறவுள்ளது.