கடும் விமர்சனங்களை தாண்டி வெற்றி பெற்ற டியூட்

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட்டடித்த திரைப்படம் தான் டியூட். அறிமுக இயக்குனர் கீர்த்திஸ்வரன் இயக்கிய இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்திருந்தார். இளம் சென்சேஷனல் மமிதா பைஜூ இப்படத்தில் நாயகியாக நடித்தார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான இப்படம் கலவையான மற்றும் கடும் விமர்சனங்களை தான் பெற்றது. ஆனாலும் இளம் ரசிகர்களின் பேராதரவினால் டியூட் திரையில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

நூறு கோடிக்கு மேல் வசூலித்த டியூட் திரைப்படம் நேற்று OTT யில் வெளியானது. ஒரு சில படங்கள் திரையில் வெற்றிபெற்று OTT யில் கடுமையான விமர்சனங்களை பெரும். அதைப்போல திரையில் கவனிக்கப்படாத திரைப்படம் OTT யில் வரவேற்பை பெரும். இந்நிலையில் திரையில் மாபெரும் வெற்றியடைந்த டியூட் திரைப்படம் OTT யில் பெரும்பாலான ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை தான் பெற்று வருகின்றது.

ஆனாலும் இப்படத்தில் சொல்ல வரும் கருத்துக்கள் OTT ரசிகர்கள் மத்தியிலும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. திரையில் வெளியான போதே இப்படத்தில் சொல்லப்பட்ட கருத்துக்களை சிலரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை, கடுமையான விமர்சனங்கள் எழுந்தது. படமாக டியூட் ஒரு என்டர்டைன்மெண்டான படமாகவே இருந்தது. கலகலவென ஒரு பக்காவான கமர்ஷியல் படத்தை இயக்குனர் கொடுத்திருந்தார். ஆனால் படத்தில் சொல்லப்படும் ஒரு சில விஷயங்கள் ஏற்புடையதாக இல்லை என்றே சொல்லப்பட்டது.

அதைப்போல தான் OTT ரசிகர்களாலும் ஒரு படமாக டியூட் நல்ல விமர்சனங்களை பெற்று வருகின்றது. ஆனால் படத்தில் சொல்லப்படும் விஷயங்கள் சர்ச்சையையும் விவாதத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றது. திரையிலும் சரி OTT யிலும் சரி கலவையான விமர்சங்களை தான் டியூட் பெற்றுள்ளது. ஆனால் வசூலை பொறுத்தவரை டியூட் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்துள்ளது. படம் வெளியான ஆறே நாட்களில் நூறு கோடிக்கு மேல் வசூலித்தது டியூட். அதன் பிறகு திரையில் ஒட்டுமொத்தமாக டியூட் திரைப்படம் உலகளவில் 120 கோடி வரை வசூல் செய்ததாக சொல்லப்படுகின்றது.

ரிலீசுக்கு முந்தைய வியாபாரமே அமோகமாக நடைபெற்றதால் டியூட் படத்தின் மூலம் தயாரிப்பு நிறுவனத்திற்கு மிகப்பெரிய லாபம் கிடைத்திருப்பதாக தெரிகின்றது. இதன் காரணமாக பிரதீப் ரங்கநாதனின் மார்க்கெட்டும் மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் ஒருபக்கம் வந்தாலும் பிரதீப் ரங்கநாதனின் நடிப்பில் எந்த குறையும் இல்லை. இந்த கால இளைஞர்களை தன் வசப்படுத்திவிட்டார் பிரதீப் ரங்கநாதன்.

அவருக்கு என்று தனி ஒரு ரசிகர்கள் பட்டாளம் உருவாகியுள்ளது. குறிப்பாக 2K ஹிட்ஸை பிரதீப் ரங்கநாதன் பிடித்துவிட்டார். அவர்களால் டியூட் திரைப்படம் கொண்டாடப்பட்டது. அதன் காரணமாகவே வசூலில் இப்படம் சக்கைபோடும் போட்டது. இந்நிலையில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்த மூன்று படங்களுமே நூறு கோடி வசூலை பெற்ற நிலையில் அடுத்ததாக அவரது நடிப்பில் LIK என்ற திரைப்படம் ரிலீஸாகவுள்ளது.

pana

பிரதேச சபையில் பதற்றம்

November 17, 2025

பாணந்துறை பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிப்பதற்காக கூட்டப்பட்ட இன்றைய (17) அமர்வில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. சபை உறுப்பினர்களின்

chi

தைவானுக்கு ஆதரவாக ஜப்பான் பிரதமரின் கருத்து

November 17, 2025

தைவானுக்கு எதிராக சீனா பலத்தைப் பயன்படுத்தினால் ஜப்பான் ராணுவ ரீதியாகத் தலையிடக்கூடும் என்று அந்நாட்டு பிரதமர் சனே டகாய்ச்சி எச்சரித்து

gaza

அமெரிக்காவுக்கு போட்டியாக ஐ.நா?

November 17, 2025

காசாவில் நிரந்தர போர் நிறுத்தம் மற்றும் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவது தொடர்பான வரைவு தீர்மானத்தை ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் நிறைவேற்ற அமெரிக்கா

cri

68 வயதுடைய பெண் கொலை: விசாரணை ஆரம்பம்

November 17, 2025

இரத்தினபுரி, நிவிதிகல பகுதியில் 10 ஏக்கர் தனியார் தோட்டத்தில் 68 வயதுடைய பெண்ணை கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய 2

fo

வெளிநாட்டு பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

November 17, 2025

இலங்கையில், செல்லுபடியான சர்வதேச சாரதி அனுமதிப் பத்திரம் அல்லது தமது நாட்டின் சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாத வெளிநாட்டவர்கள் எந்தவொரு வாகனத்தையும்

Death-2

விபத்தில் யாசகர் பலி

November 17, 2025

கல்முனை – மட்டக்களப்பு சாலையில் ஆரையம்பதி பகுதியில் நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கிச் சென்ற லொரி,

puth

சர்ச்சைக்குள்ளான புத்தர் சிலை தொடர்பில் நாடாளுமன்றில் அமைச்சர்

November 17, 2025

திருகோணமலை கடற்கரையில் வைக்கப்பட்ட புத்தர் சிலையால் ஏற்பட்ட குழப்ப நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த

ol

கைவிடப்படும் நிலையில் இந்தியாவுடனான ஒப்பந்தம்!

November 17, 2025

திருகோணமலை எண்ணெய்க் குத வளாகத்தை இந்தியாவுடன் கூட்டிணைந்து புதுப்பித்தல் மற்றும் மீளமைத்த திட்டம் தொடர்பில் அரசாங்கம் இன்னும் ஒரு முடிவை

ve

வெளிநாட்டில் கொல்லப்பட்ட இலங்கையர்; தவிக்கும் மனைவி, பிள்ளைகள்

November 17, 2025

இஸ்ரேலில் படுகொலை செய்யப்பட்ட தனது கணவனுக்கு இலங்கை அரசாங்கமும், வெளிநாட்டு அமைச்சும் நீதியை பெற்றுத் தர வேண்டும் என உயிரிழந்தவரின்

arrest

டோனி கைது

November 17, 2025

தெகிவளை, கல்கிஸ்ஸ தொகுதியின் JVP – NPP அமைப்பாளரும் வேட்பாளருமான (குடு/தூள்) போதை கடத்தல் வியாபாரி டோனியை போதைவஸ்து தடுப்பு

Jinthu

இலவச மருத்துவ முகாம்

November 17, 2025

36 வருடங்கள் பழமை வாய்ந்த கொழும்பு சேர்க்ள் லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் இவ்வருடத்தின் தலைவர் லயன் கணேஷ்வரன் தலைமையில் நேற்று

ga

கடலில் குளித்துக் கொண்டிருந்த இளைஞர் நீரில் மூழ்கிப் பலி

November 17, 2025

கொழும்பு – காலி முகத்திடலில் குளித்துக் கொண்டிருந்தபோது கடலில் அடித்துச் செல்லப்பட்டு மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இரண்டு இளைஞர்களில் ஒருவர்