கடன் நிபந்தனைகளுக்காகவே கல்விச் சீர்திருத்தங்கள் – ஜோசப் ஸ்டாலின்

தற்போதைய கல்விச் சீர்திருத்தங்கள் மக்களின் அல்லது மாணவர்களின் நலனுக்காக முன்னெடுக்கப்படவில்லை என்றும், ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் பெறப்பட்ட கடன் நிபந்தனைகளை நிறைவேற்றுவதற்காகவே அரசாங்கம் இவற்றை அவசர அவசரமாக நடைமுறைப்படுத்த முயல்கிறது என்று ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

செவ்வாய்க்கிழமை (29) நடைபெற்ற அமைச்சரவை ஊடகச் சந்திப்பில் கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பாக கருத்து தெரிவித்த கல்வி அமைச்சரின் உரையைத் தொடர்ந்து, அதற்கு பதிலளிக்கும் வகையில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போதைய அரசாங்கம் நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டிருக்கும் கல்வி சீர்திருத்தங்கள் யாவும் 2019 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் கடந்த அரசாங்கத்தால் திட்டமிடப்பட்டவையே தவிர, தற்போதைய ஆட்சியாளர்களின் சொந்தக் தொலைநோக்குத் திட்டங்கள் அல்ல, ஆரம்பத்தில் இத்திட்டங்களுக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்த தற்போதைய அரசாங்கம், இப்போது ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடன் நிபந்தனைகளுக்காகவே இவற்றை அவசர அவசரமாக அமல்படுத்த முயல்கிறது.

மேலும், 1, 6 மற்றும் 10 ஆம் வகுப்புகளுக்கு இச்சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டும், போதிய முன்பயிற்சிகளோ திட்டமிடல்களோ இல்லாத காரணத்தினால் 6 மற்றும் 10 ஆம் வகுப்புகளுக்கான நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டு, 1 ஆம் வகுப்புக்கு மட்டும் தொடங்கப்பட்டுள்ளதுடன், அவ்வகுப்பிற்கான ஆசிரியர் வழிகாட்டிப் புத்தகங்கள் கூட இன்னும் அச்சிட்டு வழங்கப்படவில்லை. இத்தகைய முறையற்ற நிர்வாகத்தினாலும், அச்சிடப்பட்ட புத்தகங்களை இரத்து செய்ததனாலும் கடந்த ஆண்டில் மட்டும் 278 மில்லியன் ரூபா மக்களுடைய வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளதாகத் தேசிய தணிக்கை அலுவலக அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன்,அரசாங்கம் தற்போது முன்னெடுத்து வரும் சிறிய பாடசாலைகளை மூடும் முயற்சி மாணவர்களின் அடிப்படை உரிமையாகக் கருதாமல், ஒரு வணிக முதலீடாக அரசாங்கம் பார்ப்பதே இத்தகைய முடிவுகளுக்குக் காரணம். கடந்த காலத்தில் சிறிய பாடசாலைகளை மூடுவதற்கு எதிராகப் போராட்டம் நடத்திய அதே நபர்கள் மற்றும் அமைப்புகள், இன்று அதிகாரத்திற்கு வந்ததும் சர்வதேச நாணய நிதியத்தின் தேவைகளுக்காகப் பாடசாலைகளை மூடுவதற்கு ஆதரவாக இரட்டை நிலைப் பாட்டை வகிக்கிறது.

கிராமப்புறச் சிறிய பாடசாலைகளில் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் ஆசிரியர்களால் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகளில் பெருமளவிலான மாணவர்கள் சாதனைகளைச் செய்து வரும் வேளையில், அந்தப் பாடசாலைகளை மூடி மாணவர்களைப் பேருந்துகளில் வேறு இடங்களுக்கு அனுப்புவது எளிய தீர்வாகாது, மாறாக அப்பாடசாலைகளைக் கட்டமைப்பு ரீதியாக மேம்படுத்துவதே அரசாங்கத்தின் கடமையாகும். தற்போதைய சீர்திருத்தங்கள் டியூஷன் மாஃபியா, பல்கலைக்கழக சேர்க்கைக்கான தீவிர போட்டி, பாடசாலை சேர்க்கை சிக்கல்கள் அல்லது ஆங்கில வழி கல்விக்கான தேவை போன்ற உண்மையான கல்வித்துறைப் பிரச்சினைகள் எதற்கும் தீர்வை வழங்கவில்லை என்பதால், இத்திட்டங்களால் மக்களுக்கு எந்தப் பலனும் கிடைக்கப்போவதில்லை என்றார்.

an

இன்று நாம் எதிர்கொள்ளும் முக்கிய சவால் பலமான அரச சேவை இல்லாமையே – ஜனாதிபதி

October 1, 2026

இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகிய முப்படைகளைச் சேர்ந்த சிரேஷ்ட அதிகாரிகளின் தனித்துவமான சேவையைப் பாராட்டும் வகையிலான “விசிஷ்ட சேவா

d

பிள்ளையார் கோவில் பகுதியில் பௌத்த வழிபாடுகளுக்கு அழைப்பு; வவுனியாவில் சம்பவம்!

October 1, 2026

வுனியா சமளங்குளம் பிள்ளையார் கோவில் இருக்கும் பகுதியில் கல்கமுவ சந்தபோதி தேரர் தலைமையில் பௌத்த வழிபாடுகளை நடத்துவதற்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதோடு

arr

சுன்னாகத்தில் பல வருடங்களாக திருட்டில் ஈடுபட்ட சந்தேகநபர் கைது!

October 1, 2026

யாழ்ப்பாணத்தில் பல வருடங்களாக திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் நேற்று சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

josep

கடன் நிபந்தனைகளுக்காகவே கல்விச் சீர்திருத்தங்கள் – ஜோசப் ஸ்டாலின்

October 1, 2026

தற்போதைய கல்விச் சீர்திருத்தங்கள் மக்களின் அல்லது மாணவர்களின் நலனுக்காக முன்னெடுக்கப்படவில்லை என்றும், ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் பெறப்பட்ட கடன் நிபந்தனைகளை

jeyha

‘பிரெஸ்ட் ஸ்ட்ரோக்’; நீச்சலில் சாதித்த சிறுவன் ரகுநாதன் ஜெய்ஹரி

September 30, 2026

கொழும்பில் வசிக்கும் ரகுநாதன் – லக்ஷ்மி தம்பதியரின் 6 வயது மகன் ஜெய்ஹரி, நீச்சலில் புதிய உலக சாதனை படைத்து

ind

இஸ்ரேல்; விமானி மீது உதவி விமானி தாக்குதல்

September 30, 2026

துபாயிலிருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த ஃப்ளைதுபாய் (flydubai – FZ1073) விமானத்தின் உதவி விமானி,

f

சட்டவிரோதமாக வெடிமருந்து பயன்படுத்தி மீன்பிடிப்பு!

September 30, 2026

மன்னார், சௌத்பார் உப்பு நீரேரி பகுதியில் வெடி மருந்துகளை பயன்படுத்தி மீன் பிடித்ததாக சந்தேகிக்கப்படும் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

jail

PickMe சாரதி போல் நடித்த ’யக்கல நாமலின்’ கூட்டாளிகள் இருவர் கைது

September 30, 2026

PickMe செயலியின் வாடகை முச்சக்கர வண்டிச் சாரதி போல் நடித்து, நாவலப்பிட்டி, கினிகத்தேனை, கம்பளை உள்ளிட்ட பல பகுதிகளுக்கு ஹெரோயின்

dsdds

சட்டத்தை விட பெற்றோர் பிள்ளைகளுக்கு இடையிலான பலமான உறவே போதைப் பேரழிவிலிருந்து அவர்களைக் காப்பாற்ற முடியும்!

September 30, 2026

சட்டத்தை விடவும் பெற்றோர் மற்றும் பிள்ளைகளுக்கு இடையிலான பலமான உறவு மூலமே போதைப்பொருள் பேரழிவில் இருந்து பிள்ளைகளைக் காப்பாற்ற முடியும்

may

மேய்ச்சல் தரைப் பிரச்சினை தொடர்பாகத் தீர்மானம்

September 30, 2026

மட்டக்களப்பு மாவட்டத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான கூட்டம் நேற்று

Untitled

தானியங்கி ட்ரோன்களை நீருக்கடியில் இயக்கி சீனா கின்னஸ் சாதனை

September 30, 2026

நீச்சல் குளத்தில் நடத்தப்பட்ட சோதனையில் நூற்றுக்கும் மேற்பட்ட சிறிய ரோபோக்களை ஒரே நேரத்தில் இயக்கி, அதிக எண்ணிக்கையிலான தன்னாட்சி தானியங்கி

Mid photos new.00_00_55_10.Still115

“அதிமுக இப்போது திமுகவின் கிளைக் கழகமாக மாறிவிட்டது!” – எடப்பாடி பழனிசாமியை வெளுத்து வாங்கிய முதலமைச்சர் விஜய்!

September 30, 2026

சென்னை: அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தற்போது திராவிட முன்னேற்றக் கழகத்தின் கிளைக் கழகமாகவே மாறிவிட்டதாகத் தமிழக முதலமைச்சர்