சென்னை:
தமிழக முதல்வராகப் பதவியேற்ற அடுத்த சில நிமிடங்களிலேயே, தனது அதிரடி அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ளார் விஜய். சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற பதவியேற்பு விழாவிலேயே, தமிழக மக்களுக்கான மூன்று முக்கிய திட்டங்களுக்கான அரசாணைகளில் அவர் கையெழுத்திட்டார். இது “ஒரே கல்லில் மூன்று மாங்காய்” அடித்தது போல பெண்கள், இளைஞர்கள் மற்றும் குடும்பத் தலைவர்கள் என மூன்று தரப்பினரையும் கவரும் வகையில் அமைந்துள்ளது.
முதல் திட்டமாக, தவெக-வின் முக்கிய தேர்தல் வாக்குறுதியான “200 யூனிட் இலவச மின்சாரம்” வழங்கும் திட்டத்திற்கு விஜய் கையெழுத்திட்டார். இதன் மூலம் இரண்டு மாதங்களுக்கு 500 யூனிட்டுகளுக்குள் மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்களுக்கு 200 யூனிட் மின்சாரம் கட்டணமில்லாமல் கிடைக்கும். இரண்டாவது திட்டமாக, பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ‘சிங்கப்பெண்’ என்ற பெயரில் பிரத்யேக அதிரடிப்படை உருவாக்கப்படும் என அறிவித்தார். மூன்றாவது முக்கிய திட்டமாக, தமிழகத்தை போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மாற்ற ‘ஆன்டி நார்கோடிக்ஸ் ஃபோர்ஸ்’ (Anti-Narcotics Force) என்ற தனிப்படையை உருவாக்க அவர் உத்தரவிட்டார்.
பதவியேற்பு மேடையிலேயே இந்த மக்கள் நலத் திட்டங்களை அறிவித்த விஜய்யின் இந்த வேகம், தமிழக அரசியலில் ஒரு புதிய கலாச்சாரத்தைத் தொடங்கி வைத்துள்ளதாகப் பார்க்கப்படுகிறது. இந்த விழாவில் ராகுல் காந்தி உள்ளிட்ட தேசியத் தலைவர்களும் சினிமா பிரபலங்களும் பங்கேற்று விஜய்யை வாழ்த்தினர்.
#VijayAsCM #CM_Vijay #TVK #BreakingNews #May10 #TamilNaduPolitics #200UnitsFreePower #Singappenai #AntiDrugForce #ThalapathyVijay #NewGovernmentTN #VijayOathTaking #PeoplesGovernment #MadrasUpdate #StalinVsVijay #ElectionResults2026 #NewEraTN #GovernanceByVijay #TamilNews #VictoryForVijay_“`