2026ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளை ஒரு மாதத்திற்குள் வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி தெரிவித்தார்.
இதற்கான விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளை ஆகஸ்ட் 20 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை நடத்துவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார்.
இம்முறை ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் பரீட்சையானது நாடு முழுவதிலுமுள்ள 2,723 பரீட்சை மையங்களில் நடைபெற்றது.
இப்பரீட்சைக்கு 294,089 மாணவர்கள் தோற்றியிருந்தனர். அவர்களில் சிங்கள மொழியூடாக 220,366 மாணவர்களும், தமிழ் மொழியூடாக 73,723 மாணவர்களும் தோற்றியுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் தெரிவித்தது.