ஐஸ் மற்றும் ஹெரோயினுடன் இருவர் கைது!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட போதைப்பொருள் வியாபாரியைப் பார்வையிடுவதற்காக, கொழும்பில் இருந்து மட்டக்களப்பிற்குச் சென்று உணவகம் ஒன்றில் தங்கியிருந்த இருவரை ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் நேற்று முன்தினம் (29) இரவு கைது செய்துள்ளதாக மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் தெமட்டகொட பகுதியைச் சேர்ந்த, சிறையிலுள்ள போதைப்பொருள் வியாபாரியின் சகோதரர் மற்றும் அவரது நண்பர் ஆவர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:

கடந்த ஏப்ரல் 7-ஆம் திகதி 7.5 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் வியாபாரி, நீர்கொழும்பு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், குறித்த சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட படுகொலைச் சம்பவத்தைத் தொடர்ந்து, அங்கிருந்து அந்தப் போதைப்பொருள் வியாபாரி உட்பட 60 கைதிகள் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டனர்.

இதனையடுத்து, சிறையிலுள்ள சகோதரனைப் பார்வையிடுவதற்காக அவரது தம்பியும் நண்பரும் கொழும்பில் இருந்து மட்டக்களப்பிற்குச் சென்று, கல்லடிப் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் தங்கியிருந்துள்ளனர்.

இந்நிலையில், மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, பொலிஸ் நிலைய போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவுப் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர், சம்பவத்தினமான புதன்கிழமை இரவு குறித்த உணவகத்தை முற்றுகையிட்டுச் சோதனை நடத்தினர்.

இதன்போது, அங்குள்ள அறையில் இருந்த தெமட்டகொட பிரதேசத்தைச் சேர்ந்த 26 மற்றும் 31 வயதுடைய இருவரை 100 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் 500 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருட்களுடன் பொலிஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் போதைப்பொருள் வியாபாரியின் சகோதரன், ஏற்கனவே போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் சிறையிலிருந்த பின்னரே நீதிமன்றப் பிணையில் அண்மையில் வெளிவந்துள்ளார்.

கைது செய்யப்பட்ட இருவருமே போதைப்பொருள் வியாபாரிகள் என்றும், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

arrestt

மட்டு. சிறையில் அண்ணனை கொழும்பில் இருந்து பார்வையிட சென்ற தம்பி அவரது நண்பர் போதைப்பொருளுடன் கைது

July 31, 2026

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட போதை பொருள் வியாபாரியை பார்வையிடுவதற்காக கொழும்பில் இருந்து மட்டக்களப்பிற்கு சென்று அங்கு

CHANDANA

வட பகுதி மக்களின் நம்பிக்கையை பாதுகாப்போம் – அமைச்சர் சந்தன அபேரத்ன உறுதி!

July 31, 2026

வட பகுதி மக்கள் அரசாங்கத்தின் மீது வைத்த நம்பிக்கையை முழுமையாக பாதுகாப்போம்.மீண்டும் ஒருபோதும் இனவாத அல்லது மதவாத மோதல்கள் ஏற்பட

par

பாராளுமன்ற ஒன்றியம் விடுத்துள்ள கோரிக்கை!

July 31, 2026

2027 ஆம் ஆண்டிற்கான தேசிய வரவுசெலவுத் திட்டத்தின் அனைத்து துறைகளிலும் இயலாமையுள்ள நபர்களின் உள்வாங்குகையை உறுதிப்படுத்துமாறு இயலாமையுள்ள நபர்கள் பற்றிய

Heroin

ஐஸ் மற்றும் ஹெரோயினுடன் இருவர் கைது!

July 31, 2026

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட போதைப்பொருள் வியாபாரியைப் பார்வையிடுவதற்காக, கொழும்பில் இருந்து மட்டக்களப்பிற்குச் சென்று உணவகம் ஒன்றில்

Death-2

புங்குடுதீவில் குளவி கொட்டுக்கு இலக்கானவர் பலி!

July 31, 2026

யாழ்ப்பாணத்தில் குளவி கொட்டுக்கு இலக்கான முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். புங்குடுதீவு, 10-ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த கிறிஸ்தோத்திரம் பிரான்ஸிஸ் சேர்ச்சில் (வயது

rupe

முதல் அரையாண்டில் 2.95 டிரில்லியன் வருமானம்

July 31, 2026

2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் அரசாங்கத்தின் மொத்த வருமானம் மற்றும் மானியங்கள் 27 சதவீதத்தால் அதிகரித்து 2.956

negombo pri

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை; சாட்சியம் வெளிவருவது தேசிய பாதுகாப்புக்குக் கடுமையான அச்சுறுத்தலாக அமையும் – நீதிமன்றம்

July 31, 2026

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட சம்பவத்தில் 10 சிறைச்சாலை அதிகாரிகளும் 22 கைதிகளும் உயிரிழந்தமை தொடர்பில், அச்சம்பவம் இடம்பெற்ற வேளையில் நீர்கொழும்பு

cim

மலேசியாவில் கைது செய்யப்பட்ட ‘ரத்மலானே சைமா’ வௌியிட்ட திடுக்கிடும் தகவல்கள்!

July 31, 2026

மலேசியாவில் கைது செய்யப்பட்ட திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளியான ‘ரத்மலானே சைமா’ என்பவர், கஞ்சிபானி இம்ரானின் நிதிப் பொறுப்பாளராகச் செயற்பட்டுள்ளமை

hara

ஹரக் கட்டாவுக்கு எதிரான பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழான குற்றச்சாட்டுகள் தள்ளுபடி

July 31, 2026

பிரபல பாதாள உலகக் குழுத் தலைவரான ஹரக் கட்டாவிற்கு எதிராக பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வழக்கு தொடர

conta

இலங்கைக் கரையோரங்களில் 43 கண்டெய்னர் அளவிலான கழிவு பிளாஸ்டிக் துகள்கள் சேகரிப்பு!

July 31, 2026

இந்தியாவின் கேரளா கடற்பரப்பில் மூழ்கிய ‘MSC Elsa 3’ சரக்குக் கப்பலில் இருந்து வெளியேறி இலங்கைக் கரையோரங்களில் ஒதுங்கிய பிளாஸ்டிக்

usss

ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் வான்வழித் தாக்குதல்

July 31, 2026

மேற்காசியாவில் உள்ள அமெரிக்கப் படைகள் மீது ஈரான் நடத்திய திடீர் தாக்குதலுக்குப் பதிலடியாக, ஈரான் மீது வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதாக

D7IMGVBL7NGNRPBBLZ4TYVZV5M

மேனிடோபாவில் காணாமல் போன பூனை: பல வாரங்களுக்குப் பிறகு ஒன்றிணையும் ஒன்டாரியோ குடும்பம்

July 31, 2026

ஒன்டாரியோவின் ஹாமில்டன் (Hamilton) நகரைச் சேர்ந்த பூனை ஒன்று மேனிடோபா (Manitoba) மாகாணத்தில் எதிர்கொண்ட துயரமான சம்பவங்கள் ஒரு முடிவுக்கு