சென்னை:
தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தும், தவெக தலைவர் விஜய்யை ஆட்சி அமைக்க ஆளுநர் இன்னும் அழைக்காததற்கான பரபரப்பு காரணங்கள் வெளியாகியுள்ளன. 108 இடங்களுடன் காங்கிரஸின் 5 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவையும் சேர்த்து 113 இடங்கள் விஜய்யிடம் உள்ளன. இருப்பினும், திருச்சி கிழக்கு தொகுதியை அவர் ராஜினாமா செய்துள்ளதால் பலம் 112-ஆகக் குறைந்துள்ளது. சபாநாயகரைத் தவிர்த்து 118 என்ற மேஜிக் எண்ணிக்கையை நிரூபிக்க இன்னும் 6 இடங்கள் தேவைப்படுவதால், முழுமையான ஆதரவு கடிதங்களுடன் வரும்படி ஆளுநர் அர்லேகர் அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிகிறது.
மற்றொருபுறம், தமிழக அரசியல் களம் ‘ரிசார்ட் அரசியல்’ நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. தவெக-விற்கு எந்தச் சூழலிலும் ஆதரவு இல்லை என அறிவித்துள்ள அதிமுக, தனது எம்.எல்.ஏ-க்களைப் புதுச்சேரியில் உள்ள சொகுசு விடுதியில் தங்க வைக்க ஏற்பாடு செய்துள்ளது. திமுக தனது கூட்டணிக் கட்சிகளான விசிக மற்றும் இடதுசாரிகளைத் தக்கவைக்க முயலும் வேளையில், அதிமுக ஆட்சியமைக்கத் திமுக வெளியிலிருந்து ஆதரவு அளிக்கக்கூடும் என்ற அதிரடித் தகவல்களும் கசிந்துள்ளன. விஜய்யின் ஆட்சி கனவை முறியடிக்கத் திராவிடக் கட்சிகள் ஒன்றிணைந்து வியூகம் வகுத்து வருவதால், நாளை நடைபெறவிருந்த பதவியேற்பு விழா கேள்விக்குறியாகியுள்ளது. ஆளுநர் அர்லேகர் இன்று கேரளா பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் யார் என்பதில் உச்சகட்டப் பரபரப்பு நிலவுகிறது.
#TNGovernor #Vijay #TVK #MajorityTest #BreakingNews #May7 #TamilNaduPolitics #ResortPolitics #Puducherry #ADMK #DMK #ThalapathyVijay #VijayAsCM #PoliticalCrisis #Arlekar #ElectionResults2026 #Stalin #EPS #NewEraTN #VijayMakkalIyakkam_“`