எல்லையற்ற அன்பின் வடிவம் அம்மா!

“அன்னையே தெய்வம்” என்ற கொள்கை, தாயின் எல்லையற்ற அன்பு, தியாகம் மற்றும் கருணையை போற்றும் ஒரு உயர்ந்த கருத்தாகும். அன்னை என்பவர் வெறும் குழந்தையைப் பெற்றெடுத்தவர் மட்டுமல்ல, அறிவையும், நற்பண்புகளையும் புகட்டி, நம்மை ஒரு சிறந்த மனிதராக ஆக்கும் முதல் ஆசிரியர் மற்றும் கண்ணால் காணும் தெய்வம் அன்னை. அப்பேர்ப்பட்ட தாய்மையைப் போற்றும் அனைவருக்கும் அன்னையர் தின நல் வாழ்த்துக்கள்.

‘தாயிற் சிறந்த கோயிலும் இல்லை’ என்பது ஆன்றோர் வாக்கு. இந்த உலகில் எத்தனையோ தெய்வங்கள் இருந்தாலும், நம்மைப் படைத்து, காத்து, வளர்க்கும் அன்னையே முதன்மையானவள்.

அவளே நாம் கண்ணால் காணும் நிஜமான தெய்வ ரூபம்.தாய்மை என்னும் தெய்வீகம்:அன்பு, கருணை, இரக்கம், பொறுமை, சாந்தம் என அனைத்தின் உருவமாகவும் அன்னை திகழ்கிறாள். தான் பசி இருந்தாலும் தன் குழந்தைக்கு உணவளிக்கும் அவளது அன்பு, எந்த ஈடுஇணையற்றது. தன்னுடைய அறிவு மற்றும் மகிழ்ச்சியைத் தியாகம் செய்து, தன் குழந்தையின் எதிர்காலத்திற்காகவே அவள் வாழ்கிறாள்.

‘அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’ (தாய் மற்றும் தந்தை நாம் முதலில் அறியும் தெய்வங்கள்) என்று ஓளவையார் கூறியபடி, அன்னை நமக்கு முதல் குரு. கோயிலுக்குச் சென்று கோடி வணங்கினாலும் கிடைக்காத புண்ணியம், நம் அன்னையின் காலடியில் உள்ளது.

அன்னையின் உழைப்பும், தியாகமும் இருக்கிறது. தன்னுயிரைப் பணையம் வைத்து குழந்தையைப் பெற்று, தன் வாழ்நாள் முழுவதும் குழந்தைகளுக்காகவே வாழும் அன்னை, தெய்வத்திற்கு நிகரானவள்.முடிவுரை:அன்னை என்பவள், அன்பின் சிகரம். அன்னையின் அன்பிற்கு ஈடு, இணையே இல்லை. எனவே, அன்னையை உயிருள்ள தெய்வம் என மதித்து, அவரை என்றும் அன்புடனும், மரியாதையுடனும் போற்றிப் பாதுகாக்க வேண்டும்.

‘இறைவன் தனது பிம்பமாக தாயைப் படைத்தான்’. மண்ணில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் தந்தை எடுத்துக்காட்டாக இருக்கிறார், தாயோ எல்லாமுமாக இருக்கிறார்.

“அம்மா” என்ற சொல்லில் புதைந்துள்ள அர்த்தங்களும், தொணிகளும் ஆயிரமாயிரம். அம்மா என்பது வெறும் வார்த்தையல்ல, அது அன்பின் தொடர் ஊற்று.

“தாயிற்சிறந்த கோவிலுமில்லை…..” என்ற வரிகள் தாய்மையின் புனிதத்துவம், தாய்மையின் பெருமை, தாய்மையின் தியாகம் போன்றவற்றை எடுத்துக்கூறத்தக்க வரிகளாகும்.

‘மாதா, பிதா, குரு, தெய்வம்’ என நம் கலாச்சாரம் அன்னையருக்கு தான் முதலிடம் தந்து இருக்கிறது. அவ்வகையில் அன்னையே நம் முதல் கடவுளாகிறார். இந்தக் கடவுளைப்பற்றித்தான், “அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்” என அவ்வையார் தனது நீதி நூல்களில் ஒன்றான கொன்றை வேந்தனில் குறிப்பிட்டுள்ளார்.

அன்னை தான் இவ்வுலகில் நமக்கு கிடைத்த விலை மதிப்புள்ள உறவாகும். பெண்கள் ஒரு தாயாக, சகோதரியாக, தாரமாக, தோழியாக, இல்லத்தில் உள்ளவர்களை பக்குவப்படுத்தும் பாட்டியாக, வழி நடத்திச் செல்லும் ஆசானாக எத்தனையோ பாத்திரங்களில் மிளிர்ந்தாலும், அன்னைக்கு ஈடாக எதுவுமேயில்லை.

கூப்பிட்டக் குரலுக்கு தன்னால் ஓடி வர முடியாது என்ற காரணத்தால்தான், இறைவன் தனது பிம்பமாக தாயைப் படைத்தான்’ என்று சொல்வார்கள். மண்ணில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் தந்தை எடுத்துக்காட்டாக இருக்கிறார் என்றால், தாய் எல்லாமுமாக இருக்கிறார்.

அன்பு, கருணை, பாசம், தியாகம் என அனைத்தையும், நமக்கு முழு மனதோடு தரும் அன்னையின் உழைப்பையும் அன்பையும், தியாகத்தையும் போற்றும் விதமாக ஒவ்வோர் ஆண்டும் அன்னையர் தினம் மே மாதம் இரண்டாம் ஞாயிறன்று சிறப்பிக்கப்படுகின்றது.

தமிழகத்திற்கும் அம்மாவுக்கும் ஆரம்பம் தொட்டே பெரும் பாசப்பிணைப்பு உண்டு. தமிழ் திரைப்படங்களில்தான் மற்ற எந்த மொழியை விடவும் அம்மா பாடல்கள் அதிகமாக பாடப்பட்டுள்ளதாம்.

அன்னையின் பெருமைப்பற்றிக் கூறும்போது, “அன்னையின் அன்புக்கு வயதே கிடையாது”, “குழந்தைகளின் இதயத்திலும் வாயிலும் வரும் கடவுளின் பெயர்தான் தாய்”, “தாய் எப்படி வளர்கின்றாரோ அப்படி உருவாகிறார்கள் மனிதர்கள்”, “அன்பின் உற்பத்தி தலம் அன்னை”, “தந்தையின் அன்பு கல்லறை வரை; தாயின் அன்பு உலகுள்ள வரை” என்றெல்லாம் அன்னையைப்பற்றி நிறையவேச் சொன்னாலும் அந்த அன்பின் விளக்கத்திற்கு முழுமையான நிறைவைத்தர முடியாது.

அன்னையர் தினத்தில் நமது அன்னையை மட்டுமல்ல அன்னையர்கள் அனைவரையும் நாம் மதித்து மகிழ்விக்க வேண்டும், அவர்களுக்காக இறைவேண்டல் செய்யவேண்டும், இதயபூர்மான நமது அன்பை வழங்க வேண்டும். அன்னையை மதிப்பது என்பது, ஒருநாளுக்கு மட்டும் என்று ஒதுக்கி வைக்கப்படுவதில்லை.

ஆனாலும், அன்னையர் தினம் என்பது அன்னையர்க்கு வழங்கப்படவேண்டிய உயரிய இடத்தை நினைவுறுத்தி நிற்கும் விழிப்புணர்வு நாளாகும். ஒவ்வோர் ஆண்டும் இது ஒரு துவக்கப்புள்ளிதான். ஆனால் அடுத்த ஆண்டு இதேநாள் வரை தொடரும் புள்ளி. சிறந்த சமுதாயத்தை உருவாக்க, அன்னையரின் பங்களிப்பு முக்கியம். ‘எந்த குழந்தையும், நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே, பின்பு, நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே’ என்ற பாடல் வரிக்கு ஏற்ப, சமுதாயத்துக்கு நல்ல மனிதர்களை உருவாக்கி வழங்குவது அன்னை தான். உலகில் எதற்கும் ஈடு இணையற்றவர் ஒருவர் என்றால் அவர் அன்னை தான். அனைவருக்கும் அன்னைதான் முதல் தெய்வம். நம்மை உலகுக்கு அடையாளம் காட்டியவர் அன்னை மட்டுமே.

பெண்மைக்கு பெருமை சேர்ப்பது தாய்மை என்றால் அது மிகையல்ல. 280 நாட்கள் சுமந்து பெற்று சீராட்டி தாலாட்டி வளர்த்த அன்னையை வயோதிக வயதில் பரிதவிக்கவிடும் பாதகர்களும் மனித போர்வையில் நடமாடுகிறார்கள். முதியோர் இல்லங்களில் அகதிகளாக்கப்படும் அன்னையர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துதான் வருகிறது.

‘அன்னையர்க்கு தினம் ஒன்று வேண்டாம்- அன்றாடம் அன்பு செய்யும் மனம் தான் வேண்டும்’ என, கவிஞர் ஒருவர் கூறியது மீண்டும் மீண்டும் எதிரொலிக்கிறது.

அன்னையர் தினம் என்ற பெயரால் ஆண்டில் ஒரு நாளை சிறப்பித்து கொண்டாடுவதினாலோ அல்லது வாழ்த்து அட்டைகளை பரிமாறிக் கொள்வதினாலோ நமது வாழ்க்கைக்கு அர்த்தத்தை உருவாக்கிய அந்த ‘தாய்’ என்ற உறவுக்கு நாம் பிரதிபலன் செய்திட இயலாது. ‘தாய்’ உறவு முறை என்பது வெறும் சடங்கோ சம்பிரதாயமோ அன்று, உணர்வுப் பூர்வமாக நாம் அணுகவேண்டிய உன்னதமான உறவு முறை. தாயை மதிப்போம், தரணியில் உயர் மதிப்பீடுகளை மலரச் செய்வோம்.

namal

ராஜபக்ஷர்களுக்கு எதிரான வழக்குகளை எவ்வழியிலாவது விரைவுப்படுத்த அரசாங்கம் முயற்சி – நாமல் ராஜபக்ஷ குற்றச்சாட்டு

July 27, 2026

ராஜபக்ஷர்களுக்கு எதிரான வழக்குகளை எவ்வழியிலாவது விரைவுப்படுத்த அரசாங்கம் முயற்சிக்கிறது. அரசியலமைப்புத் திருத்தம் ஊடாக நீதியரசர்களின் பதவி காலத்தை நீட்டிக்கும் தார்மீக

756724618_1047290304383453_223524354740937400_n

திருக்கோவில் பொத்துவில் பிரதான வீதியில் வாகன விபத்து ஒருவர் பலி சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்.

July 27, 2026

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருக்கோவில் விநாயகபுரம் 01 பிரதான வீதியில் திருக்கோவில் மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையில் இன்று

suresh11

சுரேஷ் சலே தாக்கல் செய்த ரிட் மனு; நாளை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்

July 27, 2026

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தம்மைக் கைது செய்து தடுத்து வைத்துள்ளமையை சவாலுக்கு

SPHU2A42SZGE7MVH4PDL2ITFMY

காணாமல் போன கால்கரி சிறுவன் பார்க்கர் வெல்ஸ் கடத்தப்படவில்லை; காவல்துறை தகவல்

July 27, 2026

11 வயதான பார்க்கர் வெல்ஸைக் கண்டறிவதற்கு வேறு என்னென்ன வழிமுறைகளைப் பயன்படுத்தியிருக்கலாம் என்பது குறித்து கனடாவின் காணாமல் போன குழந்தைகளுக்கான

NJBRXZLYK5F3BKA4TRRZ2H2UBA

பிஃபா உலகக் கோப்பை போட்டிகளைத் தொடர்ந்து கனடாவில்  பலர்அரசியல் தஞ்சம் கோரி விண்ணப்பம்

July 27, 2026

2026 பிஃபா (FIFA) உலகக் கோப்பை போட்டிகளுக்காக கனடாவுக்குப் பயணம் செய்த பலர் நபர்கள், போட்டிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து அந்நாட்டில்

8

முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்திற்கு ‘சிக்கல்’ – லஞ்ச ஒழிப்புத்துறைக்கு நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

July 27, 2026

சென்னை: கடந்த 2015-2016 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் வீட்டு வசதித்துறை அமைச்சராகப் பதவி வகித்த வைத்திலிங்கம், அடுக்குமாடி வீடு

55OGDDGBRNDMDLRPGLCJT6AH5Q

கேப் பிரெட்டன் (Cape Breton) தீ விபத்து நடந்த இடத்தில் சடலம் மீட்பு; காவல்துறையினர் தீவிர விசாரணை

July 27, 2026

மெக்ஆடம்ஸ் ஏரி பகுதியில் நடந்த உயிரிழப்பை ஏற்படுத்திய தீ விபத்து குறித்து கேப் பிரெட்டன் பிராந்திய போலீசார் விசாரணை நடத்தி

7

அடையாளம் தெரியாத நபர் தொல்லை: மேயர் பிரியா பரபரப்பு புகார்!

July 27, 2026

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சி மேயராக பதவி வகித்து வரும் பிரியா, தனக்கு சமூக வலைதளங்கள் மற்றும் வாட்ஸ்ஆப் மூலம்

6

ஆட்சிக்கு வந்த இரண்டரை மாதங்களில் ரூ.20,881 கோடி கடன்- தவெக அரசை விளாசிய கீதாஜீவன்!

July 27, 2026

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் உள்ள தனியார் விடுதியில் திமுக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர்

ED5JQPYN5NF6XDCAHMETPYHFMM

காணாமல் போன 23 வயது டொராண்டோ பெண்ணைத் தேட கட்டளை மையம் (Command Post) அமைப்பு

July 27, 2026

டிக்சன் மற்றும் மார்ட்டின் குரோவ் வீதிகளுக்கு அருகே கடைசியாகக் காணப்பட்ட 23 வயது பெண்ணை டொராண்டோ போலீசார் தேடி வருகின்றனர்.

AAFNGBSIVY7P5CLUU3MZCILP4M

ஆஜாக்ஸ் பூங்காவில் சிறுவர்கள் நிறைந்திருந்த விளையாட்டுப் பகுதியில் காரை ஓட்டிச் சென்றதாக நபர் மீது குற்றம்சாட்டப்பட்டு வழக்குப்பதிவு

July 27, 2026

இம்மாத தொடக்கத்தில், ஆஜாக்ஸ் (Ajax) பகுதியிலுள்ள பூங்கா ஒன்றில் சிறுவர்கள் நிறைந்திருந்த விளையாட்டுப் பகுதியிலும் நடைபாதைகளிலும் காரை ஆபத்தான முறையில்

XUP2KI6NKFC6BB6QNVCW5Y4UCQ

அமெரிக்க தூதரகத்திற்கு வெளியே துப்பாக்கிச் சூடு; அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

July 27, 2026

அமெரிக்க தூதரகத்திற்கு அருகே அதிகாலையில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை திங்கட்கிழமை அதிகாலை அமெரிக்க தூதரகத்திற்கு