“எனக்கு மக்கள் தான் இன்ஸ்பிரேஷன்!” – ‘சுயசக்தி விருது’ பெற்று மேடையில் நெகிழ்ந்த தருமபுரி எம்.எல்.ஏ சௌமியா அன்புமணி!

சென்னை
“மக்கள் என்னை இன்ஸ்பிரேஷனாகப் பார்க்கிறார்கள். ஆனால் எனக்கு மக்கள்தான் இன்ஸ்பிரேஷன்” என ‘சுயசக்தி விருது’ பெற்ற தருமபுரி எம்.எல்.ஏ சௌமியா அன்புமணி நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.
சுயசக்தி விருதுகள் விழா:
பெண்களின் தைரியம், பொறுமை மற்றும் தொழில் முனைவோர்களின் திறமையை உலகிற்கு எடுத்துக்காட்டும் விதமாக ஆண்டுதோறும் ‘சுயசக்தி விருதுகள்’ வழங்கப்படுகின்றன. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான விருது விழா நிகழ்ச்சி சென்னை சேத்துப்பட்டில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதில் பல்வேறு துறைகளில் சாதித்த பெண்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இவ்விழாவில் அமைச்சர்கள் ராஜ்மோகன், மரிய வில்சன், தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி, நடிகர் சூரி, நடிகை ஊர்வசி உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு அமைச்சர் ராஜ்மோகன் நன்றி:
இவ்விழாவில் முதலில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், “இந்த பூமி பேரே பூமித்தாய், தமிழை கையில் வைத்திருப்பவர் தமிழ்த்தாய். பெண்களான உங்கள் காலில்தான் நாங்கள் விழ வேண்டும். பெண்களுக்கு இந்த விருது கிடைப்பதால், சுயசக்தி விருதுக்கே மாபெரும் பெருமை. நான் அமைச்சரவையில் வருவேன் என்று கனவில்கூட நினைத்துப் பார்க்கவே இல்லை. என்னைக் கைப்பிடித்துத் தூக்கிவிட்டவர் முதலமைச்சர் ஜோசப் விஜய். நான் இப்போது கடிகார முள்ளுடன் போட்டிப் போட்டுக்கொண்டு உழைத்து வருகிறேன். குடும்பத்துடன் சரியாக நேரம் செலவிட முடியவில்லை என்றாலும், என் மனைவி என்னை நன்றாகப் புரிந்துகொண்டுள்ளார்,” என்றார்.
மேலும் பேசிய அவர், “வாழ்க்கையில் விமர்சனம் என்பது மிகவும் முக்கியம். இல்லையென்றால் வெற்றுப் புகழ்ச்சியுடன் நாம் பறந்துகொண்டே இருப்போம். ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள் எப்போதுமே வேண்டும். அது ஆரோக்கியமானதும் கூட” என்று பேசினார்.
108 ஆம்புலன்ஸ் & பாம்புக்கடி சிகிச்சை – அன்புமணி செய்த சாதனை:
இந்த விழாவில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு ‘அரசியல் களத்தில் இன்ஸ்பிரேஷன் பெண்மணி’ எனும் சிறப்பு விருது வழங்கப்பட்டது. விருதினைப் பெற்றுக்கொண்டு மேடையில் பேசிய சௌமியா அன்புமணி, “என்னிடம் பலரும் நீங்கள் தொடக்கத்திலிருந்தே அரசியலில் இருக்கிறீர்களா? என்று கேட்பார்கள். என் வீடு முழுவதுமாக அரசியல்தான் உள்ளது. எப்போதும் எங்கள் வீட்டில் அரசியல் பற்றித்தான் பேசுவோம்.
முன்பெல்லாம் கிராமங்களில் பாம்புக்கடியால் நிறையப்பேர் பரிதாபமாக இறப்பார்கள். இந்த இறப்புகளைத் தடுக்க உடனடி சிகிச்சை அளிக்கத் திட்டமிட்டு, நேஷனல் ரூரல் ஹெல்த் மிஷன் (National Rural Health Mission) மூலமாக எனது கணவர் அன்புமணி அவசர தேவைக்கான 108 ஆம்புலன்ஸ் திட்டத்தை அறிமுகம் செய்தார். அதேபோல சுகாதார நிலையங்களில் பாம்புக்கடி மருந்துகளைப் பதப்படுத்தி வைக்கக் குளிர்சாதனப் பெட்டி தேவைப்பட்டது. ஆனால், அவை பழுதாகும் போது சரிசெய்யப் போதுமான நிதி சுகாதார நிலையங்களில் இருக்காது என்று கோரிக்கை எழுந்தது. அப்போது அமைச்சராக இருந்த என் கணவர் அன்புமணி, சுகாதார நிலையங்களுக்கென்று தனியாக மத்திய அரசு நிதி உதவி ஒதுக்க வழிவகை செய்தார்,” என்று நினைவு கூர்ந்தார்.
எனக்கு மக்களே இன்ஸ்பிரேஷன் – சௌமியா அன்புமணி நெகிழ்ச்சி:
தொடர்ந்து பேசிய அவர், “வீட்டில் எப்போதும் அரசியல் இருந்தாலும், நான் 2024 நாடாளுமன்றத் தேர்தலில்தான் நேரடியாக அரசியலுக்குள் வந்தேன். நான் அதற்காகக் கடினமாக உழைத்திருக்கிறேன். தேர்தலின்போது தருமபுரியில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் சென்று மக்களைச் சந்தித்திருக்கிறேன். 2024-லிருந்து இப்போது வரை மக்கள் எனக்குத் தொடர்ந்து சிறப்பான ஆதரவு கொடுத்து வருகிறார்கள்.
என்னை மக்கள் இன்ஸ்பிரேஷனாக எடுத்துள்ளதாகக் கூறுகிறார்கள், ஆனால் எனக்கு இன்ஸ்பிரேஷனே இந்த மக்கள்தான். நான் அரசியலில் இருப்பதற்கு முழு ஒத்துழைப்பு என்னுடைய குடும்பத்திலும் உள்ளது” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
#SoumyaAnbumani #SuyasakthiAwards #MinisterRajmohan #ChiefMinisterVijay #ThalapathyVijay #TVKGovernment #PMK #Dharmapuri #AnbumaniRamadoss #WomenEmpowerment #TNPolitics #TamilNaduNews #Chennai #TrendingTN #ViralNewsTN #LatestNewsTN #TNNewsUpdates
556

மதுபானசாலை அனுமதிக்கு எதிராக வலி. வடக்கில் போராட்டம்

October 9, 2026

மதுபானசாலைகளற்ற பிரதேசமாகக் காணப்படும் வலி. வடக்கில் புதிய மதுபானசாலைக்கு அனுமதி வழங்கப்படுவதை எதிர்த்து, பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் கண்டனப் பேரணி

brand

பிராட் பிராட்ஃபோர்ட் திட்டத்துக்கு ஒலிவியா சௌ மற்றும் போக்குவரத்து ஆர்வலர்கள் எதிர்ப்பு?

October 9, 2026

ஸ்கார்பரோவின் 12 கி.மீ பிரத்யேக பேருந்து தடங்களை நீக்க பிராட் பிராட்ஃபோர்ட் திட்டம்: ஒலிவியா சௌ மற்றும் போக்குவரத்து ஆர்வலர்கள்

dailythanthi_2026-10-09_2ehwx7wk_shivan (1)

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் த.வெ.க. அபார வெற்றி!” – 4 மாத ஆட்சிக்குக் கிடைத்த வெற்றி என அமைச்சர்கள் பெருமிதம்!

October 9, 2026

சென்னை: மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர்களை வீழ்த்தி த.வெ.க. வேட்பாளர்கள் அபார வெற்றி பெற்றுள்ளனர்.

images (1)

நவநீதம்பிள்ளைக்கு நோபல் பரிசு: போர்க்குற்றங்கள் இனப்படுகொலைகளுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்தார்

October 9, 2026

2026ம் ஆண்டிற்கான சமாதானத்திற்கான நோபல் பரிசு மனித உரிமைகள் மற்றும் சர்வதேச சட்டத்தினை பாதுகாப்பதற்காக தளர்வின்றி போராடியமைக்காக ஐக்கியநாடுகள் முன்னாள்

hindutamil_import_hindu_uploads_news_2023_07_22_xlarge_1061734

“மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறைவு!” – வெளியே தெரிந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நந்தி சிலை!

October 9, 2026

சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறைவாக உள்ளதால் ஜலகண்டேஸ்வரர் கோயில் நந்தி சிலை வெளியே தெரியத் தொடங்கியுள்ளது.

vikatan_2024-10-04_jsw1i91t_WhatsApp-Image-2023-12-26-at-1.12.38-PM

“சாலைகளில் ரத்த ஆறு ஓடுகிறது… விஜய் ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது!” – எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு!

October 9, 2026

சென்னை: முதல்-அமைச்சர் விஜய் ஆட்சியில் கடந்த ஐந்து மாதங்களாகச் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

2

“நிரந்தர முதல்-அமைச்சராக விஜய் இருப்பார்!” – அமைச்சர் என்.ஆனந்த் அதிரடிப் பேச்சு!

October 9, 2026

சென்னை: சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் மண்டல மாநாட்டில் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர்

parliment

உயர் நீதிமன்றத் தீர்மானம் அறிவிப்பு!

October 9, 2026

நச்சுக்கள், அபின்கள் மற்றும் ஆபத்தான மருந்துகள் கட்டளைச் சட்டத்தின் இரண்டு திருத்தச் சட்டமூலங்களையும் சாதாரண பெரும்பான்மையால் நிறைவேற்ற முடியும் என

thu

சட்டத்தை நடைமுறைப்படுத்துவது என்ற பெயரில் புத்தசாசனத்தின் கௌரவத்தைச் சீர்குலைக்க முடியாது!

October 9, 2026

சிறைச்சாலையிலுள்ள கலபொடஅத்தே ஞானசார தேரரின் துறவற ஆடையை அகற்றி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய சம்பவமானது மிகவும் பாரதூரமானது என ‘தேசத்தைக் காக்கும்

kal

களுத்துறையில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் உயிரிழப்பு!

October 9, 2026

களுத்துறை, நாகொட பகுதியில் உணவகம் ஒன்றில் இன்று (9) காலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில்

images - 2026-10-09T112650.899

“மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல்: தவெக தொடர்ந்து முன்னிலை!” – வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பு

October 9, 2026

தமிழக அரசியல் களத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று

tvkmadhuranthagam-down-28521791085533

“மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல் முடிவுகள் – 11 மணி நிலவரம்!” – தவெக வேட்பாளர்கள் முன்னிலை!

October 9, 2026

சென்னை: தமிழகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை தீவிரமாக