எடப்பாடிக்கு எதிராகப் போர்க்கொடி: அதிமுக இரண்டாக உடையும் அபாயம்?

தமிழக சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க. பெரும் பின்னடைவைச் சந்தித்தது. கடந்த 2021 தேர்தலில் 66 இடங்களை வென்றிருந்த அந்தக்கட்சி, இந்தத் தேர்தலில் 47 இடங்களை மட்டுமே வென்று மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டது. இதனால் எதிர்க்கட்சி அந்தஸ்தையும் அக்கட்சி இழந்துள்ளது. மேலும், இதுவரை இல்லாத வகையில் பல தொகுதிகளில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் வைப்புத்தொகையை (Deposit) இழந்தனர்.

இந்தச் சூழ்நிலையில், த.வெ.க-வில் உள்ள மூத்த தலைவர் ஒருவர், அ.தி.மு.க-விலிருந்து சில எம்.எல்.ஏ-க்களைத் தங்கள் பக்கம் இழுக்க முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அ.தி.மு.க-வில் சிலர் த.வெ.க-விற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்க முடிவு செய்தனர். இதையறிந்த எடப்பாடி பழனிசாமி சுதாரித்துக்கொண்டு, அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்களைப் புதுச்சேரியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தங்க வைத்தார்.

விஜய் ஒருபுறம் முதலமைச்சராகப் பொறுப்பேற்க தி.மு.க. கூட்டணிக் கட்சிகளிடம் பேசிக்கொண்டிருந்த நிலையில், திடீர் திருப்பமாக தி.மு.க. ஆதரவில் அ.தி.மு.க. ஆட்சி அமைக்க உள்ளதாகவும், எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகப் பொறுப்பேற்க உள்ளதாகவும் அரசியல் வட்டாரத்தில் தகவல் பரவியது. இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய போதிலும், அந்த முயற்சியில் முன்னேற்றம் ஏதும் ஏற்படவில்லை.

இதற்கிடையில், புதுச்சேரியில் தங்க வைக்கப்பட்டிருந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் நேற்று காலை பசுமை வழிச்சாலையில் உள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்கு வந்தனர். அவர்களுடன் எடப்பாடி பழனிசாமி நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனையில் தொடர் தோல்வி குறித்தும், கூட்டணி குறித்த முடிவுகள் குறித்தும் காரசாரமாக விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் ஆகியோர் பங்கேற்றுப் பேசினர். அப்போது எடப்பாடி பழனிசாமி மீது நேரடியாகச் சிலர் குற்றம் சுமத்திப் பேசியதாகத் தெரிகிறது. பின்னர் இக்கூட்டம் நிறைவடைந்ததையடுத்து அனைவரும் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

இந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் இல்லத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள் மீண்டும் ஒன்றுகூடினர். அங்கு பிற்பகல் 2:30 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது. அதில் எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், லீமா ரோஸ், தளவாய் சுந்தரம் உள்ளிட்ட சுமார் 37 எம்.எல்.ஏ-க்கள் கலந்துகொண்டதாகத் தெரிகிறது. இக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கி, அவருக்கு எதிராகச் சிலர் காரசாரமாகப் பேசியதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், அதிமுகவின் முக்கியப் புள்ளிகளான சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.விஜயபாஸ்கர் தலைமையில் 37 சட்டமன்ற உறுப்பினர்கள், தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) ஆதரவு அளிக்க முன்வந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். காலத்திற்குப் பிறகு 1987-லும், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு 2017-லும் அதிமுக சந்தித்த பிளவு போன்றதொரு சூழல் தற்போது மீண்டும் உருவாகியுள்ளது. அதிமுகவின் மொத்தமுள்ள 47 சட்டமன்ற உறுப்பினர்களில், மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகமானோர் (37 பேர்) தவெக-விற்கு ஆதரவு தெரிவிக்க முன்வந்துள்ளதால், அதிமுக இரண்டாக உடையும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

சட்ட விதிகளின்படி, ஒரு கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் தனியாகப் பிரிந்து சென்றால், அவர்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டம் பாயாது. அந்த 37 உறுப்பினர்களே “உண்மையான அதிமுக” எனக் கருதப்படவும் வாய்ப்புள்ளது. இதன் மூலம் அவர்கள் தங்கள் பதவியை இழக்காமல் தவெக ஆட்சியமைக்கப் பலம் சேர்க்க முடியும்.

இந்த 37 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுக் கடிதங்களையும் ஆளுநரிடம் சமர்ப்பிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் தமிழக அரசியல் களம் நொடிக்கு நொடி எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. ஏற்கெனவே காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளின் ஆதரவுடன் ‘118’ என்ற மேஜிக் எண்ணை (பெரும்பான்மை) எட்டிவிட்ட நிலையில், தற்போது கூடுதலாக 37 அதிமுக உறுப்பினர்களின் ஆதரவும் கிடைத்தால், சட்டசபையில் விஜய்யின் பலம் அசுர வேகத்தில் உயரும் எனக் கூறப்படுகிறது.

இதற்கிடையில், சென்னையில் இன்று காலை 9 மணிக்குக் கூடும் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. “எடப்பாடி பழனிசாமியை நீக்குவதற்கு எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் எப்படி முடிவு எடுக்க முடியும்? அது பொதுக்குழு அல்லது கட்சி மட்டத்திலான கூட்டத்தில்தான் எடுக்கப்பட வேண்டிய முடிவு” என்று ஒரு தரப்பினர் கூறுகின்றனர். அ.தி.மு.க-வில் ஏற்பட்டுள்ள இந்தப் பிரச்சினை, இன்னும் ஓரிரு நாளில் மிகப்பெரிய பூகம்பமாக வெடிக்கும் என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.

arrest

இலஞ்சம் பெற்ற வருமான வரி அலுவலக ஊழியர் கைது

May 14, 2026

காணி ஒன்றின் மதிப்பீட்டு அறிக்கையை குறைந்த பெறுமதியில் தயாரித்துக் கொடுப்பதற்காக 35,000 ரூபா இலஞ்சம் பெற்ற பொலன்னறுவை மாகாண வருமான

Raj

முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தில் அம்பமாகும் ராஜபக்சர்களின் ஊழல் விவகாரங்கள்…

May 14, 2026

தமிழர்கள் மீதான இனவழிப்பு நடைபெற்று 17 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று இலஞ்சம் ஒழிப்பு

Shani

குற்றப் புலனாய்வுத் திணைக்கள பணிப்பாளர் ஷாணி அபேசேகரவுக்கு பதவி உயர்வு

May 14, 2026

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷாணி அபேசேகரவை, பிரதி பொலிஸ் மா அதிபர் பதவிக்கு தரம்

Omalbe

பௌத்த பிக்கு ஒருவருக்கு மனித உரிமைகள் என்று சொல்லிக் கொள்ள எதுவுமில்லை – ஓமல்பே சோபித தேரர்

May 14, 2026

எந்தவொரு சந்தர்ப்பத்திலும், எந்தவொரு பிக்குவுக்கும் தனது துறவற ஆடையைக் களைந்துச் செல்லும் உரிமை உண்டு. அதற்கு எவராலும் தடைகளை விதிக்க

IJPMI3VQG5GVPFMLGZGLSHBJXA

ரெட் டீர் பகுதியில் 14 வயது சிறுமி மீது கொடூரத் தாக்குதல்: இருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது

May 14, 2026

கனடாவின் ரெட் டீர் (Red Deer) பகுதியில் 14 வயது சிறுமி ஒருவரை மிகக் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் தொடர்பாக

weather

காற்றழுத்த தாழ்வு நிலை: இன்று முதல் படிப்படியாக குறையும்

May 14, 2026

மத்திய வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு வடகிழக்கு திசையில் காணப்படும் நன்கமைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு

QGKL6DBIBZEHBI2AL2ENAGP3SI

அல்பர்ட்டா பிரிவினை மனுவை இரத்து செய்த நீதிமன்றம்: முதற் தேச மக்களின் (First Nations) வெற்றி

May 14, 2026

அல்பர்ட்டா மாகாணத்தைப் பிரிப்பது தொடர்பான சர்ச்சைக்குரிய மனுவை (Separatist petition) செல்லாது என அறிவித்து நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்துள்ளது. முதற்

mark

கனடாவின் புதிய தேசிய மின்சார மூலோபாயம்: பிரதமர் மார்க் கார்னி இன்று அறிவிக்கவுள்ளார்

May 14, 2026

கனடிய அரசாங்கத்தின் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சுத்தமான மின்சார மூலோபாயத்தை (Clean electricity strategy) பிரதமர் மார்க் கார்னி இன்று (வியாழக்கிழமை)

6ORIASPXUVDQTPFKTFQZZ5VA7U

ஸ்கார்பரோவில் சோகம்: இரண்டு வயதுக் குழந்தையைக் கொன்றதாகத் தாய் மீது கொலைக் குற்றம்

May 14, 2026

னடாவின் ஸ்கார்பரோ (Scarborough) பகுதியில், தனது இரண்டு வயது பூர்த்தியாவதற்கு இன்னும் ஒரு மாதமே இருந்த நிலையில், ஒரு பெண்

65ZVLLNBG5GHNHIV3BZUWPIZBM

கனடாவின் வான் (Vaughan) பகுதியில் துப்பாக்கிச் சூடு: இருவர் உயிரிழப்பு

May 14, 2026

கனடாவின் வான் (Vaughan) பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக யோர்க் பிராந்திய பொலிஸார் (York Regional

Mythri

முன்னாள் ஜனாதிபதி மைத்திரி மீதும் நிதி மோசடி வழக்கு; அபராதம் தொடர்பில் அறிக்கை கோரல்

May 14, 2026

கந்தளாய் சீனி கைத்தொழிற்சாலை நிதி மோசடி வழக்கில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிக்குழாம் பிரதானியாகப் பணியாற்றிய குசுமதாச மஹாநாமவுக்கு

canada courts

சிறுவர் பாலியல் துஷ்பிரயோகப் பொருட்களைப் பகிர்ந்தவருக்கு 5 ஆண்டுகள் சிறை

May 14, 2026

சிறுவர் பாலியல் துஷ்பிரயோகப் பொருட்களை (Child sexual abuse and exploitation material) கைவசம் வைத்திருந்தமை மற்றும் அவற்றைப் பரிமாற்றம்