“எங்கே எங்கே எமது உறவுகள்” மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் நினைவு வாரம்

“எங்கே எங்கே எமது உறவுகள்” என்ற கேள்வியும், “வேண்டும் வேண்டும் நீதி வேண்டும்” என்ற கோசமும் தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருக்கின்றன. ஆனால், உள்நாட்டுப் பொறிமுறை மூலமாக எங்களுக்கு தீர்வு கிடைக்கும் என்று சொல்லப்பட்ட விடயம் 17 ஆண்டுகளில் பொய்யாகத்தான் முடிந்திருக்கிறது. அது இன்னும் நடைபெறக்கூடிய வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை. ஆகவே பன்னாட்டுப் பொறிமுறை என்று சொல்லப்படுகிற சர்வதேச பொறிமுறையின் ஊடாக பாதிக்கப்பட்ட உறவுகளுக்குரிய நீதி கிடைக்கவேண்டும் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுர்த்தி சிறிநேசன் தெரிவித்தார்.

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 17வது ஆண்டு நினைவேந்தல் வார நிகழ்வுகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டன.

இனப்படுகொலையை நினைவுகூரும் வகையில் முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் நேற்றைய தினம் (12) வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் அனுஷ்டிக்கப்பட்டது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவி அ.அமலநாயகி தலைமையில் நடத்தப்பட்ட இந்த நிகழ்வில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், இ.சிறிநாத், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதன், பிரதி முதல்வர் வை.தினேஸ் உள்ளிட்ட மாநகர சபை உறுப்பினர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் உறுப்பினர்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவுத்தூபியில் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு, அகவணக்கம் செலுத்தப்பட்டதை தொடர்ந்து நினைவேந்தல் வார நிகழ்வுகள் ஆரம்பமாயின.

இதன்போது முள்ளிவாய்க்கால் அவலத்தின் நினைவாக வழங்கப்படுகின்ற முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சிறிநேசன்,

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்காக நாங்கள் ஒன்றுகூடியிருக்கிறோம். முள்ளிவாய்க்கால் பேரவலம் நடைபெற்று 17 ஆண்டுகள் கடந்திருக்கின்றன.

இந்த ஆண்டும் வழக்கம் போல முள்ளிவாய்க்கால் நினைவேந்தல், வலிகளை நினைவுகூர்தல், முள்ளிவாய்க்கால் கஞ்சிக்காக எங்களுடைய மக்கள் ஏங்கி நின்ற அந்த நிலைமை, இவற்றை வெளிக்காட்டக்கூடிய விதத்தில் இன்று மே மாதம் 12ஆம் திகதியிலிருந்து 18ஆம் திகதி வரை இந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நடைபெறவிருக்கிறது.

இன்று முதல் நாள் நிகழ்வு காந்தி சதுக்கத்தில் மட்டக்களப்பு மாநகர எல்லைக்குள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

வலிகளை வழிகளாக மாற்றுவோம். நாங்கள் சுமந்த வலிகளை விடுதலைக்கான வழிகளாக மாற்றிக்கொள்ள வேண்டும்.

எமது மக்கள் 1956ஆம் ஆண்டிலிருந்து, சுதந்திரம் பெற்ற 1948ஆம் ஆண்டுக்குப் பிறகு, 1956ஆம் ஆண்டு இக்னியாகலை படுகொலை என்று 153 பொதுமக்கள், அதுவும் தொழிலாளர்கள் கொல்லப்பட்டிருந்தார்கள். அன்று தொடங்கிய இனப்படுகொலை 2009ஆம் ஆண்டு 5ஆம் மாதம் 19ஆம் திகதி முடிந்ததாகக் கூறினாலும், இன்றைய நிலையிலும் கூட அந்த நினைவுத்தூபிகளை அழிக்கின்ற செயற்பாடுகள், தமிழர்களின் மனங்களில் இருக்கின்ற அந்த எண்ணங்களை, சிந்தனைகளை, நினைவேந்தலை அழிக்கின்ற செயற்பாடுகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன.

“எங்கே எங்கே எமது உறவுகள்” என்ற கேள்வியும், “வேண்டும் வேண்டும் நீதி வேண்டும்” என்ற கோஷமும் தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருக்கின்றன. ஆனால் உள்நாட்டுப் பொறிமுறை மூலமாக எங்களுக்கு தீர்வு கிடைக்கும் என்று சொல்லப்பட்ட விடயம் 17 ஆண்டுகளில் பொய்யாகத்தான் முடிந்திருக்கிறது. அது இன்னும் நடைபெறக்கூடிய வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை. ஆகவே பன்னாட்டுப் பொறிமுறை என்று சொல்லப்படுகின்ற சர்வதேச பொறிமுறையின் ஊடாக பாதிக்கப்பட்ட உறவுகளுக்குரிய நீதி கிடைக்கவேண்டும். அந்த மக்கள் உயிர்களை இழந்தது மட்டுமல்லாமல், நீதிக்காக 17 ஆண்டுகள் காத்துக்கொண்டிருக்கின்றார்கள். ஆனாலும், நீதி கிடைக்கவில்லை.

ஆகவே, அநுர குமார திசாநாயக்க தலைமையில் அமைந்திருக்கிற இந்த புதிய அரசாங்கம் தமிழ் மக்களுக்கு உரிய பதில் அளிக்கவேண்டும்.

கடந்த காலத்தில் பல அரசாங்கங்கள் இருந்தன. ராஜபக்ஷ அரசாங்கம் இருந்தது. மைத்திரி அரசாங்கம் இருந்தது. கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் இருந்தது. ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் இருந்தது. இந்த அரசாங்கங்கள் எல்லாம் மொத்தத்தில் ஏமாற்றத்தைத்தான் மக்களுக்கு கொடுத்துச் சென்றிருக்கின்றன. இப்போது பல நம்பிக்கைகளை ஊட்டிய வண்ணம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவியேற்றிருக்கிறது. எனவே காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள், கொல்லப்பட்ட உறவுகள், கடத்தப்பட்ட உறவுகள், இந்த முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் மிகுந்த வலிகளைச் சுமந்த உறவுகள் இருக்கிறார்கள். இவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றுதான் நீண்ட காலமாக அவர்கள் குரல் கொடுத்து வருகிறார்கள்.

அதுமட்டுமன்றி, இன்றைய நிலையில் இளைஞர்கள் இதைப் பற்றி சிந்திக்கக்கூடாது என்ற அடிப்படையிலோ தெரியவில்லை, போதை, மதுசார பழக்கவழக்கங்கள் இளைஞர்கள் மத்தியில் பரப்பப்பட்டிருக்கின்றன. அளவுக்கதிகமான மதுபான விற்பனை நிலையங்கள் வடக்கு, கிழக்கில் திறக்கப்பட்டிருக்கின்றன. இது இளைஞர்களின் உணர்வுகளை அழித்து அவர்களை நடைபிணங்களாக மாற்றுகின்ற ஒரு செயற்பாடாகக் கூட அமைந்திருக்கலாம். எனவே இளைஞர்கள், யுவதிகள் இந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளை கவனிக்கவேண்டும்.

எங்களுடைய பகுதிகளில் நாங்கள் மதுபான தவறணைகளை கேட்கவில்லை. மக்களுக்குரிய நீதியைத் தான் கேட்கிறோம். எனவே உணர்வுகளை அழிக்கக்கூடிய விதத்தில் போதைப்பொருட்களை விற்பனை செய்வதும், அளவுக்கதிகமாக மதுபான தவறணைகளைத் திறப்பதும் தமிழ் மக்களின் உணர்வுகளை அழித்து அவர்களைக் களியாட்டப் பிரியர்களாக மாற்றுகின்ற ஒரு செயற்பாடாகக் கூட இருக்கலாம். ஆகவே, வலிகளைச் சுமந்த நாம் வழிகளைத் தேட வேண்டும். விடுதலைக்கான வழிகளைத் தேடுவதாக இருந்தால் கடந்த காலத்தில் நாங்கள் பட்ட கஷ்டங்கள், அவலங்கள், அநியாயங்களை நாங்கள் மறக்கக்கூடாது.

அடுத்து வரும் சந்ததிகளுக்கும் இவற்றைச் சொல்ல வேண்டும். இல்லையென்றால், அவர்கள் இந்தப் போரில் பாதிக்கப்பட்ட எமது இனத்தின் வலிகளை உணராமல் இருந்துவிடுவார்கள். எனவே, இதை அடுத்த தலைமுறைக்கும் கொண்டுசெல்வதற்கான இந்த செயற்பாடுகள் 17 வருடங்கள் கடந்தும் தொடர்கிறது என்பதைக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

எனவே, தயவுசெய்து இளைஞர்கள், யுவதிகள் களியாட்டங்களில் அக்கறை கொள்ளாமல் இந்த வலிகளில் பங்கேற்று எங்களுடைய விடுதலைக்காகத் தொடர்ந்தும் சிந்திக்கவேண்டும் எனத் தெரிவித்தார்.

1200-675-27836231-thumbnail-16x9-vaiko

“கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை உறுதிப்படுத்திய இடைத்தேர்தல் முடிவு!” – வைகோ அதிரடி!

October 10, 2026

சென்னை: தமிழகத்தில் கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுக்கு இடமில்லை என்பதை தவெகவின் வெற்றி உறுதிப்படுத்தியுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

1200-675-27342147-thumbnail-16x9-anbumani

“அ.தி.மு.க கூட்டணியில் இருந்து விலகலா? ‘அரசியலில் எதுவேணா நடக்கலாம்’” – பா.ம.க அன்புமணி ராமதாஸ் சூசகம்!

October 10, 2026

கோயம்புத்தூர்: பாமக கூட்டணி குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என்றும், அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் எனவும் பாமக தலைவர் அன்புமணி

anojan

அனோஜன் தொடர்பில் பொலிஸார் விசேட அறிவிப்பு

October 10, 2026

சவூதி அரேபியாவில் மரண தண்டனைத் தீர்ப்பை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜன் தொடர்பான தேவையற்ற கருத்து பரிமாற்றங்கள் தொடர்பில் கல்முனை தலைமையகப்

can

கனடாவைச் சேர்ந்த பாட்டி புதிய உலக சாதனை

October 10, 2026

கனடாவைச் சேர்ந்த 61 வயது வீராங்கனை டோனாஜீன் வைல்ட் (DonnaJean Wilde), அமெரிக்காவின் உடாவில் நடைபெற்ற உலக சீனியர் விளையாட்டுப்

cyb

போலி சமூக ஊடக கணக்குகள் மீது கடும் நடவடிக்கை

October 10, 2026

தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் போலியான முகநூல் (Facebook) கணக்குகளைத் தயாரித்து, சமூக வலைத்தளங்கள் ஊடாக இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும்

rus

உக்ரைனின் எதிர்ப்புக்கு மத்தியில் ரஷ்யாவிடம் இருந்து டீசல் கொள்முதல் செய்ய அமெரிக்கா முடிவு!

October 10, 2026

அமெரிக்காவில் அதிகரித்து வரும் எரிபொருள் விலையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ரஷ்யாவிடம் இருந்து அதிகளவில் டீசல் கொள்முதல் செய்வதற்கு அமெரிக்க ஜனாதிபதி

sau

ஹவுதி இலக்குகள் மீது பாகிஸ்தான் வான்வழி தாக்குதல்

October 10, 2026

மெக்கா ஒப்​பந்​தத்​தின்​படி ஏமனில் உள்ள ஹவுதி இலக்​கு​களை குறி​வைத்து பாகிஸ்தான் போர் விமானங்கள் தாக்​குதல் நடத்​தி​ய​தாக செய்​தி​கள் வெளியாகி உள்​ளன.

bud_AU

மெல்பேர்ண் விஹாரையில் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை; இலங்கைப் பௌத்த துறவிக்கு 13 ஆண்டுகள் சிறை

October 10, 2026

மெல்பேர்ண் நகரில் உள்ள பௌத்த விஹாரை ஒன்றில் 6 இளம் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை இழைத்த குற்றத்திற்காக, இலங்கையைச் சேர்ந்த

is

இந்திய பைலட் ஸ்மித் மச்சாருக்கு இஸ்ரேல் அரசின் வீரதீர விருது

October 10, 2026

விமான கடத்​தலை தடுத்த இந்திய பைலட் ஸ்மித் மச்​சா​ருக்கு உலகம் முழு​வ​தி​லும் இருந்து பாராட்​டுக்​கள் குவிந்து வரு​கின்​றன. இந்​நிலை​யில் இஸ்ரேல்

mala thiru

மலேஷிய நாடாளுமன்றில் திருக்குறள்!

October 10, 2026

மலேஷிய நாடாளுமன்றில் திருக்குறளை மேற்கோள் காட்டி மலேசிய பார்லியில் அந்நாட்டு பிரதமர் அன்வர் இப்ராஹிம் உரையாற்றியது, வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.

17-2026-10-09-16-04-25

“நான் தளபதி விஜய்யின் தங்கச்சி… உண்மைக்கு கிடைத்த வெற்றி இது!” – மரகதம் குமரவேல்!

October 10, 2026

செங்கல்பட்டு: மதுராந்தகம் இடைத்தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றுள்ள தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல், இது உண்மைக்குக் கிடைத்த வெற்றி என

26-6ac8ee4988b7d

“இடைத்தேர்தல் வெற்றி: சட்டசபையில் த.வெ.க. பலம் 109 ஆக அதிகரிப்பு – பெரும்பான்மைக்கு இன்னும் 9 இடங்கள் தேவை!”

October 10, 2026

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ள நிலையில், தமிழ்நாடு சட்டசபையில் தமிழக வெற்றிக் கழகத்தின் பலம் 109