உள்நாட்டு யுத்தத்தின் இறுதிப் பகுதியில், பாதுகாப்புத் தரப்பினருக்குத் தேவையான இராணுவ விநியோகங்களை உடனடியாகப் பெற்றுக்கொள்வதற்காகச் சீனாவினால் இலங்கையில் அமைக்கப்பட்ட தீர்வையற்ற பண்டகசாலைகள்-இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதிதகவல்

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதிப் பகுதியில், பாதுகாப்புத் தரப்பினருக்குத் தேவையான இராணுவ விநியோகங்களை உடனடியாகப் பெற்றுக்கொள்வதற்காகச் சீனாவினால் இலங்கையில் அமைக்கப்பட்ட தீர்வையற்ற பண்டகசாலைகள் (Bonded Warehouses), யுத்த வெற்றியில் மிகத் தீர்மானமிக்க பங்காற்றியுள்ளதாக இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் (பேராசிரியர்) ஜெயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

இலங்கை யுத்தத்தில் சீனாவின் பங்களிப்பு குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள அவர், யுத்தத்தின் மிகக் முக்கியமான காலகட்டமான 2006 முதல் 2009 வரையான காலப்பகுதியில், கொழும்பு மற்றும் காலி ஆகிய துறைமுகங்களில் சீனா இத்தகைய தீர்வையற்ற பண்டகசாலைகளை அமைக்கும் அளவிற்குச் சென்றிருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

“பாதுகாப்பு அமைச்சின் அங்கீகாரக் கடிதத்துடன் எங்களால் அங்கு செல்ல முடிந்தது. இது ஒரு ‘ஷாப்பிங் லிஸ்ட்டை’ (Shopping list) எடுத்துக்கொண்டு ‘ஆயுத சுப்பர்மார்க்கெட்’ (Weapons supermarket) ஒன்றுக்குச் செல்வதைப் போன்றது. எமக்குத் தேவையானவற்றைச் சேகரித்துப் பயன்படுத்திவிட்டு, அதற்கான பணத்தை பின்னர் செலுத்தக்கூடிய வசதி இருந்தது” என அவர் விவரித்துள்ளார்.

இராணுவ நடவடிக்கைகளுக்குத் தேவையான ஆயுதங்களை உடனடியாகப் பெற்றுக்கொள்ளும் வகையில், சீனா இந்த பண்டகசாலைகளில் பெருமளவிலான இராணுவ விநியோகங்களை முன்னரேயே சேமித்து வைத்திருந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். “வேறேதேனும் ஒரு நாடு மற்றொரு நாட்டில் இப்படிச் செய்துள்ளதா என்பது எனக்குத் தெரியவில்லை, ஆனால் அவர்கள் அனைத்துப் பொருட்களையும் பண்டகசாலைக்குக் கொண்டு வந்தனர், நாங்கள் சென்று அவற்றைச் சேகரித்தோம்” என அவர் தெரிவித்துள்ளார்.

30 வருட கால யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதில், இறுதி ஆண்டுகளில் சீனாவின் இந்த இராணுவ ஆதரவு “மிகவும் இன்றியமையாததாக” (Paramount) அமைந்தது என கொலம்பகே வலியுறுத்தியுள்ளார்.

யுத்த காலத்தில் இந்தியா, அமெரிக்கா, ஈரான், ரஷ்யா, உக்ரைன் மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளிடமிருந்து இலங்கை உதவிகளைப் பெற்றிருந்த போதிலும், அவற்றில் கடுமையான கட்டுப்பாடுகள் இருந்ததாக அவர் விளக்கியுள்ளார். சில நாடுகள் பேரழிவுத் தரும் ஆயுதங்களை (Lethal weapons) வழங்க மறுத்து, பயிற்சிகள் அல்லது தற்காப்பு உதவிகளை மட்டுமே வழங்கின. வேறு சில நாடுகள் ஆயுதங்கள் அல்லது வெடிமருந்துகளைப் பெறுவதற்குக் தடைகளை விதித்திருந்தன.

“சில சந்தர்ப்பங்களில் எங்களால் ஆயுதங்களை வாங்க முடிந்ததே தவிர வெடிமருந்துகளை வாங்க முடியவில்லை. வேறு சில நாடுகள் ஆயுதங்கள் இல்லாத போர்க்கப்பல்களை மட்டுமே எங்களுக்கு வழங்கின” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு நேர்மாறாக, சீனா ஆயுதங்கள், வெடிமருந்துகள், பீரங்கிகள், மோட்டார்கள், ராடார்கள், கவச வாகனங்கள், போர் டாங்கிகள், விமானங்கள் மற்றும் கடற்படைக் கப்பல்கள் உள்ளிட்ட அனைத்து வகையான இராணுவ ஆதரவையும் விரிவாக வழங்கியது. இதன் மூலம் 2006-2009 காலப்பகுதியில் இலங்கையின் பிரதான பாதுகாப்பு விநியோகஸ்தராகச் சீனா மாறியது. இலங்கையுடனான சீனாவின் இராணுவ ஒத்துழைப்பு 1971 ஆம் ஆண்டிலேயே தொடங்கியிருந்த போதிலும், யுத்தத்தின் இறுதி ஆண்டுகளில் அது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியது.

புவிசார் அரசியல் மூலோபாயம் மற்றும் யுத்தத்திற்குப் பின்னரான அபிவிருத்தி

சீனாவின் இந்த மூலோபாய விரிவாக்கம் குறித்துப் பேசிய அவர், “2005 முதல் 2009 வரையான காலப்பகுதியில், சீனா தென் சீனக் கடல் மற்றும் கிழக்குச் சீனக் கடலுக்கு அப்பால், குறிப்பாக இந்தியப் பெருங்கடலில் கவனம் செலுத்தத் தொடங்கியது. எமது நாட்டின் புவிசார் மூலோபாய அமைவிடம் (Geo-strategic location) காரணமாக இலங்கை அவர்களின் முக்கிய கவனப்புள்ளியாக மாறியது” என்றார்.

உலகில் மிக பரபரப்பான கிழக்கு – மேற்கு கப்பல் போக்குவரத்துப் பாதையிலிருந்து இலங்கை வெறும் 12 கடல் மைல் தொலைவில் மாத்திரமே அமைந்துள்ளதையும், தினசரி சுமார் 300 கப்பல்கள் இப்பாதையைக் கடந்து செல்வதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதன் பின்னர், சீனா மிக வேகமாக இலங்கையின் பிரதான அபிவிருத்திப் பங்காளியாக மாறிய விதம் குறித்தும் அவர் விவரித்துள்ளார். யுத்தம் முடிவடைந்த போது இலங்கையில் அதிவேக நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட முக்கிய உள்கட்டமைப்புகள் இருக்கவில்லை. அதனைத் தொடர்ந்து, 2011 இல் தக்ஷிண லங்கா (தெற்கு) அதிவேக நெடுஞ்சாலை, 2011 இல் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம், 2011 இல் கொழும்பு சர்வதேச கொள்கலன் முனையம் (CICT), 2013 இல் கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை மற்றும் 2013 இல் மத்தள விமான நிலையம் போன்ற முக்கிய திட்டங்கள் சீனாவினால் நிறைவு செய்யப்பட்டன.

யுத்த காலத்தில் ஆயுதங்களை விநியோகிப்பதற்காக ஏற்கனவே கொழும்பில் அலுவலகங்களை அமைத்துச் செயற்பட்ட சீன அரச நிறுவனங்கள், யுத்தம் முடிந்தவுடன் உடனடியாக கட்டுமான நிறுவனங்களாக மாறின. சீன மத்திய அரசின் நேரடி வழிகாட்டலின் கீழ் இயங்கும் இந்த நிறுவனங்கள், தங்களின் பாதுகாப்புச் சார் செயல்பாடுகளிலிருந்து உள்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டங்களுக்கு மிக வேகமாக மாறக்கூடிய வசதியைக் கொண்டிருந்தன.

யுத்தம் முடிந்த உடனேயே மேற்குலக நாடுகளின் முதலீடுகள் இலங்கையில் இருக்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய கொலம்பகே, “அங்கு ஒரு பெரிய வெற்றிடம் (Vacuum) காணப்பட்டது, எமது தேவைகளோ மிக அதிகமாக இருந்தன. யுத்தத்திற்குப் பின்னர் இலங்கையில் ஏற்பட்ட அந்த வெற்றிடத்தை சீனா உடனடியாக நிரப்பியது” எனத் தெரிவித்துள்ளார்.

யுத்த காலத்திலும் அதற்குப் பின்னரான காலப்பகுதியிலும் சீனாவின் இராணுவ மற்றும் பொருளாதார ரீதியிலான இந்தத் தலையீடானது, இலங்கையின் போர்க்கால மற்றும் போருக்குப் பின்னரான அபிவிருத்திப் பாதையை வடிவமைப்பதில் பாரிய செல்வாக்கு செலுத்தியுள்ளது என அவர் தனது உரையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

court-judge-hammer-gavel-696x398

ஊழல் குற்றச்சாட்டுகளை மறுத்து யோஷித ராஜபக்ஷ மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி கரன்னாகொட வாக்குமூலம்

November 23, 2026

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவினால் (CIABOC) தமக்கெதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுகளுக்குத் தாம்

2

“தமிழ்நாட்டில் நடப்பது மதச்சார்பற்ற அரசுதான்!” – அமைச்சர் வன்னி அரசு பேட்டி!

November 23, 2026

சென்னை: தமிழ்நாட்டில் நடப்பது மதச்சார்பற்ற அரசாங்கம்தான் என்பதற்குத் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக அரசின் செயல்பாடே சிறந்த சாட்சி என்று அமைச்சர்

1

“ஜோசியம், ஜாதகம், யாகம் என ஆட்சி நடக்கிறது!” – தவெக ஆட்சி குறித்து உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

November 23, 2026

சென்னை: திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் முறையாக வாதாடத் தவறியதுடன், 2 நாட்களாகியும் முதலமைச்சர் விஜய் பதில் சொல்லவில்லை என

Sajith-Premadasa-4

இலங்கையின் வெளியுறவுக் கொள்கை- அனைத்து நாடுகளுடனும் ‘நேர்மறையான கூட்டிணைவுகளை’ ஏற்படுத்த சஜித் அழைப்பு!

November 23, 2026

இலங்கையின் பாரம்பரிய அணிசேரா கொள்கைக்கு அப்பால் சென்று, நாட்டின் தேசிய நலன்களை முன்னேற்றும் வகையில் சர்வதேசப் பங்காளித்துவங்களைக் கட்டியெழுப்ப, அனைத்து

namal raja

வாக்குறுதியளிக்கப்பட்ட 4 பில்லியன் டொலர் சீன முதலீடு எங்கே? அரசாங்கத்திடம் நாமல் கேள்வி!

November 23, 2026

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் சீன விஜயத்தைத் தொடர்ந்து அறிவிக்கப்பட்ட 4 பில்லியன் அமெரிக்க டொலர் சீன முதலீட்டின் தற்போதைய

gold

தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிப்பு

November 23, 2026

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை சற்று அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, கடந்த 21ஆம் திகதியுடன் ஒப்பிடுகையில், இன்றைய தினம் 22

902143220_122227379858360374_6202966544825060215_n

Behind Me Media தலைமை அலுவலகத்தில் மாவீரர் நினைவேந்தல் வாரம் 2026

November 23, 2026

2026 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் தேதி ஆரம்பமாகி நவம்பர் 27 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள மாவீரர்

ESRMM5KXWZF6DJL5FX27WSXIRA

ஸ்கார்பரோ துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இரண்டு பதின்ம வயதுச் சிறுவர்களின் விபரங்களை வெளியிட்டது ரொறன்ரோ பொலிஸ்; மற்றுமொருவர் வைத்தியசாலையில்

November 23, 2026

ரொறன்ரோவின் ஸ்கார்பரோ (Scarborough) பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 22) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்த 16 வயதுடைய

XEGVFSJHLQOUE52IQUWWOTHB5Q

அமெரிக்கா – கனடா வர்த்தக ஒப்பந்தம்  மிகவிரைவில்: அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி தகவல்

November 23, 2026

அமெரிக்கா கனடா வர்த்தக ஒப்பந்தம் மிகவிரைவில் எட்டப்படுவதற்கான சந்தர்ப்பம் உள்ளதாக அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் கிரீர் (Jamieson Greer)

jafffsdf

யாழ்ப்பாணத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார் பல வாகனங்களை மோதி விபத்து

November 23, 2026

யாழ்ப்பாணத்தில் நேற்றிரவு கார் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து, வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மீது மோதியதில் பல மோட்டார்

arr

துப்பாக்கி தோட்டாக்களுடன் மிருசுவிலில் இருவர் கைது

November 23, 2026

கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மிருசுவில் பகுதியில், T-56 ரக துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 96 தோட்டாக்களுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

acci main

திருகோணமலையில் ரயிலில் மோதி இருவர் பலி

November 23, 2026

திருகோணமலை, மீன்பிடித் துறைமுகத்திற்கு அருகில் இடம்பெற்ற ரயில் விபத்தில் இரண்டு நபர்கள் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார். திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கிப்