உள்நாட்டில் எரிபொருள் விலை குறையுமா?

தற்போது உலக சந்தையில் எரிபொருள் விலைகள் வீழ்ச்சியடைந்த போதிலும், அந்த விலைகளுக்கு ஏற்ப உள்நாட்டில் நிலவும் எரிபொருள் விலைகளைக் குறைப்பதற்கு எவ்வித சாத்தியமும் இல்லை என தொழில் அமைச்சரும், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதார நிலைமையை விளக்குவதற்காக அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (17) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைக் தெளிவுபடுத்தினார்.

தற்போது நாட்டில் நுகரப்பட்டு வருவது இதற்கு முன்னர் அதிக விலைக்கு கொள்வனவு செய்யப்பட்ட எரிபொருள் என்பதால், அந்த விலைகளின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருள் கையிருப்பு தீரும் வரை உள்நாட்டில் எரிபொருள் விலையைக் குறைப்பதற்கு சாத்தியமில்லை என அவர் கூறினார்.

இருப்பினும், அதிக விலைக்கு இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருள் நுகர்வு நிறைவடைந்த பின்னர், விலை குறித்து ஒரு முடிவை எடுக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இறுதியாக ஓர்டர் செய்த பெற்றோல் மற்றும் டீசல் விலைகளின் அடிப்படையில் எதிர்காலத்தில் விலைக்குறைப்பு ஒன்றை மேற்கொள்ள எதிர்பார்க்கிறீர்களா என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்,

எமக்கு எதிர்காலத்தில் வரவிருப்பது கடந்த மாதங்களில் கொள்வனவு செய்தவையாகும்.

குறைந்த விலையிலான எரிபொருளை எதிர்காலத்திலேயே எம்மால் பெற்றுக்கொள்ள முடியும். அதற்கு சில கால தாமதம் ஏற்படும்.

ஆனால் விலை குறையும் என நாம் எதிர்பார்க்கிறோம். அதற்கமைய, தற்போது வழங்கப்பட்டுள்ள சலுகையை நீக்காமல் இதே விலையில் பேணுவதா அல்லது விலையைக் குறைப்பதா என்பது குறித்து எதிர்காலத்தில் பரிசீலிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

kasthuri-1-2024-11-0308395fba104cc334646f143d18f661-4x3

இடைத்தேர்தலில் த.வெ.க. வென்றால் காங்கிரஸ் கூட்டணி முறிய வாய்ப்பு: பா.ஜ.க. நிர்வாகி கஸ்தூரி

August 25, 2026

கும்பகோணம்: கஸ்தூரியின் கோயில் தரிசனமும் செய்தியாளர் சந்திப்பும் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்துக்கு வந்த பா.ஜ.க. மூத்த நிர்வாகி கஸ்தூரி, அங்குள்ள

U2-1024x620

“தைரியம் இருந்தால் அந்த மூன்று கோப்புகளை ஓபன் பண்ணுங்க!” – முதலமைச்சர் விஜய்க்கு உதயநிதி சவால்

August 25, 2026

சென்னை: நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை பாரிமுனை ராஜா அண்ணாமலை மன்றத்தில், ‘போராளி ஓய்வதில்லை’ என்ற தலைப்பில் தி.மு.க.

1200-675-27473574-thumbnail-16x9-megamalai

மேகமலை விவகாரம்: தேனி ஆட்சியர் அலுவலகத்தில் மலைவாழ் மக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை மனு!

August 25, 2026

தேனி: ஆட்சியரின் உத்தரவும் மக்களின் அதிர்ச்சியும் தேனி மாவட்டம், வருஷநாடு, மேகமலை உள்ளிட்ட 98 மலை கிராம மக்களை வெளியேற்றும்

hindutamil-prod_2026-08-24_3sbtyc61_IMGTRBRAJAA210ED3RG16

“விஜய்யின் ஈகோவுக்காகவே பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து!” – டி.ஆர்.பி.ராஜா கடும் விமர்சனம்

August 25, 2026

சென்னை: பரந்தூர் புதிய விமான நிலையத் திட்டத்தைத் த.வெ.க. அரசு கைவிட்டுள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா சென்னை அண்ணா

Eb2zWUlU0AE67ID

சாத்தான்குளம் வழக்கு: தூக்குத் தண்டனை கைதிக்கு 2 நாள் அவசர கால விடுப்பு வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவு!

August 25, 2026

மதுரை: ரகு கணேஷுக்கு அவசர கால விடுப்பு சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்று சிறையில்

cham

சமிந்த விஜேசிறிக்கு பிணை

August 25, 2026

பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் அடையாளம் காணப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஐக்கிய மக்கள்

Parliame

22ஐ சவாலுக்கு உட்படுத்தி 21 மனுக்கள் தாக்கல்

August 25, 2026

அரசாங்கத்தினால் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்ட மூலத்தை சவால் செய்து இதுவரை உயர் நீதிமன்றத்தில் 21 மனுக்கள்

can

மாணவியின் மனிதநேயப் பண்பு!

August 25, 2026

அக்கரப்பத்தனை பகுதியில் ஏ.டி.எம். இயந்திரத்தில் விட்டுச் செல்லப்பட்டிருந்த 15,000 ரூபாய் பணத்தை கண்டெடுத்த உயர்தர மாணவி ஒருவர், அதனைத் தாமதிக்காமல்

dd

117ம் பிறந்தநாளைக் கொண்டாடிய உலகின் மிக வயதான பெண்!

August 25, 2026

உலகின் மிக வயதான வாழ்ந்துகொண்டிருக்கும் நபராக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட பிரித்தானியப் பெண்மணி எதேல் கேட்டர்ஹாம், தனது 117-வது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார்.

doug-ford-ontario-premiere-february-7-2023

அவர் எனது பின்புறத்தில் முத்தமிடட்டும்’: ட்ரம்பின் புதிய வரி அச்சுறுத்தலுக்கு ஃபோர்ட் கடும் கண்டனம்

August 24, 2026

அவர் எனது பின்புறத்தில் முத்தமிடட்டும்’: ட்ரம்பின் புதிய வரி அச்சுறுத்தலுக்கு ஃபோர்ட் கடும் கண்டனம்எதிர்வரும் புத்தாண்டு முதல் கனடாவின் அனைத்து

trump carney

வாகனங்கள் மீதான இறக்குமதி வரியை 50% ஆக உயர்த்த ட்ரம்ப் திட்டம்

August 24, 2026

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், கனடாவுக்கு எதிராகப் பதிலடி கொடுக்கும் வகையில், எதிர்வரும் புத்தாண்டு முதல் “அனைத்து வகையான பெரிய

au

அவுஸ்திரேலியாவில் பாலூட்டி விலங்கில் முதன்முறையாக எச்5என்1 பறவைக் காய்ச்சல் தொற்று உறுதி

August 24, 2026

அவுஸ்திரேலியாவில் முதன்முறையாக பாலூட்டி விலங்கொன்றில் எச்5என்1 (H5N1) பறவைக் காய்ச்சல் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தெற்கு அவுஸ்திரேலியாவின் பீச்போர்ட்