உலகெங்கும் பரந்துவாழும் உறவுகள் அனைவருக்கும் இனிமையான புத்தாண்டு நல் வாழ்த்துக்களை BEHIND ME சர்வதேச ஊடக வலையமைப்பு தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றது.
புத்தாண்டில் புதிய தொடக்கமாக அனைவரின் வாழ்விலும் மாற்றமும், வளமும் ஏற்பட வாழ்த்துக்களை பகிர்ந்திடுவோம். தமிழர்களின் பாரம்பரிய திருநாளாகவும் புதுமைகளை வரவேற்கும் நாளாகும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
தமிழ் ஆண்டின் தொடக்க நாளான சித்திரை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக கொண்டாடுகிறோம். 12 மாதங்கள் கொண்ட தமிழ் ஆண்டின் முதல் மாதமான சித்திரை மாதத்தின் முதல் நாளில் இதை கொண்டாடுகிறோம். 60 ஆண்டுகள் கொண்ட தமிழ் நாட்காட்டியில் 39வது ஆண்டான விசுவாவசு ஆண்டு நிறைவடைந்து, 40வது ஆண்டான பராபவ ஆண்டினை வரவேற்கின்றோம்.