ஈழத் தமிழர்கள் தங்கள் சமூக ஊடகங்களில் தமிழ்நாட்டின் தலைவர்கள் குறித்து அதிருப்திகளை வெளியிடுவது – தவிர்க்கப்பட வேண்டும்

ஈழத் தமிழர்களின் சமூக ஊடகங்களில் தமிழ்நாட்டின் தலைவர்களை வைத்து வன்மத்தை தெரிவிப்பது தவிர்க்கப்படவேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளரும் சட்டத்தரணியுமான சுகாஸ் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் அவரது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளதாவது,

மாண்புமிகு விஜய் அவர்களா? அல்லது மரியாதைக்குரிய சீமான் அவர்களா? இன்று ஈழத்தமிழர்களின் சமூக ஊடகப் பக்கங்களில் அதிகம் பேசப்படும் விடயம் இதுவே. தாம் விரும்பிய தலைவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதாக ஆரம்பித்து, தற்சமயம் மாற்றுத் தரப்பு மீதான வன்மத்தைக் கக்குவதாக நகர்கின்றது. இது உடனடியாகத் தவிர்க்கப்பட வேண்டும் என்பது எனது தாழ்மையான வேண்டுகோளாகும்.

தமிழகத் தலைவர்களோடு தொடர்புகளும் உறவுகளும் இருப்பது தவறல்ல. அது தேவையானதும் கூட. ஆனால் எதிர்ப்பது ஒன்றுக்குப் பல தடவை சிந்தித்து செயற்பட வேண்டிய விடயம். விடுதலையை வேண்டும் ஈழத் தமிழினத்துக்கு, இத்தருணத்தில் தமிழகத்தின் ஆதரவு தவிர்க்க முடியாதது என்பதை நினைவில் கொள்வோம்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்களுக்கும் மிக நெருக்கமான உறவு இருந்தபோதும், தமிழீழ விடுதலைப் புலிகள் எத்தருணத்திலும் எம்.ஜி.ஆரின் அரசியல் போட்டியாளரான முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதி அவர்களைப் பகிரங்கமாக எதிர்க்கவோ விமர்சிக்கவோ இல்லை என்பதை அனுபவப் பாடமாகக் கொள்வோம்.

ஈழத்தில் விஜய் அவர்களின் ரசிகர்கள் சீமான் அவர்களைத் தூற்றவேண்டியதில்லை. சீமான் அவர்களின் ஆதரவாளர்கள் விஜய் அவர்களை எதிர்க்க வேண்டியதுமில்லை.

ஈழத் தமிழர்களுக்கு இத்தருணத்தில் ஒட்டுமொத்தத் தமிழகத்தின் ஆதரவு தேவை என்பதை நினைவில் நிறுத்துவோம்.

இதை வைத்து ஈழத் தமிழினத்தைக் கூறுபோடவும் இனப்படுகொலையைத் திசைதிருப்பவும் இலங்கை அரசாங்கமும் அதன் முகவர்களான தமிழ் எட்டப்பர்களான அரசியல் கோமாளிகளும் போடும் திட்டத்திற்கு பலிக்கடா ஆவதைத் தவிர்ப்போம்.

மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் ஆட்சிப் பணி சிறக்கட்டும்.

அண்ணன் சீமானின் தமிழ்த் தேசியப் பணி செழிக்கட்டும்.

இலங்கை அரசினதும் முகவர்களான குறளிவித்தைக் கோமாளிகளதும் கூத்துக்களை இனியாவது ஈழத் தமிழினம் உணர்ந்து தெளியட்டும்.

இலக்கு ஒன்றே இனத்தின் விடுதலை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ac

கோர விபத்தில் இளம் தம்பதியினர் பலி

October 10, 2026

கம்பஹா – கிரிந்திவலை 231 ஆம் இலக்க பேருந்து பாதையில், ஹேனேகம சந்தியில் பேருந்தும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர்

Arju

பிரபாகரனால் முடியாததை நீங்கள் செய்கிறீர்கள்; ஷிராந்தியை உள்ளே போட்டதற்காகத் தமிழ் மக்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்

October 10, 2026

மஹிந்த ராஜபக்‌ஷவின் மனைவி ஷிராந்தி ராஜபக்‌ஷவைச் சிறையில் அடைத்தமைக்காகத் தமிழ் மக்கள் மகிழ்ச்சியடைகின்றனர்; ஆனால், நான் மகிழ்ச்சியடைய மாட்டேன். எமது

thaya

தமிழ் மக்களின் பொருளாதாரத்தை அழிக்கும் நோக்கத்தில்தான் கறுப்பு ஜூலை கலவரம் தோற்றுவிக்கப்பட்டது!

October 10, 2026

தமிழ் மக்களின் பொருளாதாரத்தை அழிக்கும் நோக்கத்தில்தான் 1983 ஆம் ஆண்டு கறுப்பு ஜூலை கலவரம் திட்டமிட்டுத் தோற்றுவிக்கப்பட்டது. ஆனால், இறுதியில்

v

பதுளை விபத்தில் விமானப்படை அதிகாரி உயிரிழப்பு

October 10, 2026

நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில், இலங்கை விமானப்படை அதிகாரி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இலங்கை விமானப்படையின் பயிற்சிப்

3

“அவதூறு பேசிய மிருக குணப் பேச்சுக்கு மக்கள் தகுந்த பதிலடி!” – இடைத்தேர்தல் வெற்றி குறித்து முதல்வர் விஜய் அறிக்கை!

October 9, 2026

சென்னை: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, அவதூறு பேசிய மிருக குணப் பேச்சுக்கு மக்கள் தகுந்த பதிலடியைத் தந்துள்ளதாக

2

“கொத்து புரோட்டா போட்டுவிட்டார்கள் மக்கள்!” – தவெக வெற்றியை விமர்சித்து மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு!

October 9, 2026

சென்னை: ஐந்து நிமிடம் பேசினாலே கொத்து புரோட்டா போட்டுவிடுவார் என்று சொல்லப்பட்டவரை நான்கு நாட்கள் கொளுத்தும் வெயிலில் அலைய வைத்துக்

dailythanthi_2026-10-09_tw4n5oic_Untitled-6

“இடைத்தேர்தல் மாபெரும் வெற்றி!” – அமைச்சர்களுடன் வைரல் சைகை காட்டி முதலமைச்சர் விஜய் உற்சாகக் கொண்டாட்டம்!

October 9, 2026

சென்னை: தமிழ்நாட்டில் நடைபெற்ற மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வெற்றியை முதலமைச்சர் விஜய் தனது அமைச்சர்களுடன் வைரல்

556

மதுபானசாலை அனுமதிக்கு எதிராக வலி. வடக்கில் போராட்டம்

October 9, 2026

மதுபானசாலைகளற்ற பிரதேசமாகக் காணப்படும் வலி. வடக்கில் புதிய மதுபானசாலைக்கு அனுமதி வழங்கப்படுவதை எதிர்த்து, பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் கண்டனப் பேரணி

brand

பிராட் பிராட்ஃபோர்ட் திட்டத்துக்கு ஒலிவியா சௌ மற்றும் போக்குவரத்து ஆர்வலர்கள் எதிர்ப்பு?

October 9, 2026

ஸ்கார்பரோவின் 12 கி.மீ பிரத்யேக பேருந்து தடங்களை நீக்க பிராட் பிராட்ஃபோர்ட் திட்டம்: ஒலிவியா சௌ மற்றும் போக்குவரத்து ஆர்வலர்கள்

dailythanthi_2026-10-09_2ehwx7wk_shivan (1)

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் த.வெ.க. அபார வெற்றி!” – 4 மாத ஆட்சிக்குக் கிடைத்த வெற்றி என அமைச்சர்கள் பெருமிதம்!

October 9, 2026

சென்னை: மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர்களை வீழ்த்தி த.வெ.க. வேட்பாளர்கள் அபார வெற்றி பெற்றுள்ளனர்.

images (1)

நவநீதம்பிள்ளைக்கு நோபல் பரிசு: போர்க்குற்றங்கள் இனப்படுகொலைகளுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்தார்

October 9, 2026

2026ம் ஆண்டிற்கான சமாதானத்திற்கான நோபல் பரிசு மனித உரிமைகள் மற்றும் சர்வதேச சட்டத்தினை பாதுகாப்பதற்காக தளர்வின்றி போராடியமைக்காக ஐக்கியநாடுகள் முன்னாள்

hindutamil_import_hindu_uploads_news_2023_07_22_xlarge_1061734

“மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறைவு!” – வெளியே தெரிந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நந்தி சிலை!

October 9, 2026

சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறைவாக உள்ளதால் ஜலகண்டேஸ்வரர் கோயில் நந்தி சிலை வெளியே தெரியத் தொடங்கியுள்ளது.