ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் வான்வழித் தாக்குதல்

மேற்காசியாவில் உள்ள அமெரிக்கப் படைகள் மீது ஈரான் நடத்திய திடீர் தாக்குதலுக்குப் பதிலடியாக, ஈரான் மீது வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.

ஜோர்டானில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மற்றும் ஹோர்மூஸ் நீரிணை ஊடாக சென்ற கப்பல்கள் மீது செவ்வாய்க்கிழமை (28) ஈரான் நடத்திய தாக்குதலுக்கு “வலுவான பதிலடியாக” இந்தத் தாக்குதல்கள் அமைந்ததாக அமெரிக்க மத்திய கட்டளையகம் தெரிவிப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈராக்கில் உள்ள ஈரானிய நிழற்படைகள் மீது அமெரிக்காவும் சவூதி அரேபியாவும் இணைந்து நடத்திய தாக்குதல்களுக்கு மறுநாளே இந்த மோதல் மீண்டும் தீவிரமடைந்துள்ளது.

கடந்த பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி அமெரிக்காவும் இஸ்ரேலும் கூட்டாக இணைந்து ஈரான் மீது இராணுவத் தாக்குதல்களைத் தொடங்கியபோது, இந்தப் போர் சில வாரங்கள் மட்டுமே நீடிக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியிருந்தார். ஆனால், தற்போது 5 மாதங்கள் கடந்துள்ள நிலையிலும் போர் முடிவுக்கு வருவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை.

இந்நிலையில், சவூதி அரேபியாவின் பாதுகாப்பு அமைச்சர் காலித் பின் சல்மானை ட்ரம்ப் சந்தித்ததாகவும், பிராந்தியத்தில் பதற்றத்தைக் குறைக்கவே சவூதி அரேபியா விரும்புவதாக அவர் தெரிவித்ததாகவும் ‘Axios’ செய்தி ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

சில நாட்கள் அமைதிக்குப் பிறகு இந்த மோதல் மீண்டும் வெடித்துள்ளது. தூதரக பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கியதால் இரு தரப்பும் சில நாட்களாகத் தாக்குதல்களை நிறுத்தி வைத்திருந்தன. டொனால்ட் ட்ரம்ப் இதனை “மிகவும் நட்புறவான பேச்சுவார்த்தைகள்” என்று குறிப்பிட்டபோதிலும், அத்தகைய பேச்சுவார்த்தைகள் எதுவும் நடைபெறவில்லை என்று தெஹ்ரான் மறுத்தது.

தாக்குதல்கள் குறித்து அறிவிக்கப்படுவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னர், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டொனால்ட் ட்ரம்ப், “நாங்கள் அவர்களை மிகவும் கடுமையாகத் தாக்கப் போகிறோம். இப்போது தாக்குவதற்கான முறை எங்களுடையது. தாக்குதல் வரப்போகிறது என்பது அவர்களுக்கும் தெரியும்; அதைச் செய்ய வேண்டாம் என்று அவர்கள் எம்மிடம் கேட்டுக்கொண்டனர்” என்றார்.

ஜோர்டானில் உள்ள அமெரிக்க விமானத் தளம் மற்றும் கட்டளை மையத்தை இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்தியதாக ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. மேலும், எச்சரிக்கைகளைப் புறக்கணித்துச் சென்ற 3 எண்ணெய் தாங்கிக் கப்பல்களை ஹோர்முஸ் நீரிணையில் தாக்கியதாகவும் கூறியுள்ளது.

ஈராக்கில் உள்ள ஈரானிய ஆதரவு பெற்ற ‘பிரபலமான அணிதிரட்டல் படைகள்’ (PMF) மீதான அமெரிக்க- – சவூதி கூட்டுத் தாக்குதலில் குறைந்தபட்சம் 20 பேர் உயிரிழந்ததாக PMF தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதலை ஈராக் அரசு தனது இறையாண்மைக்கு எதிரானது எனக் கண்டித்துள்ள போதிலும், இத்தாக்குதல்கள் ஈராக் அரசாங்கத்துடன் ஒருங்கிணைந்தே நடத்தப்பட்டதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ano

சவூதி அரேபிய உயர் நீதிமன்றில் அனோஜன் சார்பில் மேன்முறையீடு

October 12, 2026

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த அனோஜன் சிவராசா சார்பாகத் தயாரிக்கப்பட்ட மேல்முறையீடு அந்நாட்டின் உயர்நீதிமன்றத்தில் நேற்று

war

8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

October 12, 2026

நாட்டின் 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை இன்று (11) மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின்

president-1

எரிபொருள் ஒப்பந்தங்கள் திருத்தப்படும் – ஜனாதிபதி

October 12, 2026

தனியார் எரிபொருள் நிறுவனங்களுடன் ஏற்கனவே செய்துக் கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களில் திருத்தம் கொண்டுவரப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

4

“சன்ன ரக அரிசி கிலோ ரூ.75 ஆக உயர்வு!” – ஜனவரி வரை தட்டுப்பாடு நீடிக்கும் என ஆலை உரிமையாளர்கள் தகவல்!

October 11, 2026

மதுரை: தமிழகத்துக்கு வரும் சன்ன ரக அரிசி வரத்து குறைந்துள்ளதால், ஜனவரி மாதம் வரை தட்டுப்பாடு நீடிக்கும் என தமிழ்நாடு

3

“பிரதமர் மோடி முன்னிலையில் முதல்வர் விஜய் வைத்த வெயிட்டான கோரிக்கைகள் என்னென்ன?” – சென்னை ஐஐடி விழாவில் முக்கிய உரை!

October 11, 2026

சென்னை: சென்னை ஐஐடியில் நடைபெற்ற விழாவில் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் முதலமைச்சர் விஜய்

2

“தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி போராட்டம்!” – இடதுசாரி கட்சித் தலைவர்கள் கைதுக்கு பெ.சண்முகம் கடும் கண்டனம்!

October 11, 2026

சென்னை: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற இடதுசாரி

1

“பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்!” – முதலமைச்சர் விஜய்யுடன் இணைந்து பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

October 11, 2026

சென்னை: சென்னை மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த வடபழனி – பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவையை இன்று பிரதமர்

4

“எஸ்ஐஆர் நடைபெறாமல் இருந்திருந்தால் தவெக 170 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும்!” – அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் அதிரடி!

October 11, 2026

மதுரை: எஸ்ஐஆர் பணிகள் நடைபெறாமல் இருந்திருந்தால் தமிழக வெற்றிக் கழகம் 170 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும் என மதுரையில் அமைச்சர்

2

விசிக இடம்பெறுகிற தவெக அணிக்கு பா.ம.கவினர் எப்படி வாக்களிப்பார்கள்? – திருமாவளவன் கேள்வி!

October 11, 2026

சென்னை: விசிக இடம்பெறும் தவெக அணிக்குப் பாமகவினர் எப்படி வாக்களிப்பார்கள் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கேள்வி

cm-vijay-2026-10-cfee7d271014050d36d05164d028c480

பெண் குழந்தைகள் இப்பூவுலகின் அழகான கவிதைகள் – சர்வதேச பெண் குழந்தை நாளுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து

October 11, 2026

சென்னை: சர்வதேச பெண் குழந்தை நாளான இன்று (அக். 11), பெண் குழந்தைகள் இப்பூவுலகின் மிக அழகான கவிதைகள் என

3

“எம்ஜிஆருக்கும் விஜய்க்கும் என்ன தொடர்பு?” – ஏஐ வீடியோ சர்ச்சை குறித்து ஆர்.பி. உதயகுமார் கேள்வி!

October 11, 2026

மதுரை: முதலமைச்சர் விஜய்யுடன் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பேசுவது போன்ற ஏஐ காணொளிக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.

va.

தமிழ்த் திரையுலகில் எனக்கும் விஜய்க்கும் இடையே போட்டி பொறாமை இருக்கிறது – அஜித்

October 11, 2026

தமிழ்த் திரையுலகில் அஜித்–விஜய் இருவரும் நீண்டகாலமாக போட்டி நடிகர்களாக ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகின்றனர். இருவரும் ஆரம்பகாலத்தில் ‘ராஜாவின் பார்வையிலே’ திரைப்படத்தில்