இஸ்ரேலிய சுற்றுலா பிரதிநிதிகள் 33 பேர் கொண்ட குழு ஒன்று, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் வழியாக இலங்கைக்கு வந்து சேர்ந்தது.
அவர்கள் 10 நாட்கள் நாட்டில் தங்கி இலங்கையின் அனைத்து மாகாணங்களுக்கும் பயணம் செய்ய உள்ளனர்.
அவர்கள் திங்கட்கிழமை (17) அன்று மாலை 05.45 மணிக்கு துபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை FZ-579 என்ற ஃப்ளை துபாய் விமானத்தில் வந்தடைந்தனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுற்றுலா பிரதிநிதிகளால் தூதுக்குழுவிற்கு அன்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.