2025 ஆம் ஆண்டு மூன்றாம் காலாண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி, 2024 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டுடன் ஒப்பிடுகையில் 5.4 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.முக்கிய பொருளாதார நடவடிக்கைகளான விவசாயம், கைத்தொழில் மற்றும் சேவைகள் ஆகிய துறைகளின் வளர்ச்சி உயர்வடைந்துள்ளது என தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இலங்கையின் 2025 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டுக்கான உற்பத்தி அணுகுமுறையின் நடப்பு, நிலையான விலையில் மதிப்பிடப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் ஏனைய பேரின பொருளாதாரக் குறிக்காட்டிகளை தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி, 2024 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் பதிவான 3,154,148 மில்லியன் ரூபாவில் இருந்து 3,325,611 மில்லியன் ரூபாவாக அதிகரித்தள்ளது.இதற்கமைய இந்தாண்டு மூன்றாம் காலாண்டில் மொத்த உற்பத்தி வளர்ச்சி வீதம் நேரான வளர்ச்சியானது 5.4 சதவீதமான பதிவாகியுள்ளது.
அத்துடன் 2025 மூன்றாம் காலாண்டில் விவசாயம், கைத்தொழில் மற்றும் சேவை நடவடிக்கைகள் அனைத்தும் முறையே 3.6 சதவீதம், 8.1 சதவீதம் மற்றும் 3.5 சதவீதம் என்ற அடிப்படையில் உயர்வடைந்துள்ளன.
அத்துடன் மொத்த உள்நாட்டு உற்பத்தி நடப்பு விலையில், 2024 ஆம் ஆண்டின் அதே காலாண்டில் பதிவு செய்யப்பட்ட 7,457,665 மில்லியன் ரூபாவில் இருந்து 8,400,030 மில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது.இது மொத்த உள்நாட்டு உற்பத்தியின் நடப்பு விலையில் 12.6 சதவீத நேர் மாற்றத்தை பதிவு செய்துள்ளது.
பொருளாதாரத்தின் முக்கிய பிரதான நடவடிக்கைகளான விவசாயம், கைத்தொழில், மற்றும் சேவைகள் ஆகியன மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நடப்பு விலையில் முறையே 7.8 சதவீதம்,27.7 சதவீதம் மற்றும் 52.0 சதவீத பங்குகளாக காணப்பட்டுள்ளதுடன், பொருட்கள் மீதான வரிகள் மற்றும் மானியங்கள் மொத்த உற்பத்தியில் 12.6 சதவீதமாக பதிவாகியுள்ளன.