இலங்கைக்கு கடத்தவிருந்த கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல்

மண்டபம் வடக்கு கடல் வழியாக படகில் இலங்கைக்கு கடத்த குடோன் ஒன்றில் பதுக்கி வைப்பதற்காக வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட இந்திய மதிப்பில் சுமார் 50 லட்சம் ரூபாய் பெறுமதியான கஞ்சா, சமையல் மஞ்சள், ஏலக்காய், நிலக்கரி, வெளிநாட்டு சிகரெட், பூச்சிக்கொல்லி உள்ளிட்ட கடத்தல் பொருட்களை வாகனத்துடன் பறிமுதல் செய்துள்ளதோடு குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய இருவரை பிடித்து மரைன் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே நேற்று இரவு தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை சாவடியில் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அவ்வழியாக சென்ற வாகனம் ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது அந்த வாகனத்தில் சமையல் மஞ்சள் மூட்டைகள் இருந்தது தெரியவந்ததையடுத்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மஞ்சள் மூடைகளுக்கான ரசீதை வாகன ஓட்டுனரிடம் கேட்டுள்ளனர்.

சரக்கு வாகன ஓட்டுனரும் உரிய ஆவணங்களை சமர்ப்பித்ததால் வாகனம் அங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டது. இருப்பினும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டதால் சரக்கு வாகனத்தில் மஞ்சள் மூட்டைகள் அதிகளவு எடுத்து செல்வது குறித்து மரைன் காவல் ஆய்வாளர் ஜான்சிராணிக்கு தகவல் அளித்தனர்.

அதன் அடிப்படையில் அந்த சரக்கு வாகனத்தை பின் தொடர்ந்து வந்த மரைன் போலீசார் வாகனம் மண்டபம் வடக்கு கடற்கரை அருகே உள்ள டி நகர் பகுதியில் உள்ள ஒரு குடோனில் வாகனத்தில் உள்ள பொருட்களை இறக்கி பதுக்கி வைத்துக் கொண்டிருந்த போது மரைன் பொலிஸார் சுற்றி வளைத்தனர்.

பின்னர் மரைன் பொலிஸார் சரக்கு வாகனத்தை சோதனை செய்த போது இலங்கைக்கு கடத்துவதற்காக சரக்கு வாகனத்தில் கஞ்சா இரண்டு கிலோ கஞ்சா, இரண்டு டன் எடை கொண்ட சமையல் மஞ்சள் மூட்டைகள், பத்தாயிரம் வெளிநாட்டு சிகரெட்கள், 308 கிலோ நிலக்கரி, 100 பண்டல் பீடி, 56 லிட்டர் பூச்சிக்கொல்லி, 10 கிலோ ஏலக்காய், 60 கிலோ மஞ்சள் பொடி உள்ளிட்ட பொருட்கள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து வாகனத்துடன் கடத்தல் பொருட்களை பறிமுதல் செய்த மரைன் பொலிஸார் சரக்கு வாகனத்தின் உரிமையாளர் மற்றும் அந்த குடோனின் உரிமையாளர் இருவரையும் பிடித்து மண்டபம் மரைன் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொலிஸார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் கடத்தல் பொருட்கள் அனைத்தும் கொண்டுவரப்பட்டு குடோனில் பதுக்கி வைத்து பின்னர் மண்டபம் வடக்கு கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு படகில் கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த தெரிய வந்தது.

பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் சர்வதேச மதிப்பு .50 லட்சம் இருக்கலாம் என மரைன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ve

தவிசாளர் வேலு யோகராஜின் பிணை மனு நிராகரிப்பு

April 17, 2026

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நுவரெலியா பிரதேச சபையின் தவிசாளர் வேலு யோகராஜின் பிணை கோரிக்கையை

Gamini

கத்தோலிக்க திருச்சபையினர் ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகள் குறித்து திருப்தி!

April 17, 2026

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் உரிய முறையில் முன்னெடுக்கப்பட்ட வருவதாக கத்தோலிக்க திருச்சபையின் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ

iran

கைதான இந்திய கடற்தொழிலாளர்கள் விளக்கமறியலில்

April 17, 2026

கிளிநொச்சி – இரணைதீவு கடற்பரப்பிற்குள் கடந்த 9ஆம் மற்றும் 14ஆம் திகதிகளில் அத்துமீறி மீன் பிடியில் ஈடுபட்டிருந்த குற்றச்சாட்டில் கைதான

srines

இனப்பிரச்சினைக்கு பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது!

April 17, 2026

பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்த்துவிட்டால் இனப்பிரச்சினை தீர்ந்துவிடும் என்று இவர்கள் நினைக்கின்றார்கள், அப்படியல்ல. நிச்சயமாகப் புரையோடிப் போயிருக்கின்ற இனப்பிரச்சினை தீர்க்கப்படுமாக இருந்தால்

kap

ஸ்ரீலங்கன் முன்னாள் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளரின் பிணை மனு நிராகரிப்பு

April 17, 2026

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களைக் கொள்வனவு செய்தபோது இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அந்த

i

இலங்கை வருகிறார் இந்தியத் துணை குடியரசுத் தலைவர்

April 17, 2026

இந்தியத் துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், 2026 ஏப்ரல் 19 முதல் 20 வரை இலங்கைக்கு அதிகாரப்பூர்வப் பயணம்

qr

நாளை நள்ளிரவு முதல் மீண்டும் QR முறைமை

April 17, 2026

நாளை (18) நள்ளிரவு முதல் பெற்றோல் வாகனங்களுக்காக மீண்டும் QR முறைமை நடைமுறைப்படுத்தப்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

jail

மல்லாவியில் இரு பெண்களை துஸ்பிரயோகம் செய்த மூவர் கைது

April 17, 2026

மல்லாவியில் இரு பெண்களை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் மத போதகர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். துஸ்பிரயோகத்திற்கு உள்ளன இரு

tv

த.வெ.க. தேர்தல் அறிக்கை வெளியீடு

April 17, 2026

ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு ஒரு பவுன் தங்கம் வழங்கப்படும். ஒவ்வொரு வீட்டுக்கும் 200 யுனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்பன

wat

நான்கு நாட்களில் 20 பேர் நீரில் மூழ்கிப் பலி!

April 17, 2026

கடந்த ஏப்ரல் 12 முதல் நேற்று (16) வரையிலான நான்கு நாட்களில் மட்டும், நீரில் மூழ்கி 20 பேர் துரதிர்ஷ்டவசமாக

jey

நிலக்கரி கொள்வனவு ஊழல் அழுத்தங்கள்; எரிசக்தி அமைச்சர் இராஜினாமா!

April 17, 2026

எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தனது பதவியை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பான உத்தியோகபூர்வ

sr air

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் முன்னாள் பிரதான அதிகாரிக்கு மீண்டும் விளக்கமறியல்

April 17, 2026

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு ஏர்பஸ் விமானங்களைக் கொள்வனவு செய்தபோது லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அந்த நிறுவனத்தின்