இந்திய அரசாங்கம் இலங்கைக்கு அத்தியாவசிய மருந்துகள் மற்றும் உலர் உணவுப் பொருட்களை நன்கொடையாக வழங்கியுள்ளது.
17 அத்தியாவசிய மருந்துகள் மற்றும் 14,200 கிலோவிற்கும் அதிகமான உலர் உணவு அடங்கிய தொகுதியே இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கான இந்திய துணை உயர் ஸ்தானிகர் சத்யஞ்சல் பாண்டே பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸவிடம் இந்த பொருட்களை ஒப்படைத்தார்.
இலங்கை சுகாதார அமைச்சரின் வேண்டுகோளைத் தொடர்ந்து இந்த நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.