இன, மத பிளவுகளின் காலம் முடிந்தது; ஒற்றுமை சமூகத்தை கட்டியெழுப்ப அரசு அர்ப்பணிப்பு – விஜித ஹேரத்

குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக இனவாதம் மற்றும் மதவாதத்தை உருவாக்கி நாட்டை பிளவுபடுத்திய கடந்த காலம் முடிவுக்கு வந்துள்ளது. தற்போது அனைத்து இன மக்களும் இணைந்து வாழக்கூடிய ஒழுக்கமான மற்றும் நாகரிகமான சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கு புதிய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறது என  வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர்  விஜித ஹேரத் தெரிவித்தார்.

அகில இலங்கை முஸ்லிம் இளைஞர் சம்மேளனத்தின் 76ஆவது ஆண்டு பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (28) கொழும்பு தாமரைக் கோபுர வளாகத்தில் நடைபெற்றது. அதில்  பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

கடந்த காலங்களில் எமது பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து நாடு வங்குரோத்து நிலையை அடைந்திருந்தது. பல வருட கால கசப்பான யுத்தத்திற்குப் பின்னர், நாட்டை தேசிய ஒற்றுமையுடன் கட்டியெழுப்புவதற்கு எமக்கு ஒரு பொன்னான வாய்ப்பு கிடைத்திருந்த போதிலும், குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக யுத்தத்திற்குப் பின்னரான காலப்பகுதிகளில் மிகவும் திட்டமிட்ட வகையில் இனவாதமும் மதவாதமும் தூண்டப்பட்டு நாடு மீண்டும் பிளவுபடுத்தப்பட்டது.

ஆனால், 2024 ஆம் ஆண்டிற்குப் பிறகு இவ்வாறான எந்தவொரு இனவாதம் அல்லது மதவாத மோதல்களுக்கு இடமில்லை , நாட்டின் பொருளாதாரம், ஒழுக்கம், சட்டம் மற்றும் நாகரிகத்தை கட்டியெழுப்புவதற்கு சிங்கள, தமிழ், முஸ்லிம், பறங்கியர் மற்றும் மலாய் என நாம் அனைவரும் ஒற்றுமையுடன் இணைந்து வாழ வேண்டும்.

முஸ்லிமாக இருந்தாலும் சரி, சிங்களவராக இருந்தாலும் சரி, நாம் அனைவரும் மனிதர்கள், எம்மிடையே எந்த வேறுபாடும் இல்லை. மொழி, மதம், சாதி அல்லது வேறு எந்தப் பாகுபாடும் இன்றி நாம் அனைவரும் ஒரே தாயின் பிள்ளைகளைப் போல ஒற்றுமையாக இருக்க வேண்டும்.

அத்துடன், 70 ஆண்டுகளுக்கும் மேலாக அகில இலங்கை முஸ்லிம் இளைஞர் சம்மேளனம் நாட்டின் அனைத்து இன மக்களுக்காகவும் பல சேவைகளை மேற்கொண்டு வந்திருக்கிறது. அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் சூறாவளி நிலையின்போது, மாத்தறை மற்றும் காலியிலிருந்து வந்த முஸ்லிம் இளைஞர் குழுக்கள், தமக்கு அறிமுகமில்லாத பதுளை மற்றும் மல்வானை போன்ற பிரதேசங்களுக்குச் சென்று, தாமாக முன்வந்து நிவாரணப் பணிகளை வழங்கியதன் மூலம், இஸ்லாம் போதிக்கும் சகோதரத்துவத்தை சமூகத்திற்கு நடைமுறையில் வெளிப்படுத்தியிருக்கிறது  என்றார்.

dead'

மகனைத் தேடிச் சென்ற தாய் கிணற்றில் விழுந்து பலி : 10 வயது மகள் மாயம்!

June 29, 2026

கலேவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தன்னகொம்புர, துபார வாவிக்கு அருகில் உள்ள விவசாயக் கிணறு ஒன்றில் விழுந்து தாயொருவர் உயிரிழந்துள்ளதுடன், அவரது

sa

சவூதியில் ஹெலிகொப்டர் விபத்து – 14 பேர் பலி

June 29, 2026

சவூதி அரேபியாவில் ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் சுமார் 14 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு எரிசக்தி அமைச்சின் உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

bens

பென் ஸ்டோக்ஸ் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு

June 29, 2026

இங்கிலாந்து ஆடவர் டெஸ்ட் அணியின் தலைவர் பென் ஸ்டோக்ஸ் , சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான

Ananda-Wijepala (1)

எதிர்வரும் காலப்பகுதியில் பிரதான தரப்பினர் பலர் கைது செய்யப்படுவார்கள் – ஆனந்த விஜேபால

June 29, 2026

போதைப்பொருள் பாவனைக்கு எதிராக முன்னெடுத்துள்ள நடவடிக்கைளில் தற்போது நெத்தலிகளுடன் சுறாக்களும் அகப்படுகின்றன.அரசியல் ஆசிர்வாதத்துடன் தான் போதைப்பொருள் வர்த்தகமும்,பாதாளக்குழுக்களும் எழுச்சிப் பெற்றன.

vijitha pa

இன, மத பிளவுகளின் காலம் முடிந்தது; ஒற்றுமை சமூகத்தை கட்டியெழுப்ப அரசு அர்ப்பணிப்பு – விஜித ஹேரத்

June 29, 2026

குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக இனவாதம் மற்றும் மதவாதத்தை உருவாக்கி நாட்டை பிளவுபடுத்திய கடந்த காலம் முடிவுக்கு வந்துள்ளது. தற்போது அனைத்து

ravikaran11

காணிகளை விடுவிக்க வியுறுத்தி ஐந்தாவதுநாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாப்புலவு மக்கள்; ரவிகரன் எம்.பி பங்கேற்பு

June 29, 2026

முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட கேப்பாப்பிலவில் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்ட தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்கவலியுறுத்தி காணிகளுக்குரிய மக்கள் தொடர்

Chandika

அரச வைத்திய அதிகாரிகள் சங்க புதிய தலைவர்

June 29, 2026

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் புதிய தலைவராக வைத்தியர் சந்திக எப்பிட்டகடுவ தெரிவு செய்யப்பட்டுள்ளார். அச்சங்கத்தின் 2026/27 ஆம் ஆண்டுக்கான

ear

ஆப்கானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

June 29, 2026

ஆப்கானிஸ்தானின் ஹிந்து-குஷ் மலைப்பகுதியை மையமாகக் கொண்டு நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2

jos sta

இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் தெளிவற்ற கல்விச் சீர்திருத்தங்களால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி – ஜோசப் ஸ்டாலின்

June 29, 2026

இலங்கையில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் கல்விச் சீர்திருத்தங்கள் எவ்வித முறையான திட்டமிடலும் இன்றி, தன்னிச்சையாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. கல்வி முறையில்

dru

நாட்டில் கடல் மற்றும் வான் வழியாக கடத்தப்படும் போதைப்பொருட்களைத் தடுக்க தீவிர நடவடிக்கை

June 29, 2026

நாட்டின் இளைய தலைமுறையினரையும், சிறுவர்களையும் குறிவைத்து மேற்கொள்ளப்படும் உள்நாட்டு மற்றும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பை முற்றாக ஒழிக்கும் நோக்கில்,

Ja GH

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு இதய நோய்களைக் கண்டறிய செயற்கை நுண்ணறிவுப் பரிசோதனை கூடம்

June 29, 2026

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில், ரூ.300 மில்லியன் செலவில் நிறுவப்பட்ட செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்துடன் கூடிய அதிநவீன Cath Lab

FA4C2HXLHFBYDEUNJTX3UHXEII

பிராம்ப்டனில் எஸ்யூவி (SUV) ரக வாகனத்துடன் மோதியதில் காவல்துறை அதிகாரி மருத்துவமனையில் அனுமதி

June 29, 2026

ஜூன் 28 அன்று பிராம்ப்டனில் உள்ள ஹுரொன்டாரியோ வீதி (Hurontario Street) மற்றும் பொவைர்ட் டிரைவ் வெஸ்ட் (Bovaird Drive