இந்த வரவு – செலவுத் திட்டம் ஊடாக பாரியதொரு மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்க முடியாது – சாணக்கியன்

தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகள் பற்றி ஜனாதிபதியிடம் கலந்துரையாடுவதற்கு அனுமதி கோரி ஐந்து மாதங்கள் காத்திருக்கிறோம். இதுவரையில் பதிலேதும் கிடைக்கவில்லை. வரவு – செலவுத் திட்டத்தின்போது கடுமையான தீர்மானம் எடுப்போம். தமிழர்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு அரசாங்கம் நிலையான தீர்வினை பெற்றுக்கொடுக்கவில்லை என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.

வரவு – செலவுத் திட்டம் தொடர்பில் கொழும்பில் நேற்று (5) நடைபெற்ற எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

2026ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை ஜனாதிபதி நாளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார். இந்த வரவு – செலவுத் திட்டம் ஊடாக பாரியதொரு மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்க முடியாது.

ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் அரசாங்கம் அரச சேவையாளர்களின் சம்பளத்தை ஆறு மாதத்துக்கு ஒருமுறை அதிகரிப்பதாகவும், வரி குறைப்பதாகவும், அத்தியாவசிய உணவு பொருட்கள் மற்றும் மின்கட்டணத்தை குறைப்பதாகவும் குறிப்பிட்டது. ஆட்சிக்கு வந்தவுடன் ஏதும் நடக்கவில்லை.

சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட செயற்திட்டத்துக்கு அமைவாகவே அரசாங்கம் செயற்படுகிறது. தேர்தல் காலத்தில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாயின் அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட செயற்திட்டத்தில் இருந்து விலக வேண்டும்.

அரசியல் கட்சிகளில் உள்ள அனைவரும் தூய்மையானவர்கள், சிறந்தவர்கள் என்று எவருக்கும் சான்றிதழ் வழங்க முடியாது. தேசிய மக்கள் சக்தி தேர்தல் காலத்தில் தமது கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் தூய்மையானவர்கள், ஏனைய அரசியல் கட்சி உறுப்பினர்கள் மோசடியாளர்கள் என்று குற்றஞ்சாட்டியது. தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஒருவர் மீது போதைப்பொருள் குற்றச்சாட்டு தற்போது முன்வைக்கப்பட்டுள்ளதால் அனைவரும் அதனை பற்றியே பேசுவார்கள்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் பற்றி ஜனாதிபதி தேர்தல் காலத்தில் பல விடயங்களை பேசினார். ஆட்சிக்கு வந்தவுடன் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதாக குறிப்பிட்டார்கள். ஆனால் தற்போது சிறைக்கைதிகள் எவருமில்லை என்று குறிப்பிடுகிறார்கள்.

பாரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் தான் தமிழ் மக்கள் இந்த அரசாங்கத்துக்கு ஆணை வழங்கினார்கள். இந்த ஒருவருடத்தில் தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு அரசாங்கம் எந்தவொரு நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.

தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகள் மற்றும் அரசியலமைப்பு சார்ந்த பிரச்சினைகள் பற்றி ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவதற்கு கடந்த ஜூன் மாதம் அனுமதி கோரியிருந்தோம். இதுவரையில் எமக்கு எவ்வித பதிலும் கிடைக்கவில்லை. ஆகவே வரவு செலவுத் திட்டத்தின் போது கடுமையான தீர்மானத்தை எடுப்போம்.

எதிர்வரும் 21ஆம் திகதி அரசாங்கத்துக்கு எதிராக பேரணிக்கு எமது கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது, எனக்கும் தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுக்கப்பட்டது. இருப்பினும் நாங்கள் செல்ல போவதில்லை என்றார்.

boa

இலங்கை மீனவர்களுக்கு அறிவுறுத்தல்

March 5, 2026

இலங்கைக்குச் சொந்தமான கடற்பரப்பைத் தாண்டிச் சென்று மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், அனைத்து

jail

தவிசாளரை அவதூறாகப் பேசிய இளைஞனுக்கு விளக்கமறியல்

March 5, 2026

வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளரை அவதூறாகப் பேசி, அவரது கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை

ganja

திடீர் சோதனை; கஞ்சாவுடன் கல்விசாரா ஊழியர் கைது

March 5, 2026

புத்தல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யுதகனாவ பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது, இரண்டு கிலோ உலர்ந்த

cen

ட்ரம்பைக் கட்டுப்படுத்தும் பிரேரணை தோல்வி!

March 5, 2026

ஈரானுக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேற்கொள்ளும் இராணுவ நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்காக அந்நாட்டு செனட் சபையில் முன்வைக்கப்பட்ட பிரேரணை

he

கரடியனாறு பகுதியில் கனரக வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய பொலிஸார்

March 5, 2026

மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் இருந்து சட்டவிரோதமாக ஆற்று மணல் ஏற்றிச் சென்ற கனகர வாகனம், பொலிஸாரின் தடையை மீறி நிறுத்தாமல்,

ch

உயர் தர வளர்ச்சிக்கான புதிய சமிக்ஞைகளை வெளியிடவுள்ள சீனா

March 5, 2026

வருடாந்திர தேசிய “Two Sessions” கூட்டங்கள் நெருங்கி வரும் நிலையில், சீனா தனது பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்துக்கான புதிய

one

மாணவர்களிடையே போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வு

March 5, 2026

நாட்டில் போதைப்பொருள் பயன்பாட்டினால் ஏற்படும் அழிவுகரமான சமூகப் பாதிப்புகளைத் தடுக்கும் நோக்கில், “நாடே ஒன்றாக” எனும் தேசிய பணித்திட்டத்தின் கீழ்

veth

2026ஆம் ஆண்டுக்குரிய அபிவிருத்தி வேலைத் திட்டங்களை விரைவாக நிறைவு செய்யுங்கள் – ஆளுநர் பணிப்பு

March 5, 2026

2026ஆம் ஆண்டுக்குரிய அபிவிருத்தி வேலைத் திட்டங்களை எவ்வளவு விரைவாக நிறைவு செய்ய முடியுமோ அவ்வளவு துரிதமாக நிறைவு செய்யுமாறும், அதற்காகத்

mu

அகில இலங்கை கிறிஸ்தவ அபிவிருத்தி ஒன்றிய தலைவரின் நல்லெண்ண விஜயம்

March 5, 2026

மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகைக்கும் முன்னாள் பிரதமரின் மத விவகாரங்களுக்கான இணைப்பு செயலாளர் எஸ். சந்துரு

ceb

மின்சார விநியோக அமைப்பில் தொழில்நுட்பக் கோளாறு

March 5, 2026

அநுராதபுரம் மற்றும் வவுனியா இடையேயான மின்சார விநியோக அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால், நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் மின்தடை

f

யாழ். மாவட்ட குறிப்பிட்ட சில நிலையங்களிலேயே எரிபொருள் விநியோகம்

March 5, 2026

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள இலங்கை பெற்றோலிய கூட்டு தாபனத்தின் குறிப்பிட்ட சில எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் எரிபொருள் விநியோகம் இடம்பெறவுள்ளதாக

kanaf

தையிட்டி விகாரையில் இடம்பெற்ற பொலிஸார் தாக்குதல்; மனிதவுரிமை ஆணைக்குழு விசாரணை

March 5, 2026

தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட வேளை கைது செய்யப்பட்டவர்கள் மீது தாம் குறைந்தளவு பல பிரயோகத்தையே மேற்கொண்டதாக மனிதவுரிமை