இந்தியா கூட்டாட்சிக்கான அழுத்தத்தை கொடுக்கவேண்டும் – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன்

ந்தியா தனது வரலாற்றுத் தார்மீகக் கடமையை நிறைவேற்ற வேண்டும். ஒற்றையாட்சி அரசியல் அமைப்பை ஒழித்துஇ தமிழர்களின் தேசம் மற்றும் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் ஒரு கூட்டாட்சித் தீர்வை ஏற்படுத்த அழுத்தம் கொடுக்க வேண்டுமென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செ.கஜேந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் நடைபெற்ற அன்னை பூபதியின் நினைவூர்தி படுவான்கரைக்கு சென்றவுடன்அங்கு நடைபெற்ற அஞ்சலி நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
அங்கு அவர்இ தொடர்ந்து உரையாற்றுகையில்
அன்னை பூபதியின் நினைவேந்தல் மட்டக்களப்பில் உணர்வுபூர்வமாக நடைபெற்று வருகிறது. முப்பத்தெட்டு ஆண்டுகளுக்கு முன்னர் எமது தேசத்தின் விடுதலைக்காகத் தனது இன்னுயிரைத் தியாகம் செய்ய முன்வந்த அந்த உயர்ந்த தாயின் இலட்சியம் இன்றும் முழுமையாக நிறைவேறவில்லை.

எமது தேசத்தின் எதிர்கால சந்ததியினரின் பாதுகாப்பு மற்றும் கௌரவமான வாழ்விற்காகவே அவர் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தார். இழந்த எமது உரிமைகளை மீட்டெடுக்கும் வரை இந்த லட்சியப் பயணம் தொடரும் என்பதை இந்த நினைவேந்தல் நிகழ்வு மீள உறுதிப்படுத்துகிறது.
தனது குடும்பம் மற்றும் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த எண்ணங்கள் மனதிற்குள் ஓடிக்கொண்டிருந்த போதிலும் தேசத்தின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு 12 நாட்கள் உணவின்றிஇ வெறும் நீரை மட்டும் அருந்தி அவர் உறுதியுடன் போராடினார்.

தனது இலட்சியத்திற்காக உயிரைத் தியாகம் செய்த அந்தத் தாயை நினைவுகூர வேண்டியது அனைவரினதும் கடமையாகும். இந்தியா இலங்கைக்கு வந்ததன் நோக்கம் தமிழ் மக்களுக்கு விடுதலையைப் பெற்றுத் தருவதாகவே இருந்தது. அதன் அடிப்படையிலேயே இலங்கை-இந்திய ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால்இ ஜே.ஆர். ஜெயவர்த்தன அந்த ஒப்பந்தத்தின் அம்சங்களைப் புறந்தள்ளி 13ஆம் திருத்தச் சட்டத்தைத் திணித்துத் தமிழர்களை அடிமைப்படுத்தும் செயலை முன்னெடுத்தார்.

தமிழர்கள் அந்த 13ஆம் திருத்தச் சட்டத்தை ஓர் அடிமைச் சாசனமாகவே கருதி நிராகரித்தனர். எமது தேசத்தின் இறமை மற்றும் சுயநிர்ணய உரிமைக்காகத் தொடர்ந்து போராடி வருகிறோம். 38 ஆண்டுகளாகியும் நாம் இன்னும் ஒடுக்குமுறைக்குள்ளேயே வாழ்ந்து வருகிறோம் எங்களுக்கு இன்னும் சுதந்திரம் கிடைக்கவில்லை.

இந்தியா தனது வரலாற்றுத் தார்மீகக் கடமையை நிறைவேற்ற வேண்டும் என நாம் கோருகிறோம். ஒற்றையாட்சி அரசியல் அமைப்பை ஒழித்து தமிழர்களின் தேசம் மற்றும் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் ஒரு கூட்டாட்சித் தீர்வை ஏற்படுத்த இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றார்.

d

வவுனியாவிலும் அன்னை பூபதியின் நினைவு தினம் அனுஷ்டிப்பு

April 19, 2026

தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினால் அன்னை பூபதியின் 38வது ஆண்டு நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை (19) உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

s

கடற்படையினரால் கணவர் சித்திரவதை: மனைவி உண்ணாவிரதப் போராட்டம்

April 19, 2026

மட்டக்களப்பு மாவட்டத்தில், கடற்படையினரால் மீனவரான தனது கணவர் சித்திரவதை செய்யப்பட்டமைக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை. எனவே தாம் மட்டக்களப்பு உதவி

crim

மட்டக்களப்பில் 06 நாட்களில் 4 கொலைகள்

April 19, 2026

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 6 தினங்களில் 4 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதுடன், அவற்றுடன் தொடர்புடைய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக

ca do

கனடா பொருளாதார மந்தநிலையைச் சந்திக்க 30% வாய்ப்பு?

April 19, 2026

உலகளாவிய பொருளாதார அழுத்தங்கள் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், கனடா பொருளாதார பின்னடைவைச் சந்திப்பதற்கான சாத்தியக்கூறுகள்

lax

நிலக்கரி ஊழல் விசாரணை அறிக்கையை சட்டமா அதிபரிடம் ஒப்படையுங்கள் – லக்ஷ்மன் கிரியெல்ல

April 19, 2026

நிலக்கரி கொள்வனவில் இடம்பெற்ற ஊழல் குறித்து பல முக்கிய தகவல்களை வெளிப்படுத்தும் தணிக்கை அறிக்கையை நாடாளுமன்றத்தின் ஊடாக உடனடியாக சட்டமா

har

இந்தியத் துணைத் தலைவர் மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய சந்திப்பு

April 19, 2026

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்கள், இன்று (19) கொழும்பு அலரி

Geethanath

அகதிகள், மீனவர் பிரச்சினை மற்றும் போக்குவரத்துத் தொடர்பு; இந்தியா-இலங்கை பேச்சு நடத்த வேண்டும் – கீதாநாத் காசிலிங்கம்

April 19, 2026

இந்தியக் குடியரசுத் துணைத் தலைவரின் இந்த உயர்மட்ட விஜயமானது வெறும் சம்பிரதாய நிகழ்வாக அமையாமல், பல தசாப்தங்களாகத் தீர்க்கப்படாமல் உள்ள

ar

ரஷ்ய யுவதி இலங்கைப் புகையிரதத்தில் மோதி உயிரிழப்பு

April 19, 2026

பெலியத்தவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த அதிவேகப் புகையிரதத்தில் மோதி 23 வயதுடைய ரஷ்ய நாட்டுப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தின்

sc

கனடாவில் கனமழை எச்சரிக்கை: ஒன்ராறியோ மற்றும் கியூபெக் மக்கள் வெள்ளத்தினால் பாதிப்பு

April 19, 2026

ஒன்ராறியோ மற்றும் கியூபெக் மாகாணங்களின் பல பகுதிகளில் 10 முதல் 25 மில்லிமீட்டர் வரை மழை பெய்யக்கூடும் என முன்னறிவிப்பு

po

ஸ்கார்பரோவில் அதிகாலை துப்பாக்கிச் சூடு: வீட்டின் முற்பகுதி சேதம்

April 19, 2026

ஸ்கார்பரோவில் உள்ள குடியிருப்பு ஒன்றின் முன் கதவுப் பகுதியை இலக்கு வைத்து இன்று அதிகாலை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. செஸ்டர்

trump

ஈரான் – அமெரிக்கா பேச்சுவார்த்தை: பாகிஸ்தானுக்குச் செல்லும் அமெரிக்கக் குழு

April 19, 2026

ஈரானுடனான பதற்றங்களைத் தணிக்கும் நோக்கில், அமெரிக்கப் பிரதிநிதிகள் குழுவொன்று பேச்சுவார்த்தைக்காக பாகிஸ்தானுக்குப் பயணமாகவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது

Cana Sri

கனடாவில் இலங்கையர் கொலை!

April 19, 2026

கனடாவின் அஜாக்ஸில்வீடுபுகுந்து தாக்கப்பட்ட சம்பவத்தில் கொல்லப்பட்ட 24 வயது இளைஞரை காவல்துறை அடையாளம் கண்டுள்ளது டரம் பிராந்திய காவல்துறை செவ்வாய்க்கிழமை