இலங்கையின் உள்நாட்டு போரின் போது உரிய ஆவணங்கள் இன்றி தமிழ்நாட்டிற்கு தப்பிச்சென்று பல வருடங்களாக அங்கு முகாம்களில் வாழும் இலங்கை தமிழ் அகதிகள் சுயவிருப்பத்துடன் இலங்கைக்கு திரும்புவதற்கான வசதிகளை செய்து கொடுப்பதற்கான நடவடிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இந்தியாவில் உள்ள இலங்கை தூதரகங்கள் மற்றும் ஐநா அமைப்புகளின் உதவியுடன் இலங்கையர்கள் என உறுதிப்படுத்தப்பட்ட பலர் தற்போது இலங்கை திரும்புவதற்கு விருப்பம் வெளியிட்டுள்ளனர் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
பொதுப்பாதுகாப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட அங்கீகார முன்மொழிவின் கீழ் 2006ம் ஆண்டு ஆகஸ்ட் முதலாம் திகதிக்கு முன்னர் உரிய ஆவணங்கள் இன்றி வெளியேறியவர்களுக்கு இந்தியாவில் அவர்கள் வசிக்கும் மாநிலங்களின் உளவுத்துறையின் வெளியேற்ற அனுமதி மற்றும் கொலை போன்ற குற்றங்களில் ஈடுபடவில்லை என்ற அனுமதிதேவைப்படும்