இங்கிலாந்து பிறீமியர் லீக்கில், பிறைட்டன் அன்ட் ஹொவ் அல்பியனின் மைதானத்தில் புதன்கிழமை (22) நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 0-3 என்ற கோல் கணக்கில் செல்சி தோற்றது.
பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் 70 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் ஆர்சனல் உள்ளது. 67 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் மன்செஸ்டர் சிற்றி காணப்படுகின்றது. மன்செஸ்டர் யுனைட்டெட்டும் அஸ்தன் வில்லாவும் தலா 58 புள்ளிகளைப் பெற்றுள்ளபோதும் கோலெண்ணிக்கை அடிப்படையில் முறையே மூன்றாம், நான்காமிடங்களில் காணப்படுகின்றன. இதில் மற்றைய அணிகளை விட சிற்றி ஒரு போட்டி குறைவாக விளையாடியுள்ளது.