அல்பர்ட்டா -ஜிரோக்ஸ்வில்கிராமத்தைத் தாக்கிய பயங்கர சூறாவளி: வீடுகள், வணிக நிறுவனங்கள் பலத்த சேதம்!

ஜிரோக்ஸ்வில்: கனடாவின் வடமேற்கு அல்பர்ட்டா (Alberta) மாகாணத்தில் நேற்று இரவு வீசிய சக்திவாய்ந்த சூறாவளி (Tornado), மரங்களை வேரோடு பிடுங்கியதுடன், ஜிரோக்ஸ்வில் (Girouxville) கிராமத்திலுள்ள பல வீடுகளின் கூரைகளையும் தூக்கி வீசிப் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

திங்கட்கிழமை மாலை வீசிய இந்தச் சூறாவளி காரணமாகப் பரந்தளவிலான சொத்துச் சேதங்கள் ஏற்பட்டுள்ளதுடன், பீஸ் ரிவர் (Peace River) பகுதிக்கு தெற்கே சுமார் 55 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள, 300 குடியிருப்பாளர்களைக் கொண்ட அந்த சிறிய கிராமத்தின் பெரும்பாலான பகுதிகளுக்கான மின்சார விநியோகமும் முற்றாகத் துண்டிக்கப்பட்டுள்ளது.

இன்று (செவ்வாய்க்கிழமை) காலை வெளியிடப்பட்ட அறிக்கையில், கனடாவின் சூறாவளிச் செயற்பாடுகளைக் கண்காணிக்கும் ‘நோர்த் ஆர்ன் டொர்னாடோஸ் ப்ராஜெக்ட்’ (Northern Tornadoes Project – NTP) அமைப்பு, திங்கட்கிழமை மாலை வடமேற்கு அல்பர்ட்டாவின் பீஸ் ரிவர் பகுதியில் “குறைந்தது ஒரு சூறாவளி” பதிவாகியுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது.

நோக்கி வந்த சுழல்காற்று:

இது குறித்து ஜிரோக்ஸ்வில் கிராமத்தின் பிரதான அதிகாரி ரைலி முல்லன் (Ryley Mullen) ஊடகங்களுக்குத் தெரிவிக்கையில், திங்கட்கிழமை இரவு 8 மணியளவில் பலத்த காற்று மற்றும் பலத்த மழையுடன் ஒரு இராட்சதச் சுழல்காற்று (Funnel cloud) கிராமத்தை நோக்கி நகர்ந்ததாகக் குறிப்பிட்டார்.

“சமூகக் கால்பந்து மைதானத்தில் பயிற்சி பெற்றுக்கொண்டிருந்த சிறுவர்கள், அடிவானத்தில் சாம்பல் நிறத்தில் சுழன்றுகொண்டிருந்த அந்த இராட்சதக் காற்றைக் கண்டு பீதியடைந்தனர். அது நேராக எங்களை நோக்கித்தான் வந்தது. அந்தச் சுழல் மேகம் எங்கள் தலைக்கு மேலாகவே கடந்து சென்றது”

என்று முல்லன் விவரித்தார்.

கடுமையான காற்று கிராமத்தைக் கடந்தபோது, சில சொத்துக்களின் கூரைகள் முற்றாகப் பெயர்க்கப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், மின் கம்பங்கள் மற்றும் மரங்கள் முறிந்து விழுந்ததில் சிறிய கொட்டகைகள் மற்றும் வெளிக்கட்டிடங்கள் அவற்றின் அடித்தளத்துடன் பெயர்க்கப்பட்டுத் தூக்கி வீசப்பட்டதாகக் கூறினார். இந்தச் புயலின் பாதையில் சுமார் 30 முதல் 40 கட்டிடங்கள் வரை சேதமடைந்துள்ளதாக அவர் மதிப்பிட்டுள்ளார்.

வியக்கவைத்த பெருமழை:

இந்தச் சூறாவளியின் சேதப் பாதை மிகவும் குறுகியதாகவும், எதிர்பாராத விதமாகவும் அமைந்திருந்தது. மிகக் கடுமையாகச் சேதமடைந்த சில கட்டிடங்களுக்கு அருகிலிருந்த பிற கட்டிடங்கள் எந்தவொரு பாதிப்பும் இன்றி அப்படியே காணப்பட்டன.

“மரங்கள் விழுந்து கிடக்கின்றன. பல கட்டிடங்களின் கூரைகளும் ஓடுகளும் காணாமல் போயுள்ளன. சிலரது வீட்டுப் பக்கத்துக் கொட்டகைகள் காற்றில் பறந்து வந்து மற்றவர்களின் வீட்டின் கூரைகள் மேல் விழுந்து கிடக்கின்றன. என் வாழ்நாளில் இவ்வளவு பலத்த மழை பெய்து நான் பார்த்ததே இல்லை. இது நம்ப முடியாத ஒன்றாக இருந்தது”

என்று முல்லன் மேலும் கூறினார்.

தற்போது உள்ளூர் நகராட்சி ஊழியர்களும் அவசரக்கால மீட்புக் குழுவினரும் கிராம மக்களுடன் இணைந்து இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதிர்ஷ்டவசமாக இந்த இயற்கை அனர்த்தத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகவில்லை.

இப்பகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரும் வனத்துறை அமைச்சருமான டாட் லோவன் (Todd Loewen) விடுத்துள்ள சமூக ஊடகப் பதிவில், தான் இரவோடு இரவாகக் கிராமத்திற்குச் சென்று சேத விபரங்களைப் பார்வையிட்டதாகவும், மீட்புப் பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்

nav

‘தீமையின் மீது நன்மை பெற்ற வெற்றி’ – இன்று ஆரம்பிக்கிறது நவராத்திரி விரதம்!

October 11, 2026

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரி விரதம் இன்று (11) தொடங்குகிறது. நவராத்திரியின் முதல் மூன்று நாட்களும் அம்பிகையை துர்க்கையாக,

ch

சீனத் தூதுவர் – விஜித ஹேரத் சந்திப்பு

October 11, 2026

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைவதையும், இரு நாடுகளுக்கும் இடையிலான இறப்பர் – அரிசி

sm

புகையை வெளியேற்றும் வாகனங்களை கண்டறிவதற்கு புகைப்படப் பிரிவு

October 11, 2026

அதிகளவில் புகையை வெளியேற்றும் வாகனங்களைக் கண்டறிவதற்காக, மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகனப் புகை பரிசோதனைத் திட்டத்தின் கீழ் விசேட புகைப்படப்

acci main

மெட்ரோ பஸ்ஸுடன் மோதிய குற்றச்சாட்டில் பஸ் சாரதி கைது

October 11, 2026

கொழும்பு – கெஸ்பேவ வீதியில், மிரிஸ்வத்த பகுதியில் மெட்ரோ பஸ்ஸுடன் வேண்டுமென்றே மோதியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், 44 வயதுடைய

chow

சௌவின் முன்னிலையை நெருங்கும் பிரட்போர்ட்: புதிய கருத்துக்கணிப்பு

October 11, 2026

செப்டம்பர் இறுதிப் பகுதியில் வெளியிடப்பட்ட முந்தைய கருத்துக்கணிப்புடன் ஒப்பிடுகையில் சௌவின் முன்னிலை 6 புள்ளிகளிலிருந்து 2.9 புள்ளிகளாகக் குறைந்துள்ளது. ரொறன்ரோ

Ont

பார்வையற்ற வாக்காளருக்கு ரகசியமாக வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டது? Ontario மனித உரிமைகள் தீர்ப்பாயத்தில் விசாரணை!

October 11, 2026

வாக்களிக்கும் போது தனது வாக்கின் ரகசியத்தன்மையையும் சுயாதீனத்தையும் உறுதிசெய்யத் தவறியதன் மூலம், ‘ஒன்டாரியோ தேர்தல் ஆணையம்’ தனது மனித உரிமைகளை

Sajith-Premadasa-2 (1)

1983 கறுப்பு ஜூலை நிகழ்வானது நமது நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு கறுப்புப் புள்ளியாகும்  

October 10, 2026

1983 கறுப்பு ஜூலை நிகழ்வானது நமது நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு கறுப்புப் புள்ளியாகும். இச்சம்பவத்தினால் அநீதிக்குள்ளான தமிழ் சமூகத்திடம்

trum

நோபல் பரிசுக்கான அத்தனை தகுதியும் தனக்கு இருப்பதாக ட்ரம்ப் கருத்து

October 10, 2026

“அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தான் 2026-ம் ஆண்டுக்கான நோபல் அமைதி பரிசைப் பெறுவதற்கான அத்தனை தகுதிகளும் உள்ளது. ஆனால்

WhatsApp Image 2026-10-06 at 23.09.24

Majestic Asian உணவுத் திருவிழா!

October 10, 2026

Scarborough-வில் இன்று தொடக்கம் நடைபெறவுள்ள Majestic Asian Food Festival-இல் மறக்க முடியாத உணவுத் திருவிழாவில் கலந்து மகிழ்ந்து களிப்பாகக்

1200-675-27836231-thumbnail-16x9-vaiko

“கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை உறுதிப்படுத்திய இடைத்தேர்தல் முடிவு!” – வைகோ அதிரடி!

October 10, 2026

சென்னை: தமிழகத்தில் கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுக்கு இடமில்லை என்பதை தவெகவின் வெற்றி உறுதிப்படுத்தியுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

1200-675-27342147-thumbnail-16x9-anbumani

“அ.தி.மு.க கூட்டணியில் இருந்து விலகலா? ‘அரசியலில் எதுவேணா நடக்கலாம்’” – பா.ம.க அன்புமணி ராமதாஸ் சூசகம்!

October 10, 2026

கோயம்புத்தூர்: பாமக கூட்டணி குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என்றும், அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் எனவும் பாமக தலைவர் அன்புமணி

anojan

அனோஜன் தொடர்பில் பொலிஸார் விசேட அறிவிப்பு

October 10, 2026

சவூதி அரேபியாவில் மரண தண்டனைத் தீர்ப்பை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜன் தொடர்பான தேவையற்ற கருத்து பரிமாற்றங்கள் தொடர்பில் கல்முனை தலைமையகப்