ஐரோப்பிய ஆணைக்குழுவின் (European Commission) தலைவர், கனடா ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) முதலாவது “இணை உறுப்பினராக” (associate member) மாறுவதற்கான முன்மொழிவுகளுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
புதனன்று ஐரோப்பிய பாராளுமன்றத்தில் உரையாற்றிய உர்சுலா வான் டெர் லேயன் (Ursula von der Leyen), கனடாவுக்காக “கதவுகளைத் திறக்கும்” பணியில் தான் ஈடுபட விரும்புவதாகவும், இது பல்வேறு முக்கிய துறைகளில் நெருங்கிய உறவுகளை உள்ளடக்கும் என்றும் கூறினார்.
வர்த்தகம் தொடர்பான தீவிரமடைந்து வரும் மோதலால், கனடா தற்போது அமெரிக்காவுடன் பதற்றமான உறவுகளை எதிர்கொண்டுள்ளது.
இது “யாருக்கும் எதிரான கூட்டாண்மை” அல்ல என்று வலியுறுத்திய வான் டெர் லேயன், டொனால்ட் ட்ரம்பின் பெயரைப் நேரடியாகக் குறிப்பிடவில்லை. இருப்பினும், இந்த முன்மொழிவுக்குப் பதிலளிக்கும் விதமாக ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தகத்தைத் துண்டிப்பதாக அமெரிக்க அதிபர் அச்சுறுத்தினார்.
கனடியப் பிரதமர் மார்க் கார்னி (Mark Carney), ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒரு “தனித்துவமான கூட்டணியை” அமைக்க விரும்புவது குறித்து கடந்த வாரம் பேசியிருந்தார்.
ஸ்ட்ராஸ்பேர்க்கில் (Strasbourg) நடைபெற்ற ஆண்டின் முக்கிய உரையின் போது கார்னி அங்கு வருகை தந்திருந்தார். மேலும் அவர் வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் உரையாற்ற உள்ளார்.
கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் கடந்த மாதம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, புதிய வரி விதிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. கனடாவை “51வது மாநிலமாக” மாற்றுவது குறித்து ட்ரம்ப் தொடர்ந்து பேசி வருவதும், இரு வட அமெரிக்க அண்டை நாடுகளுக்கு இடையிலான மோதலை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது.
0:57 ‘ஒருவேளை அவர்கள் உங்களைச் சுடக்கூடும்’ – வெள்ளை மாளிகை சாவி பரிசளிக்கப்பட்டதை கார்னி நினைவு கூர்ந்தார்.
கார்னிக்கு ஐரோப்பிய ஒன்றியத்துடன் உருவாகியுள்ள புதிய நெருக்கத்திற்கு ட்ரம்பே முழு முக்கியக் காரணமாகும்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் வருடாந்திர நிலை உரையின போது (State of the Union address) வான் டெர் லேயன் பேசுகையில், செயற்கை நுண்ணறிவு (AI), பருவநிலை மாற்றம் மற்றும் பூகோள அரசியல் உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் ஐரோப்பிய ஒன்றியமும் கனடாவும் “உலக ஒரே பார்வையில் காண்கின்றன” என்று கூறினார்.
“நாங்கள் உக்ரைன், பாதுகாப்பு, மூலப்பொருட்கள் மற்றும் விநியோகச் சங்கிலிகள் ஆகிய விஷயங்களில் ஒன்றாக நின்றிருக்கிறோம். ஆனால் அனைத்துக்கும் மேலாக… ஐரோப்பாவும் கனடாவும் ஜனநாயகத்தை நம்புகின்றன.”
மேலும் அவர் கூறுகையில், “கூட்டாண்மைகள் என்பது ஐரோப்பாவிற்கான ஒரு மூலோபாயத் தேர்வாகும். மேலும் அவை சர்வதேச விதிகள் சார்ந்த அமைப்பில் ஏற்பட்டுள்ள விரிசலுக்கு பதிலளிப்பதாகவும் அமைகின்றன” என்றார்.
கனடாவின் உறுப்பினர் தகுதி எவ்வாறு செயல்படும் என்பது குறித்த குறிப்பிட்ட விவரங்களை அவர் வழங்கவில்லை, ஆனால் உற்பத்தி, தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு (AI), பாதுகாப்பு, ஆற்றல் (energy), முக்கிய கனிமங்கள் மற்றும் பொருளாதார பாதுகாப்பு ஆகியவற்றை ஒத்துழைப்புக்கான முக்கிய துறைகளாகப் பட்டியலிட்டார்.
இந்தத் திட்டம் குறித்துக் கேட்கப்பட்டபோது, ட்ரம்ப் அதை “நகைச்சுவையானது” என்று கூறினார்.
“அவர்கள் அதைச் செய்தால், அது ஒரு விரோதமான நடவடிக்கை என்று நான் கருதினால், நான் மிகவும் கடுமையான வரிகளை விதிப்பேன் அல்லது ஐரோப்பாவுடனான பல வர்த்தகங்களை நிறுத்துவேன்.”
அவர் மேலும் கூறுகையில், “இது ஒரு நல்ல எண்ணம் என்றால் சரி. இது ஒரு கெட்ட எண்ணம் என்றால், நாங்கள் ஐரோப்ப மீது கடுமையான வரிகளை விதிப்போம், அதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.”
வான் டெர் லேயன் மற்றும் பிற ஐரோப்பிய தலைவர்கள் இருவரும் இதே போன்ற பிரச்சினைகளைக் கையாளும் போது கார்னியை ஒரு நம்பகமான கூட்டாளியாகக் கண்டுள்ளனர்.
குறிப்பாக, ட்ரம்பின் அச்சுறுத்தும் வரி விதிப்புப் பயன்பாடுகளையும், ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினரான டென்மார்க்கின் இறையாண்மை கொண்ட பகுதியான கிரீன்லாந்தை (Greenland) தன்னுடன் இணைத்துக் கொள்வதாக அவர் விடுத்த அச்சுறுத்தலையும் அவர்கள் எதிர்கொண்டுள்ளனர்.
இருப்பினும், ஐரோப்பிய ஒன்றியத்தில் “இணை உறுப்பினர்” (associate membership) என்ற ஒன்று தற்போது நடைமுறையில் இல்லை. எனவே இந்த நடைமுறை ஒப்புக்கொள்ளப்பட்டால், அது முழுமையடைய பல ஆண்டுகள் ஆகலாம்.