அமெரிக்காவுக்கு போட்டியாக ஐ.நா?

காசாவில் நிரந்தர போர் நிறுத்தம் மற்றும் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவது தொடர்பான வரைவு தீர்மானத்தை ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் நிறைவேற்ற அமெரிக்கா முயற்சித்து வரும் வேளையில், இதற்கு மாற்றாக மற்றொரு வரைவு தீர்மானத்தை ரஷ்யா முன்வைத்துள்ளது.

மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசாவை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே இரண்டு ஆண்டுகளாக போர் நடந்து வந்தது. இந்நிலையில், அமெரிக்காவின் 20 அம்ச அமைதி ஒப்பந்தத்தின் அடிப்படையில், போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, இஸ்ரேலும், ஹமாசும் பிணை கைதிகள் மற்றும் உடல்களை ஒப்படைத்து வருகின்றன.

இந்நிலையில், காசாவில் மனிதாபிமான உதவிகளை செயல்படுத்துவது, காசாவின் பாதுகாப்பை உறுதி செய்வது, கூட்டு அமைதிப் படையை நிறுவுவது, அமெரிக்காவின் அமைதி திட்டத்தின் ஒரு பகுதியாகும். இதற்காக அமெரிக்காவின் மேற்பார்வையில் ஒரு நிர்வாகத்தை அமைப்பதும் அமைதி திட்டத்தின் ஒரு பகுதியாகும். இதற்கு, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலின் அங்கீகாரத்தை பெறும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது.

இதற்கிடையே ரஷ்யா சார்பில் பாதுகாப்பு கவுன்சிலில் மற்றொரு வரைவு தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், அமெரிக்கா தலைமையிலான சர்வதேச நிர்வாக திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைதிப்படை ஐ.நா.,வின் மேற்பார்வையின் கீழ் செயல்பட வேண்டும் எனவும், மேற்கு கரையையும், காசாவையும் பாலஸ்தீன அதிகாரத்தின் கீழ் ஒன்றிணைக்கப்பட வேண்டும் எனவும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் ரஷ்யாவின் இரு வரைவு தீர்மானங்களும், நாளை ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் ஓட்டெடுப்புக்கு வர உள்ளன. மொத்தமுள்ள 15 உறுப்பு நாடுகளில், குறைந்தது 9 நாடுகள் ஆதரவளிக்க வேண்டும். மேலும், நிரந்தர உறுப்பு நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ், பிரிட்டன் ஆகியவை தங்களிடம் உள்ள ‘வீட்டோ’ அதிகாரத்தை பயன்படுத்தாமல் இருக்க வேண்டியது அவசியம்.

வீட்டோ அதிகாரம் உள்ள அமெரிக்கா, ரஷ்யா, தனித்தனியாக வரைவு தீர்மானம் கொண்டு வந்துள்ளதால், இரண்டுமே நிராகரிக்கப்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. இது காசா சீரமைப்பு முயற்சிகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்கின்றனர் சர்வதேச வல்லுநர்கள்.

boa

இலங்கை மீனவர்களுக்கு அறிவுறுத்தல்

March 5, 2026

இலங்கைக்குச் சொந்தமான கடற்பரப்பைத் தாண்டிச் சென்று மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், அனைத்து

jail

தவிசாளரை அவதூறாகப் பேசிய இளைஞனுக்கு விளக்கமறியல்

March 5, 2026

வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளரை அவதூறாகப் பேசி, அவரது கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை

ganja

திடீர் சோதனை; கஞ்சாவுடன் கல்விசாரா ஊழியர் கைது

March 5, 2026

புத்தல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யுதகனாவ பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது, இரண்டு கிலோ உலர்ந்த

cen

ட்ரம்பைக் கட்டுப்படுத்தும் பிரேரணை தோல்வி!

March 5, 2026

ஈரானுக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேற்கொள்ளும் இராணுவ நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்காக அந்நாட்டு செனட் சபையில் முன்வைக்கப்பட்ட பிரேரணை

he

கரடியனாறு பகுதியில் கனரக வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய பொலிஸார்

March 5, 2026

மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் இருந்து சட்டவிரோதமாக ஆற்று மணல் ஏற்றிச் சென்ற கனகர வாகனம், பொலிஸாரின் தடையை மீறி நிறுத்தாமல்,

ch

உயர் தர வளர்ச்சிக்கான புதிய சமிக்ஞைகளை வெளியிடவுள்ள சீனா

March 5, 2026

வருடாந்திர தேசிய “Two Sessions” கூட்டங்கள் நெருங்கி வரும் நிலையில், சீனா தனது பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்துக்கான புதிய

one

மாணவர்களிடையே போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வு

March 5, 2026

நாட்டில் போதைப்பொருள் பயன்பாட்டினால் ஏற்படும் அழிவுகரமான சமூகப் பாதிப்புகளைத் தடுக்கும் நோக்கில், “நாடே ஒன்றாக” எனும் தேசிய பணித்திட்டத்தின் கீழ்

veth

2026ஆம் ஆண்டுக்குரிய அபிவிருத்தி வேலைத் திட்டங்களை விரைவாக நிறைவு செய்யுங்கள் – ஆளுநர் பணிப்பு

March 5, 2026

2026ஆம் ஆண்டுக்குரிய அபிவிருத்தி வேலைத் திட்டங்களை எவ்வளவு விரைவாக நிறைவு செய்ய முடியுமோ அவ்வளவு துரிதமாக நிறைவு செய்யுமாறும், அதற்காகத்

mu

அகில இலங்கை கிறிஸ்தவ அபிவிருத்தி ஒன்றிய தலைவரின் நல்லெண்ண விஜயம்

March 5, 2026

மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகைக்கும் முன்னாள் பிரதமரின் மத விவகாரங்களுக்கான இணைப்பு செயலாளர் எஸ். சந்துரு

ceb

மின்சார விநியோக அமைப்பில் தொழில்நுட்பக் கோளாறு

March 5, 2026

அநுராதபுரம் மற்றும் வவுனியா இடையேயான மின்சார விநியோக அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால், நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் மின்தடை

f

யாழ். மாவட்ட குறிப்பிட்ட சில நிலையங்களிலேயே எரிபொருள் விநியோகம்

March 5, 2026

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள இலங்கை பெற்றோலிய கூட்டு தாபனத்தின் குறிப்பிட்ட சில எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் எரிபொருள் விநியோகம் இடம்பெறவுள்ளதாக

kanaf

தையிட்டி விகாரையில் இடம்பெற்ற பொலிஸார் தாக்குதல்; மனிதவுரிமை ஆணைக்குழு விசாரணை

March 5, 2026

தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட வேளை கைது செய்யப்பட்டவர்கள் மீது தாம் குறைந்தளவு பல பிரயோகத்தையே மேற்கொண்டதாக மனிதவுரிமை