ர்முஸ் நீரிணை (Strait of Hormuz) பகுதிகளில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் விமான எரிபொருளைப் பெற முடியாத ஐக்கிய இராச்சியம் போன்ற நாடுகள், “தாமதமான தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, நீரிணைக்குச் சென்று அங்கிருக்கும் எண்ணெயை நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள் (TAKE IT)” என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) சமூக வலைதளப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:
“ஈரானின் முக்கிய தலைமைகளை அழிக்கும் (decapitation) நடவடிக்கையில் ஈடுபட மறுத்த நாடுகள், இனி உங்களுக்காக நீங்களே போராடப் பழகிக்கொள்ள வேண்டும். அமெரிக்கா இனி உங்களுக்கு உதவப்போவதில்லை; ஏனெனில் எங்களது இக்கட்டான காலங்களில் நீங்கள் எங்களுடன் இருக்கவில்லை” என்று அந்த நாடுகளை நோக்கி அவர் குறிப்பிட்டுள்ளார்.
“ஈரான் தற்போது சிதைக்கப்பட்டுள்ளது. கடினமான வேலை முடிந்துவிட்டது. இனி உங்களுக்கான எண்ணெயை நீங்களே போய் எடுத்துக் கொள்ளுங்கள்!”