ஹோமாகம, கட்டுவன தொழிற்பேட்டையிலுள்ள தலைக்கவசம் (helmet) தயாரிக்கும் தொழிற்சாலையில் இன்று காலை (ஜூலை 21) ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.
கட்டுவன தொழிற்பேட்டை வளாகத்தினுள் அமைந்துள்ள குறித்த தொழிற்சாலையில் திடீரெனத் தீப்பற்றியுள்ளதை அடுத்து, தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்புப் படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
உயிரிழந்தவர்களின் அடையாளங்கள் மற்றும் தீ விபத்துக்கான காரணம் தொடர்பான மேலதிக விபரங்கள் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.