ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பான விசாரணைகள் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
கோட்டை நீதவான் பசன் அமரசேன வழங்கிய உத்தரவிற்கமைய, கொழும்பு பிரதான விசேட சட்ட வைத்திய அதிகாரி ஸ்ரீயந்த அமரரத்ன தலைமையில் 5 பேர் கொண்ட விசேட சட்ட வைத்திய நிபுணர்கள் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இக்குழுவினர் தற்போது கொழும்பு நீதிமன்ற மருத்துவ மற்றும் நஞ்சியல் நிறுவனத்தில் உடற்கூற்று பரிசோதனையை முன்னெடுத்து வருகின்றனர்.
கபில சந்திரசேன தூக்கிட்டு, உயிரை மாய்த்துக்கொண்டிருக்கக்கூடும் என பொலிஸாரால் சந்தேகிக்கப்படும் நிலையில், இந்த மரணம் குறித்த மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு ஆரம்பித்துள்ளது.