: இணையவழிக் குற்றங்களுடன் (Cybercrimes) தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட வெளிநாட்டுப் பிரஜைகள் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
கடந்த சில மாதங்களாக கொள்ளுப்பிட்டி, புத்தளம் மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளில் இரகசியமான முறையில் இயங்கி வந்த கட்டடங்களில் தங்கியிருந்து இணையவழிக் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த வெளிநாட்டவர்களே குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் குடிவரவு குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது அவர்களிடமிருந்து கணினிகள் மற்றும் கையடக்கத் தொலைபேசிகள் உள்ளிட்ட பெருமளவிலான இலத்திரனியல் சாதனங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இதேவேளை, இணையவழிக் குற்றங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்கள் எந்த நாடுகளைச் சேர்ந்தவர்களோ, அதே நாடுகளிலிருந்து இலங்கை வரும் ஏனைய வெளிநாட்டவர்கள் விமான நிலையத்தில் விசேட சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், தற்போது இலங்கைக்குள் தங்கியிருக்கும் வெளிநாட்டுப் பிரஜைகள் தொடர்பில் தனியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அந்தத் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.