வீரத்தின் அடையாளமாய் தியாகத்தின் வரலாறாய் வாழும் மாவீரர்கள்! Behind Me Media தலைமை அலுவலக நிகழ்வுகள்…

2026 மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு நேற்றைய தினம் நவம்பர் 27ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை முதல் 2284 Argentia Road, Unit 16, Mississauga, Ontario வில் அமைந்துள்ள Behind Me Media தலைமை அலுவலகத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

மாவீரர் வாரமான நவம்பர் 21 ஆம் திகதி தொடக்கம் 27ஆம் திகதி வரை தினமும் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை மாவீரர்களின் திருவுருவப்படங்களுக்கு மலரஞ்சலி செலுத்துவதற்கான ஏற்பாடுகளும் இங்கே செய்யப்பட்டிருந்தன என்பதோடு தமிழீழத் தேசியக்கொடி நாள் மற்றும் மாவீரர் வார ஆரம்ப நிகழ்வுகள் கடந்த 21ஆம் திகதி மிசிசாகா நகர மேயர் Alvin Tedjo மற்றும் முக்கிய அரச பிரமுகர்கள் பங்கேற்புடன் சிறப்பாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

மாவீரர் வார ஆரம்ப நிகழ்வில் கனேடிய மற்றும் தமிழீழத் தேசியக்கொடிகள் ஏற்றப்பட்டு மாவீரர் வார நினைவேந்தல் அங்குரார்ப்பண நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து மாவீரர்களுக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

நேற்றைய மாவீரர் நாள் நிகழ்வில் பேச்சு, கவிதை, தலைவர்களின் உரை மற்றும் நினைவேந்தல் என்பன நடைபெற்றன.

Behind Me Media நிறுவனரும் அதன் தலைவருமான கணா செல்வா அவர்கள் தனது உரையில், மின்சார வசதியில்லாத காலத்தில் வானொலியின் ஊடாக எமது தேசியத்தலைவர் அவர்களின் உரையை நாம் கேட்டிருக்கின்றோம். உண்மையில் அவர் ஒரு தீர்க்கதரிசி… எல்லாக் காலத்திலும் எமது மக்கள் ஒன்றுபட்டு மாவீரர்களை நினைவு கூர்வார்கள் என்பதில் மிகத் தெளிவாக இருந்திருக்கின்றார் என்பதை ஒவ்வொரு மாவீரர் தினத்திலும் எம்மால் உணர முடிகின்றது என்றார்.

தியாகத்தின் வரலாறாக வாழ்ந்து கொண்டிருக்கும் மாவீரர்களை Behind Me Media வின் ஊடாக நினைவு கூருவதற்கான சந்தர்ப்பம் கிடைத்திருப்பது எமக்குக் கிடைத்த பெரும் பேறு. கடந்த 21ஆம் திகதி தொடக்கம் ஆரம்பிக்கப்பட்ட மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுக்கு தொலை தூரங்களிலிருந்து பலர் வந்து அஞ்சலி செலுத்திவிட்டுச் சென்றிருக்கின்றார்கள். முதல் மாவீரரான சங்கர் அண்ணா அவர்கள் தொடர்பான ஆவணத்தொகுப்பை நாம் வெளியிட்டிருந்தோம். இங்கே சகல வயதுகளைச் சேர்ந்தவர்களும் வருகை தந்து கொண்டிருக்கின்றார்கள். எமது வரலாற்றை சிறு வயதிலிருந்தே பிள்ளைகளுக்கு நாம் கட்டாயம் அறியப்படுத்த வேண்டும்.

எம்மால் முடிந்தளவுக்கு மாவீரர்களின் திருவுருவப் படங்களை இங்கே காட்சிப்படுத்தியுள்ளோம். விடுபட்டவர்களின் படங்கள் குறித்து அறியத்தரும்போது உடனுக்குடன் அவற்றை நாம் இணைத்துக் கொண்டிருக்கின்றோம். இந்த நினைவேந்தல் நிகழ்வுக்கு வருகை தந்த உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி என கணா செல்வா அவர்கள் மேலும் தெரிவித்தார்.

மாவீரர் வாரத்தின் முதல்நாளிலிருந்து ஊடகவியலாளர்கள், அரசியல் பிரமுகர்கள், மாவீரர் குடும்பங்கள், பொதுமக்கள், நலன்விரும்பிகள்… என பல சமூக மட்டத்திலிருந்தும் பலர் வருகை தந்து Behind Me Media வினால் ஒழுங்குசெய்யப்பட்ட ‘மாவீரர் நினைவேந்தல்’ நிகழ்வைக் காத்திரப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ravikar

சட்ட ஒழுங்கில் மிகுந்த கரிசனையோடு செயற்பட்டவர்கள் தமிழீழ காவல்துறையினர்!

November 29, 2026

2009ஆம் ஆண்டுக்கு முன்னர் வடகிழக்கில் தமிழீழ காவல் துறையினர் நிலைகொண்டிருந்தனர். அவர்கள் நீலவண்ண ஆடைகளில் பணியாற்றியவர்கள். மிகுந்த ஒழுக்க சீலர்கள்.

lanka

எரிபொருள் நிலையத்தில் பாரிய நட்டம்

November 29, 2026

பொலன்னறுவை, ஹிங்குராங்கொட கூட்டுறவு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் உள்ள நிலத்தடி டீசல் சேமிப்புத் தாங்கியில், தவறுதலாக 1,000 லீற்றருக்கும் அதிகமான

miy

மியன்மாரில் திருமண மண்டபம் மீது தாக்குதல்: 50க்கும் மேற்பட்டோர் பலி

November 29, 2026

மியன்மார் இராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதல்களில், திருமண நிகழ்வு நடைபெற்ற இடம் மற்றும் பாடசாலை உள்ளிட்ட பகுதிகளில் பல டசின்

abu

சிறுமி துஷ்பிரயோகம்: 21 வயது இளைஞன் தேடப்படுகின்றார்!

November 29, 2026

புத்தள பிரதேசத்தில் நடைபெற்ற பிங்கம் நிகழ்வொன்றுக்குத் தனது தாயுடன் வருகை தந்த 13 வயது சிறுமியைத் துஷ்பிரயோகம் செய்த 21

vat

வரி விவகாரம் : காலக்கெடு நீடிப்பு

November 29, 2026

இணையவழித் தாக்கல் கட்டமைப்பில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக, 2025/2026 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி அறிக்கைகளைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை

Education

நாளை வழமை போல் பாடசாலைகள் இயங்கும்

November 29, 2026

நாளை (நவம்பர் 30) வழமையான பாடசாலை நாளாக இயங்கும் எனத் தெரிவித்துள்ள கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவேவ, திட்டமிடப்பட்ட

crim

சந்திக்க வந்த நண்பனை கொன்று புதைத்த நபர்

November 29, 2026

கொலைச் சம்பவமொன்றுடன் தொடர்புடையவர்கள் எனத் தேடப்பட்டு வந்த மூன்று சந்தேகநபர்கள் கெஸ்பேவை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். முருதலாவ, கருவலவத்தை பிரதேசத்தைச்

ham

ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகம் வரலாற்றுச் சாதனை!

November 29, 2026

தங்களது துறைமுகத்தின் ஊடாக இதுவரை கையாளப்பட்ட மொத்த வாகனங்களின் எண்ணிக்கை 50 இலட்சம் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லை எட்டியுள்ளதாக

spai

ஸ்பெயினில் அகதிகள் படகு விபத்து: 8 பேர் பலி!

November 29, 2026

மேற்கு ஆப்ரிக்க நாடுகளிலிருந்து அகதிகள் 100 பேர் சிறிய மரப்படகில் பயணித்துள்ளனர். அட்லாண்டிக் பெருங்கடல் மோசமாக வானிலை காரணமாக படகு

10

யாழில் மதுபோதையில் டிப்பர் செலுத்திய சாரதியால் 10 தொலைத்தொடர்பு கம்பங்கள் சேதம்!

November 29, 2026

யாழ்ப்பாணத்தில் பொலிஸாரின் கட்டளையை மீறி, மதுபோதையில் டிப்பர் வாகனத்தைச் செலுத்திய சாரதியால் சுமார் 10 தொலைத்தொடர்பு கம்பங்கள் சேதமாக்கப்பட்டுள்ளன. தொலைத்தொடர்பு

jaff

வட மாகாண சட்ட உச்சிமாநாடு 2026

November 29, 2026

லங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டிலும், யாழ்ப்பாண மாவட்ட சட்டத்தரணிகள் சங்கங்களின் ஒத்துழைப்புடனும் ஒழுங்கமைக்கப்பட்ட ‘வட மாகாண சட்ட உச்சிமாநாடு 2026’

el

பெரு, ஈக்வடோரில் கடும் வெள்ளப்பெருக்கு!

November 29, 2026

ன் அமெரிக்க நாடுகளான பெரு மற்றும் ஈக்வடோர் ஆகியவற்றில் ‘எல் நினோ’ (El Niño) காலநிலை மாற்றத்தினால் ஏற்பட்டுள்ள கடும்