விமான விபத்து வழக்கு; 228 மனிதக் கொலை குற்றத்தில் ஏர் பிரான்ஸ் மற்றும் ஏர்பஸ் நிறுவனங்கள் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு!

கடந்த 2009 ஆம் ஆண்டில் 228 உயிர்கள் ஒரே நேரத்தில் மாய்வதற்கு காரணமான ஏர் பிரான்ஸ் விமான விபத்து வழக்கில், விமான சேவை நிறுவனமும், ஏர்பஸ் விமான உற்பத்தி நிறுவனமும் மனிதநேயமற்ற முறையில் அலட்சியமாகச் செயல்பட்டுக் கொலைக் குற்றம் இழைத்துள்ளதாகப் பாரிஸ் மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பிரேசில், ரியோ டி ஜெனிரோவிலிருந்து பிரான்ஸ், பாரிஸ் நோக்கிப் பயணித்த ‘AF447’ என்ற பயணிகள் விமானம் அட்லாண்டிக் கடலில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்திற்கு, இந்த இரு நிறுவனங்களுமே “முழுமையான மற்றும் தனிப்பட்ட பொறுப்பாளிகள்” என நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கீழ் நீதிமன்றம் ஒன்றினால் இந்த நிறுவனங்கள் விடுவிக்கப்பட்டிருந்த போதிலும், கடந்த எட்டு வாரங்களாக நடைபெற்ற மேல்முறையீட்டு விசாரணையின் முடிவில் இந்த அதிரடித் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எனினும், இரு நிறுவனங்களும் இந்தக் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து மறுத்து வருவதுடன், இத்தீர்ப்புக்கு எதிராக மீண்டும் மேல்முறையீடு செய்யவுள்ளதாகத் தெரிவித்துள்ளன.

பிரெஞ்சு விமானப் போக்குவரத்து வரலாற்றிலேயே மிக மோசமான இந்த விபத்தில், விமானத்தில் பயணித்த 12 ஊழியர்கள் மற்றும் 216 பயணிகள் உட்பட அனைவரும் 38,000 அடி உயரத்தில் இருந்து கடல் பகுதிக்குள் விழுந்து பலியாகியுள்ளனர்.

பல்லாயிரக்கணக்கான சதுர கிலோமீட்டர் பரப்பளவில் கடலுக்கடியில் நடத்தப்பட்ட அதிதீவிரத் தேடுதல்களுக்கு மத்தியில், இரண்டு வருடங்களின் பின்னரே (2011 இல்) இந்த விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டெடுக்கப்பட்டது.

உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பிரான்ஸ், பிரேசில் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களாவர்.

நீதிமன்றத் தீர்ப்பின்படி, இரு நிறுவனங்களுக்கும் தலா 225,000 யூரோக்கள் ($261,720 டாலர்கள்) என்ற அதிகபட்ச அபராதம் விதிக்கப்பட்டிருந்தது. எனினும், இவ்வளவு பெரிய மனிதப் பேரழிவிற்கு இந்த அபராதத் தொகை மிகவும் குறைவானதாக விமர்சிக்கப்பட்டது.

கடந்த 2012 ஆம் ஆண்டு பிரெஞ்சு புலனாய்வாளர்கள் வெளியிட்ட அறிக்கையின்படி, விமானத்தின் வேகத்தைக் கணிக்கும் சென்சார்களில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறும், விமானம் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழத் தொடங்கியபோது, அதற்கேற்ப துரிதமாகச் செயற்படத் தவறிய விமானிகளின் அனுபவக் குறைபாடும் இந்த விபத்திற்கு முதன்மைக் காரணங்களாகக் கண்டறியப்பட்டன.

பனிப்புயலில் சிக்கியபோது சென்சார்கள் தவறான வேகக் குறியீட்டைக் காட்டியதால் குழப்பமடைந்த விமானிகள், விமானத்தின் மூக்குப் பகுதியை கீழ்நோக்கித் திருப்புவதற்குப் பதிலாக தவறுதலாக மேல்நோக்கி உயர்த்தியதால் விமானம் கடலுக்குள் மூழ்கியது.

இந்த விபத்திற்குப் பிறகு, சர்வதேச அளவில் விமானிகளுக்கான பயிற்சி முறைகள் மேம்படுத்தப்பட்டதுடன், அனைத்துப் பழைய வேக சென்சார்களும் புதிய தொழில்நுட்பக் கருவிகளாக மாற்றியமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

vick

பிரான்ஸில் சேம்பியன்ஸ் லீக் கொண்டாட்டத்தில் வன்முறை: 400 பேர் கைது

May 31, 2026

சேம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து நாட்டின் ஆர்செனல் அணியை வீழ்த்தி, பிரான்ஸின் பிஎஸ்ஜி (பாரீஸ் ஜெயண்ட் ஜெர்மன்) அணியினர்

Breast can

இலங்கையில் மார்பகப் புற்றுநோயை கண்டறியும் அதிநவீன இயந்திரங்களைக் கொள்வனவு செய்ய நடவடிக்கை

May 31, 2026

நாட்டில் மார்பகப் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவதற்கும், சிகிச்சைக்குப் பின்னரான பராமரிப்பை மேம்படுத்துவதற்கும், வைத்தியசாலைகளில் நிலவும் நீண்ட காத்திருப்புப் பட்டியல்களைக் குறைக்கும்

arre

மோட்டார் சைக்கிள்களின் முன் சக்கரத்தை மேலே தூக்கி அதிரடி காட்டிய ’பைக் ரேஸர்கள்’ கைது!

May 31, 2026

கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியில், கதான மற்றும் வெலிகம்பிட்டிய இடைப்பட்ட பகுதியில், மோட்டார் சைக்கிள்களின் முன் சக்கரத்தை மேலே

pala

பலாலி வீதியூடான போக்குவரத்து மேலும் ஒரு மணி நேரம் நீடிப்பு

May 31, 2026

வெசாக் தினத்தில் இருந்து பலாலி வீதி ஊடான போக்குவரத்திற்கு இராணுவத்தினர் மேலும் ஒரு மணி நேரத்தை நீடித்துள்ளனர். பலாலி வீதியில்

ble

‘நீல நிலா’ இன்றிரவு வானில் தோன்றும் அதிசயம்

May 31, 2026

இன்று (31) வானில் அரிய விண்வெளி நிகழ்வான ‘நீல நிலா’ (புளூ மூன்) தோன்ற உள்ளது. பொதுவாக ஒரு மாதத்தில்

canada road11

மிசிசாகாவில் உள்ள 401 நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில் பெண் பலி

May 31, 2026

சனிக்கிழமை இரவு மிசிசாகாவில் உள்ள 401 நெடுஞ்சாலையில் (Highway 401) ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார், மேலும் ஒருவர்

canada police2555

‘நெஞ்சை உலுக்கும் சம்பவம்’: டொராண்டோவின் மேற்குப் பகுதியில் சாலையைக் கடந்த பாதசாரி விபத்தில் பலி

May 31, 2026

டொராண்டோவின் எக்லிண்டன் அவென்யூ வெஸ்ட்டில் (Eglinton Ave. West) வாகனம் மோதி பாதசாரி ஒருவர் உயிரிழந்தது குறித்து டொராண்டோ காவல்துறை

accused

மரண வழக்கின் விசாரணைக்காக காத்திருந்த நபர் மீது ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியதாக (Stunt Driving) மீண்டும் வழக்குப்பதிவு

May 31, 2026

2024 ஆம் ஆண்டு நடந்த விபத்து மரண வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு, விசாரணைக்காக காத்திருக்கும் உட்ஸ்டாக் (Woodstock) நகரைச்

photo-collage.png (42)

அதிகளவான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டதும் தமிழ்த் தேசியத்தை அழிக்க முயன்றதும் ராஜபக்ச ஆட்சிக்காலம் தான்!

May 31, 2026

ராஜபக்ச ஆட்சிக் காலத்தின் போதுதான் அதிகளவான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டிருந்தார்கள். ராஜபக்ச அரசாங்கம் ஆட்சியில் இருக்கின்ற காலத்தில், அவர்கள் தமிழ்த் தேசிய

water

கடல் அலையில் சிக்கி மாயமான மூன்று மாணவர்களும் இன்று சடலங்களாக மீட்பு!

May 31, 2026

அம்பாந்தோட்டை – ஹுங்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களமெட்டிய கடற்பகுதியில் நேற்று(30.05.2026) நீராடிக் கொண்டிருந்த போது இராட்சத அலையில் சிக்கி இழுத்துச்

ssasee

ஊடக சுதந்திரத்தை அவமதிக்கும் செயல்களில் பொலிஸார் ஈடுபடுகின்றார்கள் – அருட்தந்தை மா.சத்திவேல்

May 31, 2026

பொலிஸார் ஊடகவியலாளர்களை விசாரணைக்கு என அழைத்து அச்சுறுத்தும் தொனியில் வார்த்தை பிரயோகங்களை மேற்கொள்வது ஊடக சுதந்திரத்தை அவமதிக்கும் செயலாகும் என

vi

யாழ். பொது நூலகம் எரிப்பு: 1981 மே 31 நள்ளிரவில் நடந்தது என்ன?

May 31, 2026

நன்றி: வீரகேசரி நாளிதழ் . இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற மிக மோசமான இன வன்முறைச் செயல்களில் ஒன்றான யாழ்ப்பாண