நீதிமன்ற அடைப்பு உத்தரவின் (Warrant of Committal) கீழ் தேடப்பட்டு வரும் 47 வயதுடைய நபர் ஒருவரைக் கண்டறிவதற்கு டர்ஹாம் பிராந்திய காவல்துறை (Durham Regional Police) பொதுமக்களின் உதவியைக் கோரியுள்ளது.
டெல்ராய் ஆப்பிள் (Delroy Apple) என்ற இந்த நபர், கடைசியாக 2026 ஜூன் 18 ஆம் தேதி இரவு 7 மணியளவில் விட்பி நகரின் கோர்டன் வீதியில் உள்ள ‘ஒன்டாரியோ ஷோர்ஸ்’ (Ontario Shores) பகுதியில் காணப்பட்டுள்ளார்.
அவர் ஐந்து அடி ஆறு அங்குலம் உயரமும், நடுத்தர உடல்வாகுகும், குட்டையான கருமை நிற முடியும் கொண்ட ஒரு கருப்பினத்தவர் என விவரிக்கப்பட்டுள்ளார். அவர் கடைசியாக வெள்ளை நிற சட்டை, சாம்பல் நிற (Grey) காற்சட்டை மற்றும் பலவண்ண காலணிகளை (Multicoloured shoes) அணிந்திருந்தார்.
காவல்துறையினர் அவரது புகைப்படத்தை வெளியிட்டுள்ளதுடன், அவரைக் கண்டால் பொதுமக்கள் யாரும் நெருங்க வேண்டாம் என்று எச்சரித்துள்ளனர். ஆப்பிளைக் காண்பவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாகக் காவல்துறையினரைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
அவர் இருக்குமிடம் குறித்த தகவல் தெரிந்தவர்கள் தங்களது உள்ளூர் காவல் நிலையத்தைத் தொடர்பு கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளனர். டர்ஹாம் பிராந்தியத்தில் உள்ளவர்கள் 905-579-1520 (ext. 1805) என்ற இலக்கத்தினூடாக காவல்துறையைத் தொடர்பு கொள்ளலாம்.
தகவல்களை அநாமதேயமாக வழங்க விரும்பினால், டர்ஹாம் பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவை (Crime Stoppers) 1-800-222-TIPS (8477) என்ற இலக்கத்தின் மூலம் தொடர்பு கொள்ள முடியும்.