விடுதலைப் புலிகள் அமைப்பின் புலம்பெயர் ஆதரவாளர்களை மகிழ்விப்பதற்காக கைதான சுரேஷ் சலேவுக்காக இன்று ஆர்ப்பாட்டம் – விமல் வீரவன்ச

 

விடுதலைப் புலிகள் அமைப்பின் புலம்பெயர் ஆதரவாளர்களை மகிழ்விப்பதற்காகவும், அரசியல் பழிவாங்களுக்காகவும் அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். நாட்டுக்காக போராடிய சுரேஷ் சலேவை பாதுகாப்பதற்காக கோட்டை புகையிரத நிலையத்தின் முன்பாக இன்று திங்கட்கிழமை (8) காலை 10 மணிக்கு சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபடுவோம்.

நாட்டின் ஒற்றையாட்சி மற்றும் இராணுவத்தின் மீது பற்றுள்ளவர்கள் எமது சத்தியாகிரக போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான உதய கம்மன்பில, சரத் வீரசேகர, விமல் வீரவன்ச மற்றும் சன்ன ஜயசுமன ஆகியோர் கூட்டாக கோரிக்கை விடுத்தனர்.

தேசிய சுதந்திர முன்னணியின் காரியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (7) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்தனர்.

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச குறிப்பிடுகையில், முப்பது வருடங்களுக்கும் மேலாக நீடித்த கொடூரமான பயங்கரவாத யுத்தத்தின் காரணமாக இந்த நாட்டிற்கு இழக்கப்பட்ட உயிர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று எங்களால் இறுதியாகக் கணக்கிடப்பட்ட ஒரு இலக்கம் இல்லை.முப்பது வருடகால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே அர்ப்பணிப்புடன் செயற்பட்டார்.

ஒட்டுமொத்த மக்களும் நன்றிக்கடன்பட்டுள்ள வேளையின் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சுரேஸ் சலே கைது செய்யப்பட்டு ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு, சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டுள்ளார். அவர் அவ்வாறு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில்இ அங்கு ஒரு சாதாரண சூழ்நிலை நிலவவில்லை. ‘கெஹெல்பத்தர பத்மே’ (முநாநடடியனனயசய Pயவாஅந) என்பவருக்கு இருக்கும் வசதிகள் சுரேஷ் சலேவுக்கு இல்லை. ‘கெஹெல்பத்தர பத்மே’ என்பவருக்கு கிடைக்கும் உணவு சுரேஷ் சலேவுக்கு கிடைப்பதில்லை. ‘கெஹெல்பத்தர பத்மே’ என்பவருக்கு வழங்கப்படும் கவனிப்பு சுரேஷ் சலேவுக்கு கிடைப்பதில்லை.

சுரேஷ் சலேவை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஒட்டுமொத்த மக்களுக்கும் உண்டு. உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பில் அரசாங்கம் உண்மையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமாயின் அரசாங்கம் குண்டுத்தாரிகளின் தந்தையான இப்ராஹிமை முறையாக விசாரிக்க வேண்டும் அப்போது உண்மை வெளிவரும். சுரேஷ் சலேவுக்காக இன்று காலை 10 மணிக்கு கோட்டை புகையிரத நிலையத்தில் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.

முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர குறிப்பிடுகையில், விடுதலை புலிகள் அமைப்பின் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் நோக்கம் மற்றும் விருப்பு, வெறுப்புகளுக்காகவே அரசாங்கம் செயற்படுகிறது. வடக்கில் புலிகள் அமைப்பின் நினைவேந்தல் அரச ஆதரவுடன் கொண்டாடப்படுகிறது.

அரச நிகழ்வுகளில் இராணுவத்தினருக்கு உரிய கௌரவம் வழங்கப்படவில்லை. இராணுவத்தினர் திட்டமிட்ட வகையில் பழிவாங்கப்படுகிறார்கள்.ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினால் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அறிக்கைகளில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ள நிலையிலும் அரசியல் நோக்கங்களுக்காக விசாரணைகள் திசைத்திருப்பட்டுள்ளது.

அரசியல் பழிவாங்களுக்காகவும், புலிகள் அமைப்பின் நோக்கத்துக்காகவும் சுரேஸ் சலே பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டுள்ளார்.அவரை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நாட்டு மக்களுக்கு உண்டு. நாட்டின் ஒற்றையாட்சி மற்றும் இராணுவத்தின் மீது பற்றுள்ளவர்கள் எமது சத்தியாகிரக போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்றார்.

பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில குறிப்பிடுகையில், அரசியல் பழிவாங்களுக்காகவே சுரேஸ் சலே பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டுள்ளார். அவரது நிலைமை மிகவும் மோசமாகவுள்ளது.

யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்ட சுரேஸ் சலேவை பாதுகாக்க வேண்டும். அவருக்காக நாங்கள் போராடுவோம் எமது போராட்டத்தில் நாட்டு மக்களும் பங்குப்பற்ற வேண்டும் என்றார்.

சர்வஜன சக்தி கட்சியின் உப தலைவர் சன்ன ஜயசுமன குறிப்பிடுகையில், யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கும், தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் அர்ப்பணிப்புடன் நாட்டுக்காக சேவையாற்றிய சுரேஸ் சலே சிறையில் அரசியல் பழிவாங்களுக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

சுரேஸ் சலேவுக்காக அனைத்து இன மக்களும் குரல் கொடுக்க வேண்டும். உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் விசாரணைகள் என்ற பெயரில் அரசியல் பழிவாங்கல்களை முன்னெடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆகவே சுரேஸ் சலேவுக்கு நியாயம் கிடைக்கும்வரை போராடுவோம் என்றார்.

IMG_9428

விஜேராம பகுதியில் புதிய செயற்கை நுண்ணறிவு (AI) மையம்

October 14, 2026

சிங்கப்பூர் அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் விஜேராம பகுதியில் புதிய செயற்கை நுண்ணறிவு (AI) மையம் ஒன்றைத் நிறுவுவதற்குத் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார

IMG_9427

திக்கம் வடிசாலையை மீள இயக்க நடவடிக்கை!

October 14, 2026

யாழ்ப்பாணம் திக்கம் வடிசாலையை மீள இயக்கி, ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட உற்பத்தி நிலையமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக கடற்றொழில், நீரியல்

IMG_9425

இலங்கையர்களுக்கு எச்சரிக்கை!

October 14, 2026

பிராந்தியத்தில் நிலவும் தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, உம்ரா யாத்திரை மேற்கொள்ளத் திட்டமிடும் இலங்கையர்கள் தமது பயண ஏற்பாடுகளை மேற்கொள்ளும்போது அவதானத்துடன்

IMG_9424

ஆட்சி அமுல்படுத்தப்பட்டுள்ளதால் அரசியல் பதற்றம் அதிகரித்துள்ளது.

October 14, 2026

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கட்சிக்கு அதிக ஆதரவு உள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் அவசரகால நிலை மற்றும்

nsm

மீண்டும் விளக்கமறியலில் நாமல்!

October 14, 2026

சர்ச்சைக்குரிய எயார்பஸ் (Airbus) கொடுக்கல் வாங்கலில் 1.4 மில்லியன் யூரோவுக்கும் அதிகமான தொகையை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டு தொடர்பில், பாராளுமன்ற

wor

உலக வங்கிப் பிரதிநிதிகள் – ஜனாதிபதியின் செயலாளர் சந்திப்பு!

October 14, 2026

இலங்கையின் விவசாயத் துறையை டிஜிட்டல் மயமாக்குதல் மற்றும் நவீனமயமாக்குதலை நோக்கமாகக் கொண்ட ‘AgriConnect Sri Lanka’ திட்டத்தை எதிர்வரும் ஒக்டோபர்

th

ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட உற்பத்தி நிலையமாக திக்கம் வடிசாலையை மீளச் செயற்படுத்தத் திட்டம்!

October 14, 2026

திக்கம் வடிசாலையை மீள இயக்குவதற்குச் சாத்தியமான அனைத்து வழிகளிலும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதுடன், அதனை ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட உற்பத்தி நிலையமாக

ja

கைதடியில் விபத்து; இரு இளைஞர்கள் பலி

October 14, 2026

யாழ்ப்பாணம், கைதடி பகுதியில் மோட்டார் சைக்கிளொன்றும் லொறியொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

kek

நீதிமன்ற அவமதிப்பு – கெஹெலிய உள்ளிட்டோருக்கு எதிராக மனு

October 14, 2026

யர்நீதிமன்ற உத்தரவொன்றை அமுல்படுத்தத் தவறியதன் மூலம் நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாக தீர்ப்பளிக்குமாறு கோரி, முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட

MediaFile_20261013_115703_992

கொழும்பில் 15 தற்காலிக வீடுகள் தீக்கிரை!

October 14, 2026

கொழும்பு, கிராண்ட்பாஸ் – மஹவத்த பழைய ரயில் பாதைக்கு அருகில் ஏற்பட்ட திடீர் தீப்பரவலில், அனுமதியின்றி அமைக்கப்பட்டிருந்த 15 தற்காலிக

Toronto-Election-1536x783

அக்டோபர் 26 நகராட்சித் தேர்தலில் கத்தோலிக்கர்கள் பங்கேற்க கர்தினால் லியோ அழைப்பு!

October 13, 2026

2026 அக்டோபர் 26 திங்கள்கிழமை நகராட்சித் தேர்தலை முன்னிட்டு, டொராண்டோ பேராயர் கர்தினால் பிராங்க் லியோ (Cardinal Frank Leo)

TORONTO ELE1

டொராண்டோ நகராட்சித் தேர்தலில் முன்கூட்டியே வாக்களிக்க சாதனை அளவிலான வாக்காளர்கள்

October 13, 2026

டொராண்டோவின் வரவிருக்கும் 2026 நகராட்சித் தேர்தலுக்கு முன்னதாக, கடந்த வாரம் நடைபெற்ற ஆறு நாள் முன்கூட்டிய வாக்குப்பதிவில் 2,20,000-க்கும் மேற்பட்ட