சென்னை:
“தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் புரட்சியை, ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய அதிமுகவினரும் லாட்டரி குடும்பத்தினரும் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி சீரழித்துவிடக் கூடாது” என மூத்த அரசியல்வாதி பழ.கருப்பையா அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்த அவர், முதல்வர் விஜய்யின் தற்போதைய அரசியல் நகர்வுகள் குறித்துத் தனது கவலையைப் பகிர்ந்து கொண்டார்.
பழ.கருப்பையா பேசுகையில், “60 ஆண்டுகாலத் திராவிடக் கட்சி ஆட்சிகளைப் பின்னுக்குத் தள்ளி தவெக ஆட்சி அமைத்துள்ளது. இது விஜய் பெற்ற வெற்றியை விட, மக்கள் பெற்ற பெரிய புரட்சி வெற்றி. பண பலத்தையும், இலவசங்களையும் மக்கள் இந்தத் தேர்தலில் வீழ்த்தியுள்ளனர். ‘நான் லஞ்சம் வாங்க மாட்டேன்’ என்ற விஜய்யின் வார்த்தையை மக்கள் நம்பியுள்ளனர். ஆனால், விஜய் தவறான மனிதர்களைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு, சரியான செயல்களைச் செய்ய முடியாது. அவர் இந்த அரசியல் சூழலில் பலியாகிவிடுவாரோ என்று நான் அஞ்சுகிறேன்” என்றார்.
மேலும், அதிமுகவினரின் ஆதரவு குறித்துப் பேசிய அவர், “சி.வி.சண்முகம் வீட்டிற்கு விஜய் சென்றதும், அங்கிருந்தவர்களுக்குப் பொன்னாடை போர்த்தியதும் மக்களிடையே தவறான பிம்பத்தை ஏற்படுத்தியுள்ளது. தவெக அரசுக்கு ஆதரவளிக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பலர் மீது ஊழல் வழக்குகள் உள்ளன. அவர்கள் ஆட்சியில் பங்கெடுக்க நினைப்பது விஜய்யின் தூய்மையான அரசியல் நோக்கத்தையே கெடுத்துவிடும். குறிப்பாக, லீமா ரோஸ் அமைச்சராகப் போவதாகக் கூறப்படும் தகவல் கவலையளிக்கிறது; லாட்டரி குடும்பம் தமிழக அரசியலைக் கவ்விக்கொள்ள விஜய் இடம் கொடுக்கக் கூடாது. வெளியில் இருக்கும் திமுக கூட்டணிக் கட்சிகளால் ஆபத்து இல்லை, ஆனால் உள்ளே வரத் துடிக்கும் ஊழல்வாதிகளால் தான் தவெக அரசுக்கு ஆபத்து” எனத் தெரிவித்தார்.
#PazhaKaruppiah #VijayAsCM #TVK_Government #BreakingNews #May16 #TamilNaduPolitics #CorruptionFreeTN #ADMK_Support #PoliticalWarning #ThalapathyVijay #NewGovernmentTN #CVShanmugam #SPVelumani #LotteryFamily #CleanPolitics #PoliticalAnalyst #TamilNews #VijayMakkalIyakkam #SaveDemocracy #CM_Vijay_Official_“`