சென்னை:
தவெக எம்.எல்.ஏ.க்களிடம் ரூ.35 கோடி வரை பேரம் பேசி, விஜய் தலைமையிலான ஆட்சியை கவிழ்க்கத் திட்டமிட்டதாக தி.மு.க. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் மீது புகார் எழுந்துள்ளது. ஊத்தங்கரை தவெக எம்.எல்.ஏ. இளையராஜா கொடுத்த புகாரின் அடிப்படையில், சென்னை காவல்துறை தீவிர விசாரணை நடத்தி 4 பேரை கைது செய்துள்ளது. திருநாவுக்கரசு, நரேஷ், தியாகராஜன் மற்றும் கார்த்திக் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான அலுவலகப் பணியாளர்களும் விசாரணை வளையத்திற்குள் வந்துள்ளனர்.
புகார் மனுவில், சபாநாயகருக்கு எதிராகத் தீர்மானம் கொண்டு வரத் தவெக எம்.எல்.ஏ.க்களின் ஆதரவைக் கோரியதாகவும், அதற்குப் பிரதிபலனாக ரூ.35 கோடி தருவதாகப் பேரம் பேசியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தச் சதித் திட்டத்தை அசோக் குமார் நேரடி மேற்பார்வையில் நடத்தியதாகக் காவல்துறை அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இளையராஜா மட்டுமின்றி, மேலும் பல எம்.எல்.ஏ.க்களிடம் பேரம் பேசப்பட்டதும் தெரிய வந்துள்ளது. முதல்வர் விஜய்யின் ஆட்சியை கவிழ்க்க நடந்த இந்த குதிரை பேர முயற்சி, தமிழக அரசியலில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
#SenthilBalaji #TvkGovernment #HorseTrading #TamilNadu #TamilNews #BMNews #PoliticalUpdate #BreakingNewsTN #Corruption #Politics2026 #PoliticalConspiracy #TamilNaduPolitics #CriminalInvestigation #TamilNaduNews #PoliticalAttack #PositiveGovernance #AssemblyDebate #VijayGovernment #Debate #TNPolitics #PoliticalNews #AdministrativeReform #GovernmentAccountability #PoliticalConduct #PublicRepresentation #Justice #PoliticalClash