விஜய்யின் வருகை திமுக கூட்டணியை தான் பாதிக்கும்

பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தவெக தலைவர் விஜய் குறித்து பேசியிருக்கிறார். தவெக விஜய் திருமாவளவன் வாக்குகளை தான் பிரிப்பார் என அடித்து கூறியிருக்கின்றார் எச்.ராஜா. மேலும் விஜய்யின் வருகை திமுகவிற்கு ஆபத்து எனவும் பேசினார்

இந்த தேர்தலில் தவெக என்ற புதிய கட்சி களமிறங்கவுள்ளது. எனவே விஜய்யின் தலைமையிலான தவெக கட்சியின் வருகை யாருக்கு பாதிப்பை கொடுக்கும். திமுகவின் வாக்குகளை பிரிக்குமா ? அல்லது அதிமுக வாக்குகளை பிரிக்குமா ? எந்த கூட்டணிக்கு தவெக தலைவலியாக அமையும் என்ற விவாதங்கள் போய்க்கொண்டு இருக்கின்றன. தவெகவினர் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றிபெற்று ஆட்சியை பிடிப்போம் என நம்பிக்கையாக கூறி வருகின்றனர்.

அப்படி ஆட்சியை பிடிக்கவில்லை என்றாலும் தவெக திமுகவிற்கும் அதிமுகவிற்கும் கடும் போட்டியாக அமையும் என்பதே கணிப்புகளாக இருந்து வருகின்றது. தொடர்ந்து திமுகவினர் தவெக கட்சியால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றே சொல்கின்றனர். அதைப்போல அதிமுகவினர் எங்களுக்கும் திமுகவிற்கும் தான் போட்டி என்கின்றனர்.

இருந்தாலும் தவெக திமுகவின் வாக்குகளை தான் பிரிப்பார்கள் என அதிமுக கூட்டணியில் இருக்கும் டிடிவி தினகரன் உட்பட சிலர் கூறி வருகின்றனர். அதே கருத்தை தான் பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்து இருக்கின்றார். அதாவது தவெக என்ற கட்சியால் திமுகவிற்கு தான் பாதிப்பு. விஜய் திமுக கூட்டணியின் வாக்குகளை தான் பிரிப்பார். மிக குறிப்பாக திருமாவளவன் கட்சி வாக்குகளை தான் விஜய் பிரிப்பார் என கூறியிருக்கின்றார்.

அதோடு மட்டுமல்லாமல் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய்யால் எந்த ஒரு பாதிப்பும் இல்லை. அதே சமயம் விஜய்யின் வருகை முழுக்க முழுக்க திமுகவிற்கு தான் ஆபத்தாக அமையவுள்ளது என குறிப்பிட்டு பேசியிருக்கிறார் எச்.ராஜா. ஆனால் எதன் அடிப்படையில் விஜய் திருமாவளவனின் வாக்குகளை பிரிப்பார் என எச்.ராஜா விளக்கம் கொடுக்கவில்லை. திமுக வாக்குகளை பிரிப்பார் என்று இல்லாமல் குறிப்பாக திருமாவளவனின் வாக்குகளை விஜய் பிரிப்பார் என ஹெச்.ராஜா கூறியதற்கு என்ன காரணம் என மக்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.

இருப்பினும் திருமாவளவன்என்பவருக்கு மிகப்பெரிய செல்வாக்கு உள்ளது. விடுதலை சிறுத்தை கட்சி மக்களின் வரவேற்பை பெற்ற கட்சியாகும். அப்படிப்பட்ட ஒரு கட்சிக்கு திமுக கூட்டணியில் குறைவான தொகுதிகள் தான் வழங்கப்பட்டு இருப்பதாக விமர்சனங்கள் எழுகின்றன. எதிர்க்கட்சியான அதிமுகவினரே திருமாவளவனின் பலம் குறித்து பேசி வருகின்றனர். அவருக்கு இன்னும் கூடுதல் தொகுதிகள் கொடுக்கப்பட்டு இருக்க வேண்டும் என்கின்றனர்.

அப்படி இருக்கையில் விஜய் திருமாவளவனின் வாக்குகளை குறிப்பாக பிரிப்பார் என்ற கருத்தில் பலருக்கு உடன்பாடு இல்லாதது போல தான் தெரிகின்றது. ஒட்டுமொத்தமாக விஜய்யால் திமுகமற்றும் அதிமுக என இரு கூட்டணியின் வாக்குகளும் சிதறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இரு கூட்டணிக்கும் தவெக கடும் போட்டியாக நிலவும் என்றே எதிர்ப்பார்க்கப்படுகின்றது. பலரது கணிப்பாகவும் உள்ளது.

BTF_1

இலங்கையின் தந்திரத்துக்கு சர்வதேச சமூகம் பலியாகக்கூடாது – பிரித்தானிய தமிழர் பேரவை

April 16, 2026

இலங்கையில் இழைக்கப்பட்ட பாரதூரமான குற்றங்களுக்கு உள்நாட்டு நீதிப்பொறிமுறை மூலம் தீர்வு காண முடியாது என்றும், சர்வதேச சமூகம் இதில் விழிப்புடன்

che

மன்னாரில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தினை கண்டித்துப் போராட்டம்!

April 16, 2026

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மன்னார் கிளையின் நிர்வாக சீர்கேடு குறித்து மன்னார் கிளையுடன் இணைந்து பணியாற்றும் தன்னார்வ பணியாளர்கள் நேற்றுக்(15)

ehe

வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து: 10 பேர் காயம்

April 16, 2026

எஹெலியகொடை நகரில் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று ஏனைய வாகனங்களுடன் மோதியதில் பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது. நேற்று(15) இரவு

t

இலங்கை தமிழரசுக்கட்சியின் மக்கள் தொடர்பாடல் அலுவலகம் திறப்பு!

April 16, 2026

இலங்கை தமிழரசுக்கட்சியின் மக்கள் தொடர்பாடல் அலுவலகம் யாழ்ப்பாணம், உடுவில் பகுதியில் திறந்து வைக்கப்பட்டது. குறித்த அலுவலகத்தினை இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர்

ss

மோசடிகளுக்காக இலங்கை வந்த 9 சீனர்கள் கட்டுநாயக்கவில் கைது?

April 16, 2026

கணினி வழி நிதி மோசடிகளைச் முன்னெடுப்பதற்காக இலங்கைக்கு வருகை தந்த 9 சீனர்கள் இன்று (16) அதிகாலை கட்டுநாயக்க விமான

death

வயிற்றுவலியுடன் வாந்தி; சிறுமி உயிரிழப்பு – யாழில் சம்பவம்

April 16, 2026

யாழ்ப்பாணத்தில் வாந்தி எடுத்த சிறுமி ஒருவர் இன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எட்டு வயதுடைய முகமது ஜிஹாட் பவிஹா

tur

துருக்கிப் பாடசாலை ஒன்றில் துப்பாக்கிச் சூடு: 9 பேர் பலி

April 16, 2026

தெற்கு துருக்கியில் உள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. பாடசாலை

ar

அமெரிக்காவின் செய்தியுடன் ஈரான் சென்றார் பாகிஸ்தான் பீல்ட் மார்ஷல் : ஈரான் அரசு ஊடகம் தகவல்

April 15, 2026

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே ஒரு முக்கிய மத்தியஸ்தராக உருவெடுத்துள்ள பாகிஸ்தானின் பீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் (Asim Munir), உயர்மட்டக்

ssds

கனடா ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய வாய்ப்பு?

April 15, 2026

பின்லாந்து அதிபர் அலெக்சாண்டர் ஸ்டப் (Alexander Stubb), கனடா பிரதமர் மார்க் கார்னியுடனான (Mark Carney) தனது முதல் அதிகாரப்பூர்வ

str

நெடுந்தீவு மக்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகளை முன்னிறுத்தி கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு

April 15, 2026

நெடுந்தீவு மக்கள் நீண்டகாலமாக எதிர்கொண்டு வரும் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்க்கக் கோரி ‘நெடுந்தீவு கவனயீர்ப்பு போராட்ட ஏற்பாட்டுக் குழு’ போராட்டத்திற்கான

ssss

யாழ்ப்பாணத்தின் 800 ஆண்டுகால வரலாற்றை விளக்கும் புதிய நூல் வெளியீடு

April 15, 2026

பிரபல வரலாற்றுப் பேராசிரியர் எஸ்.பத்மநாதன் எழுதிய “Glimpses of an Ancient Civilization, Society and Culture in Jaffna

dea

விசேட அதிரடிப்படையின் ஜீப் மோதி முதியவர் பலி: சாரதி கைது

April 15, 2026

மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கன்னங்குடா, புதுமண்டபத்தடி பகுதியைச் சேர்ந்த