லெபனான் முழுவதும் இஸ்ரேலிய இராணுவம் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்கள் காரணமாக அந்நாட்டின் மனிதாபிமான நிலைமை பாரிய சரிவைச் சந்தித்துள்ளது.
லெபனான் அரசாங்கத்தின் அனர்த்த மேலாண்மைப் பிரிவின் தகவல்படி, இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை நேற்று இருமடங்காக அதிகரித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அத்தோடு, கடந்த 48 மணிநேரத்திற்குள் 58,000 ற்கும் அதிகமான பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களைத் தேடித் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளனர்.
மேலும், நாடு முழுவதும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் இதுவரை 50 ற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.